Home » தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் 2ம் நாள் ஜமாபந்தி கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் நஜீரி இக்பால் தலைமையில் நடைப்பெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் 2ம் நாள் ஜமாபந்தி கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் நஜீரி இக்பால் தலைமையில் நடைப்பெற்றது.

by Poovizhi R
0 comment

பாலக்கோடு வருவாய் கோட்டத்தில் நில அளவீடு சங்கிலிகளை பார்வையிட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நஜீரி இக்பால்தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் 2ம் நாள் ஜமாபந்தி கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் நஜீரி இக்பால் தலைமையில் இன்று நடைப்பெற்றது.இதில் பாலக்கோடு வருவாய் கோட்டத்திற்க்குட்பட்ட எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சிக்கார்தன அள்ளி, பி.செட்டி அள்ளி, கரகதஅள்ளி உள்ளிட்ட 15 கிராமங்களுக்கான பசலி1432க்கான தீர்வாயத்தில் வரவு – செலவு கணக்குகள், பட்டா, சிட்டா மாறுதல், முதியோர் உதவிதொகை உள்ளிட்ட 50 மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் நஜீரிஇக்பால் அவர்களிடம் வழங்கினார்கள், மேலும் பொதுமக்களிடம் ஆன்லைன் வழியாக பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணவும், வேளாண் துறையில் விவசாயிகளுக்கு தேவையான சொட்டு நீர் பாசனம், வேளாண் இடுபொருட்கள் முழுமையாக சென்றடைந்தனவா என கோப்புகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த முகாமில் தாசில்தார் ராஜா, வட்டவழங்கல் அலுவலர் பழனி, வருவாய் அலுவலர் ரவி, வி.ஏ.ஓக்கள் சாம்ராஜ், சத்யா, மாதப்பன், மாதேஷ், குமரன் சர்வேயர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!