Home » ஊத்தங்கரையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக ரூ.7.13 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் தகே.எம்.சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

ஊத்தங்கரையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக ரூ.7.13 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் தகே.எம்.சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

by Poovizhi R
0 comment

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக ரூ.7 கோடியே 13 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டவெங்கடதாம்பட்டி, ஊத்தங்கரை பேரூராட்சி, சிங்காரப்பேட்டை, மிட்டப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் ஊரசு வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பாக ரூ.7 கோடியே 13 இலட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வெங்கடாதாம்பட்டி ஊராட்சியில், பாரத பிரதமர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் (2021-2022) ஊத்தங்கரை முதல் பெருமாள்குப்பம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.2 கோடியே 79 இலட்சத்து 66 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, அச்சாலையின் குறுக்கே 6 கல்வெட்டுகள் அமைக்கும் பணிகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், தனிநபர் நிலத்தில் ரூ.2 இலட்சம் மதிப்பில் மணவரப்பு அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, ஊத்தங்கரை பேரூராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2022-2023) ரூ.44 இலட்சம் மதிப்பில் 3 வகுப்பறைகள் கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டு, கட்டுமான பணிகளுக்கு தேவையான செங்கல், கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்.பாம்பாறு அணை வளாகத்தில் உள்ள இலங்கை வாழ் தமிழர் குடியிருப்பு வளாகத்தில் இலங்கை வாழ் தமிழர்களுக்காக ரூ.1 கோடியே 87 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் 37 வீடுகளின் கட்டுமான பணிகளையும், இக்குடியிருப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.63 இலட்சம் மதிப்பில் கூடுதல் வசதிகளாக தெரு விளக்கு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், இதர அடிப்படை வசதிகளுக்காக ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.23 இலட்சம் மதிப்பில் கூடுதல் கட்டுமான பணிகள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணிகளை பார்வையிட்டார்.அதனைத்தொடர்ந்து, மிட்டப்பள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் (2021-2022) 95 மீட்டர் நீளத்திற்கு ரூ.8 இலட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், மழைநீரை சேகரிக்கும் பொருட்டு அமட்டன்குட்டையில் ரூ.8 இலட்சத்து 21 ஆயிரம் மதிப்பில் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மழைக்காலத்திற்கு முன்பாக குட்டை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும், சிங்காரப்பேட்டை ஊராட்சி, ஆவாரங்குட்டையில் மலைவாழ் மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தலா ரூ.3 இலட்சம் வீதம் 16 இருளர் இன மக்களுக்கு ரூ.48 இலட்சம் மதிப்பில் வீடுகள் கட்டுமான பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 இலட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கள்வாடி மைய கட்டிட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தொடர்ந்து, நார்சாம்பட்டி ஊராட்சியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்திற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7 இலட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் சமயலறை கட்டிட கட்டுமான பணிகளையும், சிங்காரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2022-2023) ரூ.30 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் கூடுதலாக இரண்டு வகுப்பறை கட்டிடங்களின் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளிகள் துவங்க உள்ள நிலையில் மாணவர்களின் வசதிக்காக கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்.ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாக முடித்திட வேண்டும். பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கும் பணிகளை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்,முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தை ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும், மேற்கொண்டு செயல்படுத்தப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு பணிகள் குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய குழு தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வுகளின்போது, ஒன்றிய குழு தலைவர் திருமதி.உஷா குமரேசன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் திரு.ரஜினிசெல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வேடியப்பன், திரு.சிவபிரகாசம், ஒன்றிய பொறியாளர் திரு.மாதையன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் திரு.இலட்சுமணன், திரு.மகாராஜா, திரு.முருகன், திரு.கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமதி.சத்யவாணி ராஜா (கொண்டம்பட்டி), திருமதி.சின்னதாயி (மிட்டப்பள்ளி) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!