Home » கிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு சீதாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு நாள்தோறும் 10 டன் விற்பனை

கிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு சீதாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு நாள்தோறும் 10 டன் விற்பனை

by Admin
0 comment

கிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு சீதாப்பழம் விளைச்சல் அதிகரிப்பு நாள்தோறும் 10 டன் விற்பனை – கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக ஏற்றுமதி பாதிப்பால் விலை குறைவு என விவசாயிகள் கவலைகிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜெகதேவி தொகரப்பள்ளி அஞ்சூர் கொண்டப்பநாயக்கனூர் மல்லப்பாடி குருவிநாயனப்பள்ளி காளிக்கோவில் நாகமங்கலம் போன்ற இடங்களில் விவசாயிகள் அதிக அளவில் சீதாப்பழம் சாகுபடி செய்கின்றனர் ஆண்டுக்கு ஒரு முறை மகசூல் தரும் சீத்தாப்பழம் அறுவடை செய்யப்பட்டு பர்கூரில் உள்ள மொத்த வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்கின்றனர் வியாபாரிகள் அதனை வாங்கி 24 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் கிரேடு கூடையில் அடுக்கி விற்பனை செய்கின்றனர். கர்நாடக ஆந்திரா கேரளா மற்றும் தமிழகத்தில் சென்னை கோவை மதுரை திருச்சி கடலூர் சேலம் போன்ற இடங்களில் இருந்து வரும் வியாபாரிகள் நேரடியாக வந்து சீதாப்பழங்களை வாங்கி செல்கின்றனர். இந்தாண்டு எதிர்பார்த்தை விட சீதாப்பழம் விளைச்சல் அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் ஆனால் கொரோனா பரவல் காரணமாக கேரளா மாநிலத்தில் கட்டுப்பாடுகள் அடுத்து அங்கிருந்து வியாபாரிகள் யாரும் வராத காரணத்தால் உரிய விலை கிடைக்கவில்லை என கவலை உடன் விவசாயிகள் கூறுகின்றனர். கடந்தாண்டு சீதாப்பழம் விளைச்சல் குறைந்த நிலையில் இதே கொரோனா காலம் என்பதாலும் ஒரு கிரேடு சீதாப்பழம் ரூபாய் 150 முதல் 170 வரையில் விற்பனை ஆனாது. இந்தாண்டு விளைச்சல் அதிகரிப்பு இருந்தும் கொரோனா தொற்று குறைவாக உள்ள நிலையில் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பாத்த நிலையில் 24 கிலோ கொண்ட ஒரு கிரேடு சீதாப்பழம் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்க்கு முக்கிய காரணம் கேரளா வியாபாரிகள் வராதது தான் என விவசாயிகள் கூறுக்கின்றனர். இது தொடர்பாக பர்கூரை சேர்ந்த சீதாப்பழம் மொத்த வியாபாரி கூத்தரசன் கூறுகையில் பர்கூர் பகுதியில் இருந்து விவசாயிகளிடம் இருந்து ஒரு கிரேடு சீதாப்பழம் 200 ரூபாய்க்கு வாங்கப்பட்டு அதனை பாதுகாப்பாக பேப்பரில் சுற்றி கிரேடில் அடுக்கி விற்பனை செய்கிறோம். வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள் ஒரு கிரேடு 220 முதல் 250 ரூபாய் வரையில் சீதாப்பழத்தின் தரத்திற்கு ஏற்ப வாங்கி செல்கின்றனர் கமிஷன் அடிப்படையில் மொத்த வியாபாரம் செய்யப்படுகிறது இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பொதுவாக சீதாப்பழம் அதிகம் கேரளா மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள் ஆனால் கொரோனா பரவல் காரணமாக கேரள வியாபாரிகள் வராததால் சீதாப் பழங்கள் தேக்கமடைந்து விலை குறைந்து உள்ளது இங்கிருந்து வாங்கச் செல்லும் சீதாப் பழங்கள் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ ரூபாய் 50 முதல் 100 வரையிலும் விற்பனை செய்கின்றனர். தற்போது நாள் ஒன்றுக்கு 10 டன் எடையுள்ள சீதாப்பழம் விற்பனை செய்யப்படுகிறது தற்போது சீதாப்பழம் சீசன் துவங்கி 20 நாட்கள் ஆகும் நிலையில் இன்னும் இரண்டு மாதங்கள் வரையில் சீசன் உள்ளதால் கொரோனா தொற்று பரவல் குறைந்து கேரளாவில் இருந்து வியாபாரிகள் வருவார்கள் விலை அதிகரிக்கும் என்கிற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.

You may also like

Add Comment
error: Content is protected !!