Home » கிருஷ்ணகிரி அருகே வெள்ளிமலை மீது அமைந்து இருக்கும் ஸ்ரீவள்ளிதெய்வானை ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது

கிருஷ்ணகிரி அருகே வெள்ளிமலை மீது அமைந்து இருக்கும் ஸ்ரீவள்ளிதெய்வானை ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி அருகே வெள்ளிமலை மீது அமைந்து இருக்கும் அருள்மிகு ஸ்ரீவள்ளிதெய்வானை ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்ச்சியாக நடைப்பெற்றது, இதில திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டுவழிப்பட்டனர்.கிருஷ்ணகிரி அருகே உள்ள பெரியமோட்டூர் வெள்ளிமலைமீது அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீவள்ளிதெய்வானை ஸ்ரீ முருகப்பெருமான் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்ச்சியாக நடைப்பெற்றது.இந்த திருக்கோவில் மகா கும்பாபிஷேக உற்சவம் நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் துவங்கி நடைபெற்றது. இதில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து ஹோமம், பூரணாதி ஹோமம்உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடந்தேறியது. இதன் முக்கிய நிகழ்வான கோவில் கோபுரத்திற்கான மகா கும்பாபிஷேகம் திருக்கோவிலில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட யாகசாலையில் புனித நதிகளின் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கொண்ட கலசங்களை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் அந்த புனித நீர் அடங்கிய கலசத்தை தலையில் சுமந்தவாறு திருக்கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து புனித நீர் கொண்ட கலசங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் சுமந்து வந்த கலசங்களில் இருந்து புனித நீரை கோபுரத்தின் கலசத்தின் மீது ஊற்றி மஹாகும்பாபிஷேக வைபவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அலங்கார தீபாதரனைகளும் நடைப்பெற்றது,இந்த கும்பாபிஷேக விழாவில் கிருஷ்ணகிரி, பெரியமோட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு ஸ்ரீ முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிப்பட்டனர்.இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியமோட்டூர் வெள்ளிமலை ஸ்ரீ முருகர்ஆலய அறக்கட்டளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்கவுண்டர்கள், ஊர்மக்கள் சிறப்பாக செய்து இருந்தனர்கள்,

You may also like

Add Comment
error: Content is protected !!