Home » கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு திருஉருவப்படத்திற்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு திருஉருவப்படத்திற்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பழையப்பேட்டையில்முன்னால் பாரத பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தினை முன்னிட்டு அமரர் ராஜீவ் காந்தியின் திரு உருவப்படத்திற்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.கிருஷ்ணகிரி நகர காங்கிரஸ்கட்சி சார்பில் இந்தியவில் புகழ்பெற்ற அரசியல் கட்சியின் குடும்பத்தில் பிறந்து உலக நாடுகளுக்கு இணையாக இந்தியாவினை உருவாக்கிய அமரர் ராஜீவ் காந்தியின் 32-ம் ஆண்டு நினைவுதினம் கடைப்பிடிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி பழையப்பேட்டை ஆட்டோ ஸ்டாண்டில் நடைப்பெற்ற ராஜீவ் காந்தியின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் முபாரக் தலைமை வகித்தார்.இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியின்போது கடந்த 1991ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பத்தூரில் நடைப்பெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தின்போது விடுதலைப்புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் நமது பாரத பிரதமர் ராஜுவ் காந்தி உள்பட 14 பேர் உடல் சிதறி இறந்தனர். இவர்களின் ஆத்மா சாந்தியடையும் வகையில் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அமரர் ராஜீவ் காந்தியின் திரு உருப்படத்திற்கு மாவட்டத் துணைத்தலைவர்சேகர் முன்னால் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, SCst பரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, முன்னால் நகர தலைவர்கள் வின்செண்ட், ரமேஷ்,மாவட்ட பொது செயலாளர் பாண்டுரங்கன், வழக்கறிஞர் ஆசாத் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டு அமரர் ராஜீவ் காந்திக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி பயங்கரவாத எதிப்பு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்”மேலும் இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட செயலாளர் சையத் முனீர், ஆட்டோ மைக்கல்ராஜ், ஹரி, ஜான்பாஷா,மாவட்டபொது செயலாளர் கமால்கான், நகர துணைத்தலைவர் துரைசாமி, மற்றும் செய்யதுஅகமது,பாட்ஷா,தளபதி முரளி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.இதேபோல மத்தார், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை,பர்கூர், ஓசூர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அமரர் ராஜீவ் காந்தியின் திருஉருவச்சிலைகளுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

You may also like

Add Comment
error: Content is protected !!