Home » கிருஷ்ணகிரியில் 11-ஆண்டுகளுக்கு பிறகு 32 கிராம மக்கள் இணைந்து நடத்திய மண்டு மாரியம்மன் திருவிழாவி!! ஆயிரக்கணக்கான மக்கள் மாவிளக்குகள் அம்மன் கரகத்துடன் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர்.

கிருஷ்ணகிரியில் 11-ஆண்டுகளுக்கு பிறகு 32 கிராம மக்கள் இணைந்து நடத்திய மண்டு மாரியம்மன் திருவிழாவி!! ஆயிரக்கணக்கான மக்கள் மாவிளக்குகள் அம்மன் கரகத்துடன் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி அருகே கடந்த 11-ஆண்டுகளுக்கு பிறகு 32 கிராம மக்கள் இணைந்து நடத்திய மண்டு மாரியம்மன் திருவிழாவில் உலக மக்கள் நலம்பெற வேண்டி நடைப்பெற்ற இந்தப் பாரம்பரிய திருவிழாவில்ஆயிரக்கணக்கான கிராம மக்கள் மாவிளக்குகளுடன், அம்மன் கரகத்துடன் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர்.கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட பெத்ததாளப்பள்ளியில் அமைந்துள்ள மண்டு மாரியம்மன் திருக்கோவில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறைதின்னகழனி, பனம்தோப்பு, காமராஜர் நகர், தாளப் பள்ளி, துரிச்சிப்பட்டி, கல்லகுறி, புதூர், கட்டி காணப்பள்ளி, வடுக்கம்பட்டி உள்ளிட்ட 32 கிராம மக்கள் இணைந்து மண்டு மாரியம்மன் திருவிழா நடத்துவது வழக்கம்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா காலகட்டத்தினால் திருவிழா நடத்த முடியாமல் போனதால் 11 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய அளவிலான மண்டு மாரியம்மன் திருவிழா கடந்த மூண்று நாள்களாக நடைப்பெற்று வந்தது.இந்த விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் கரகத்துடனும், கிராம தெய்வங்களை புஸ்ப பல்லாக்கில் எழுந்தருளிய நிலையில் ஊர்வலமாக எடுத்து வந்ததனர், 32 கிராமங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான மாவிளக்குகளுடன் தங்களுடைய கிரம தெய்வங்கள மற்றும் அம்மன் சரகத்துடன் மேளத்தாளத்துடன் கலந்துக்கொண்டு மண்டு மாரியம்மனை பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.கடந்த 11-ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்இந்த திருவிழாவில் 32 கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு உலக மக்கள் யாவரும் நலமுடைவாளவும், மழை பெய்து விவசாயம் செழித்து மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழவேண்டி சிறப்பு புஜைகளும் நடத்தப்பட்டது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி அம்சவள்ளி மற்றும் 32 கிராம ஊர் கவுண்டர்களும் சிறப்பாக செய்து இருந்தனர்கள்..

You may also like

Add Comment
error: Content is protected !!