Home » கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின்  50-ம் ஆண்டு தேர்த் திருவிழா! அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவனி நடைபெற்றது..

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின்  50-ம் ஆண்டு தேர்த் திருவிழா! அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவனி நடைபெற்றது..

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின்  50-ம் ஆண்டு தேர்த்திருவிழாவின் போது அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவனி நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின்  50-வது வருட திருத்தல தேர்திருவிழா மே 13 கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் ஆலயத்தில் பங்கு தந்தையர்கள் தலைமையில் / திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நிகழ்த்தப்பட்டது.. அதனைத்தொடர்ந்து மாலை நேரங்களில் தேவாலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெற்று வந்தது..தேர்த்திருவிழாவின் கடைசி நாளான நேற்று காலை 8-00 மணிக்கு தருமபுரி மறை மாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருபலி நடைபெற்றது.. மாலை 7-00 மணியளவில் வண்ண, வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேர் அருட்திரு. N.S.இருதயம் அவர்களால் மந்தரிக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர் வலம் வந்தது..இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக திருத்தேரின் மீது உப்பு, மிளகு மற்றும் மலர்களை தூவி  நேர்த்திக்கடன் செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியினையொட்டி தேவாலயம் வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது..

You may also like

Add Comment
error: Content is protected !!