பத்து ரூபாய் இயக்கம் சார்பில் கள ஆய்வு. கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் சார்பில் போச்சம்பள்ளி ஒன்றியம் துணை ஒருங்கிணைப்பாளர் ஜி. கார்த்திகேயன் அவர்கள் மூலம் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005 ன் கீழ் கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் பொறுப்பாளர்கள் முன்னிலையில் அரசம்பட்டி கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கள ஆய்வு செய்யப்பட்டது. இந்த கள ஆய்வின்போது பல ஆவணங்களின் நகல்களை இலவசமாக பெற்று வந்தோம். மேலும் பல ஆவணங்களில் முறைக்கேடுகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பத்து ரூபாய் இயக்கம் சார்பில் புகார் மனு கொடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் பொறுப்பாளர்கள் முன்னிலையில் அரசம்பட்டி கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கள ஆய்வு செய்யப்பட்டது.
Add Comment