Home » கிருஷ்ணகிரி அருகே வரட்டனப்பள்ளியில் பொதுமக்கள் சுடுகாட்டு வழி பிரச்சினை முன்னிட்டு சாலையில் அமர்ந்து தர்ணாப் பேராட்டம்

கிருஷ்ணகிரி அருகே வரட்டனப்பள்ளியில் பொதுமக்கள் சுடுகாட்டு வழி பிரச்சினை முன்னிட்டு சாலையில் அமர்ந்து தர்ணாப் பேராட்டம்

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி அருகே வரட்டனப்பள்ளியில் பொதுமக்கள் காலம் காலமாக சுடுகாட்டுக்கு பயன்படுத்தி வந்த பொதுவழிப் பாதையை ஊராட்சி மன்றத் தலைவர் முள்வேலி கொண்டு அடைக்க கல்தூண்கள் நடப்பட்டதால் கிராம மக்கள் சாலையில் அமர்ந்து தர்ணாப் பேராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.கிருஷ்ணகிரி அருகே உள்ள வரட்டனப்பள்ளி பகுதியை சேர்ந்தபொதுமக்களுக்கு சொந்தமான சுடுகாடுபனம்போப்பு என்ற இடத்தில் உள்ளது.இந்த சுடுகாட்டிற்கு செல்ல அப்பகுதியை சேர்ந்த மக்கள் இந்தப்பொதுவழிப்பாதையை பயன்படுத்தி வந்துள்ளனர்.இந்த நிலையில் பொதுமக்கள் கடந்த பல தலைமுறையாக பயன்படுத்தி வந்தபொதுவழிப்பாதையை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி மகாலட்சுமி என்பவர் தனக்கு சொந்தமான நிலம் இதனை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன் என பொது வழிப்பாதையில் கம்பி வேலிகளை இரவோடு இரவாக அமைத்துள்ளதை கண்ட அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பெண்களும் ,ஆண்களும், ஒன்றுசேர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள் இடத்தில் தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறித்த காவல்துறையினர் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி மகாலட்சுமி மற்றும் கிராம மக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டனர்.அப்போது காலம் காலமாக அனைத்து மக்களும் பங்களிப்புடன் சென்று வரும் பொதுவழிப்பாதையை முள் வேலி கொண்டு அடைத்துள்ளதை அகற்ற வேண்டும் என காவல்துறையினர் ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேட்டுக்கொண்டனர்.பின்னர் இதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி மகாலட்சுமி ஒப்புக்கொண்டதால் காவல்துறையினர் முன்னிலையில்முள் வேலிகள் அகற்றப்பட்டது.

You may also like

Add Comment
error: Content is protected !!