Home » தளி வட்டாரத்தில் அட்மா திட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களை தரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் பற்றி ஒரு நாள் பயிற்சி

தளி வட்டாரத்தில் அட்மா திட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களை தரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் பற்றி ஒரு நாள் பயிற்சி

by Admin
0 comment

தளி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கொரனூர் கிராமத்தில் தோட்டக்கலைப் பயிர்களை தரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல் பற்றி விவசாயிகளுக்கு உள் மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டது. இப்பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் தளி, தோட்டக்கலை உதவி இயக்குநர் அவர்கள் தோட்டக்கலை பயிர்களான காய்கறிகள் தக்காளி மற்றும் பீன்ஸ் மற்றும் மலர்ப் பயிர்களை தரப்படுத்தி சந்தைப்படுத்தும் அணுகுமுறைகள், தொழில்நுட்ப முறைகள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். உதவி தோட்டக்கலை அலுவலர், தளி பார்த்திபன் அவர்கள் தோட்டக்கலைத்துறையில் உள்ள மானியத் திட்டங்கள் பற்றி கூறினார். உதவி வேளாண்மை அலுவலர் அரிகுமார் அவர்கள் மானாவாரி விவசாய திட்டத்தின் முக்கியத்துவம் மானியத் திட்டங்கள் பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆ.‌ஷிநாத் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நன்றி கூறினார். மேலும் இப்பயிற்சியிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ர.சிந்தனா செய்திருந்தார்.

You may also like

Add Comment
error: Content is protected !!