Home » ஓசூர் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் அரசு மேநிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவி ரியாஸ்ரீ 470 மதிப்பெண்கள் பெற்று சாதனை! அவரது மேற்படிப்பிற்கு தானே அனைத்து உதவிகளையும் செய்வதாக ஒய்.பிரகாஷ் MLA உறுதி

ஓசூர் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் அரசு மேநிலைப்பள்ளி 10 ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவி ரியாஸ்ரீ 470 மதிப்பெண்கள் பெற்று சாதனை! அவரது மேற்படிப்பிற்கு தானே அனைத்து உதவிகளையும் செய்வதாக ஒய்.பிரகாஷ் MLA உறுதி

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்றத் தொகுதி ஓசூர் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயின்ற மாற்றுத்திறனாளி மாணவி ரியாஸ்ரீ 470 மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் அவரது வீட்டிற்கு சென்று அந்த மாணவியை பாராட்டி, மேற்கொண்டு பள்ளிப்படிப்பை மேற்கொள்ள அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று மாவட்ட செயலாளர் ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ்MLA கூறினார். அதேபோல் அந்த மாணவி பொலிட்டிக்கல் சயின்ஸ் படிக்க விரும்பும் உள்ளதால் எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்று கனவில் உள்ளார் அந்த மாணவி தன் பயின்றுள்ள பள்ளியில் இந்த படிப்பை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மாண்புமிகு முதல்வர், மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் எடுத்துக் கூறி எதிர்காலத்தில் இந்த பாட பிரிவை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதேபோல் இந்தப் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்ளதால் தனியாக அவர்களுக்கு என்று பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.உடன் ஊராட்சி மன்ற தலைவர் வீரபத்திரப்பா, கழக தோழர்கள் ஜோஸ்வா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உடனிருந்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!