Home » புதியதாக பணி நியமனம் பெற்ற நிலஅளவர் மற்றும் வரைவாளர்களுக்கு நில அளவீடு மேற்கொள்ளும் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.

புதியதாக பணி நியமனம் பெற்ற நிலஅளவர் மற்றும் வரைவாளர்களுக்கு நில அளவீடு மேற்கொள்ளும் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.

by Poovizhi R
0 comment

புதியதாக பணி நியமனம் பெற்ற நிலஅளவர் மற்றும் வரைவாளர்களுக்கு நில அளவீடு மேற்கொள்ளும் பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் துவக்கி வைத்தார்.கிருஷ்ணகிரி வட்டம், பையனப்பள்ளி ஊராட்சியில், நில அளவை மற்றும் நிலவரித் திட்டத்துறை சார்பாக புதியதாக பணிநியமனம் பெற்ற நிலஅளவர் மற்றும் வரைவாளர்களுக்கு லிங் செயின் மற்றும் டிஜிட்டல் க்ளோபல் பொசிசன் சிஸ்டம் மூலம் நிலஅளவீடு செய்வது குறித்த பயிற்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று (26.05.2023) துவக்கி வைத்து பார்வையிட்டார்.மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்ததாவது:வருவாய்த்துறை நிருவாக அமைப்புக்கு முதுகெலும்பாக விளங்குவதோடு, சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அரசின் பல்வேறு சமூகப் பொருளாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. மழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் துயர் துடைக்கும் துறையாகவும் இத்துறை விளங்கி வருகிறது. இத்துறையின் பணியினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல், துறை அலுவலர்களுக்கு குடியிருப்புகள் கட்டுதல், புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் இயங்கும் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறையில் காலியாக உள்ள நிலஅளவர் மற்றும் வரைவாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.05.2023 அன்று வழங்கினார். இப்பணி நியமனம் மூலமாக பல்வேறு ஆண்டுகளாக பட்டா வழங்கப்படுவதில் இருந்து வந்த சிரமங்களை நீக்குவதற்கும், நிலம் மற்றும் நில அளவை சார்ந்த அனைத்து சேவைகளையும் உடனடியாக வழங்குவதற்கு உதவிகரமாக இருக்கும்.கிருஷ்ணகிரி காவல் ஆயுதப்படை கூட்டரங்கில், புதியதாக பணிநியமனம் பெற்ற கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த நில அளவர்கள் மற்றும் வரைவாளர்கள் என மொத்தம் 70 நபர்களுக்கு 30 நாட்கள் பயிற்சியை 22.05.2023 அன்று துவக்கப்பட்டது.இப்பயிற்சியில் நில அளவை எப்படி மேற்கொள்வது, நில வரைபடம் தயார் செய்வது, லிங்க் செயின் மற்றும் டிஜிட்டல் க்ளோபல் பொசிசன் சிஸ்டம் மூலம் நிலஅளவீடு செய்வது, புலன் எல்லை நிர்ணயம் செய்தல், தனி உட்பிரிவு அளவீடு செய்யும் பணிகள், புலம் முச்சந்தியில் கற்கள் நடும் பணிகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இப்பயிற்சியில் கலந்து கொண்ட நில அளவர்கள் மற்றும் வரைவாளர்கள் நல்ல முறையில் பயிற்சி பெற்று சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் என ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (நிலஅளவை) திரு.சி.சேகரன், கோட்ட ஆய்வாளர்கள் திரு.எம்.கிருஷ்ணமூர்த்தி, திரு.ராமசந்திரன், அலுவலக மேலாளர் திரு. சரவணன், பயிற்சியாளர்கள் திரு.ஜெயகுமார், திரு.சிவகுமார் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!