Home » கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் 27-12-202 (நேற்று) மீனாட்சி மஹாலில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 2 யை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் 27-12-202 (நேற்று) மீனாட்சி மஹாலில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் 2 யை நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம்

by Admin
0 comment

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் 27-12-202 நேற்று மீனாட்சி மஹாலில் நடைபெற்றது.கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் டி.செங்குட்டுவன், Ex MLA., தலைமை வகித்தார்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.தீர்மானம் : 1இரங்கல்தீர்மானம் இந்திய திருநாட்டின் முப்படை தளபதி பிபீன்ராவத், அவரது மனைவி மற்றும் 12 ராணுவ அதிகாரிகள் மறைவு. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உதவியாளர் மரியாதைக்குரிய சண்முகநாதன்.தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் சகோதரர் திரு மு.க.தமிழரசு அவர்களின் மாமியார். கழக பொதுச் செயலாளர் மரியாதைக்குரிய துரைமுருகன் அவர்களின் சகோதரர் மகாலிங்கம்.தலைமை செயற்குழ உறுப்பினரும், மத்தூர் ஒன்றிய கழக செயலாளராக பணியாற்றி மறைந்த பென் குணசேகரன்.மேற்கு மாவட்ட செயலாளர் திரு Y. பிரகாஷ், MLA அவர்களின் புதல்வன்.தீர்மானம் : 2மரியாதைக்குரிய இனமானப் பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாதிராவிட பேரியக்கத்தின் லட்சியவாதி திமுக பொதுச் செயலாளராக சுமார் ஐம்பது ஆண்டு காலம் பணிபுரிந்து, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் உற்ற தோழனாக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் பாசறை பைந்தமிழ் நூலகமாக, அனைவரின் போற்றுதலுக்கும் உரியவரான மரியாதைக்குரிய இனமானப் பேராசிரியர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா. கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் இயக்கப் பணிகளிலும், சட்டமன்ற பணிகளிலும், ஆலோசனைகளை வழங்கி தலைவர் அவர்களின் சிறப்பு இயல்புகளை பாராட்டி மகிழ்ந்தவர்.தனது அரும்பணிகள் கழகத்தை முத்தமிழ் அறிஞர் கலைஞர் உடன் இணைந்து கட்டிக்காத்த இனமானப் பேராசிரியர் அவர்களின் கழகத் தலைவர் ஆணைப்படி மாவட்ட கழகத்தின் சார்பிலும், ஒன்றிய, நகர, பேரூர் கழகங்கள் சார்பிலும், அணிகளின் சார்பிலும் ஓராண்டு முழுவதும் கொண்டாடுவது என தீர்மானிக்கப்படுகிறது.தீர்மானம் : 3கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் ஒரு லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்த்திடுவோம்திமுகழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், முதல்வராக பதவியேற்ற நாளிலிருந்து ஓயாமல், உறங்காமல் உழைத்து, மக்களை சந்தித்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளார். தினம் தினம் புதிய புதிய வரலாற்று திட்டங்களை அறிவித்து வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளில் 500 ல் சுமார் 300 வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். பொதுமக்கள் பாராட்டும் வகையில் சாதனை படைத்து வருகிறார் இந்தியாவிலேயே முதன்மையான முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்திய நாட்டு விமானப்படை தளபதி, ராணுவ தளபதிகள் கூட பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். அண்டை மாநில ஊடகங்கள், நாளிதழ்கள், சமூக வலைதளங்கள் அனைத்தும் பாராட்டுகின்றன. திராவிட முன்னேற்ற கழக உடன்பிறப்புகள் மனம் குளிர் கிறார்கள்.இந்நிலையில் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் அனைவராலும் பாராட்டப்படும் வேலையில் தமிழக முதல்வர் நம் கழக தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் ஆணைப்படி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து, அனைத்து ஊராட்சிகள், குக்கிராமங்கள், வட்டங்கள், தெருக்கள், கிளைக் கழகங்கள் தோறும் உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம்களை நடத்தி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், தொழிலாளர்கள் அனைவரையும் கழகத்தில் உறுப்பினராக சேர்த்திட வேண்டும். ஏற்கனவே தேர்தலுக்கு முன் நடைபெற்ற “ஒருங்கிணைவோம் வா” திட்டத்தின் மூலம் இணையதளம் மூலம் சேர்க்கப்பட்ட, உறுப்பினர்களையும் உறுப்பினர் படிவத்தில் சேர்த்து உறுப்பினர் அட்டைகளை பெற்றுத்தரும் வகையில் விரைந்து செயல்பட்டு, மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்த்திடும் வகையில் தீவிரமாக பணியாற்றுவது என தீர்மானிக்கப்படுகிறது.தீர்மானம் : 4உள்ளாட்சி தேர்தலில் 100% வெற்றி பெற அயராது பாடுபடுவோம்நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தலில், நமது மாவட்டத்தில் உள்ள நகராட்சி-1, பேரூராட்சிகள்-4 ஆகியவற்றில் உள்ள அனைத்து வார்டுகளிலும் கழக வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரையும் 100% வெற்றி பெறும் வகையில் ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றிபெறச் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.தீர்மானம் : 5″இன்னுயிர் காப்போம் நமக்கான 48 மணி நேரம்” திட்டம் காலத்தால் அழியாத முத்தான திட்டத்தை தந்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றி ! நன்றி !இந்தியாவிலுள்ள எந்த மாநில முதலமைச்சரும் செய்யாத திட்டம், உலகமே பாராட்டுகிற திட்டம், சாலை விபத்துகளால் அடிபட்டு, உயிருக்கு போராடும், எந்த நாட்டு மனித உயிராக இருந்தாலும், எந்த மாநில மனித உயிராக இருந்தாலும், நம் தமிழ் மண்ணில் நிகழ்ந்தால் உடனடியாக பணம் செலுத்தி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற முடியாத நிலையில் உள்ள அனைத்து உயிர்களையும், பக்கத்தில் உள்ள எந்த தனியார் மருத்துவமனையிலும் சேர்த்து 48 மணி நேரம் வரை சிகிச்சை அளிக்க தேவையான பணத்தை, சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு, அரசே பணத்தை வழங்குகிற மகத்தான திட்டத்தை நம் தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு தளபதி அவர்கள் ஆணையிட்டு, மிகப்பெரிய மனிதநேய திட்டமாம் “இன்னுயிர் காப்போம்” நமக்கான 48 மணி நேரம் திட்டத்தை அறிவித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.மேற்படி மகத்தான திட்டத்தை அறிவித்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.தீர்மானம் : 6தமிழக திருநாளாம் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவோம்.தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள், தை முதல் நாளே தமிழர் திருநாள், தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு நாள், பொங்கல் திருநாள் திருவள்ளுவர் ஆண்டு துவக்க நாள். மேற்படி திருநாளில் மாவட்டம் முழுவதும் உள்ள கழக கொடி கம்பங்களில் உள்ள பழைய கொடிகளை மாற்றி புதிய கொடிகள் ஏற்றியும், புதிய கொடி கம்பங்களில் கழக இரு வண்ணக் கொடி ஏற்றியும், ஆங்காங்கே பொங்கலிட்டு பொதுமக்களுக்கு வழங்கி கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.தீர்மானம்:72006 – 2011 திமுக ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்டு நிலுவையிலுள்ள மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற கோரிக்கை.2006 – 2011 திமுக ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கொண்டு வரப்பட்டு, அன்றைய துணை முதல்வர், மாண்புமிகு தளபதியார் அவர்களால் நிறைவேற்ற தயாராக இருந்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு கிடப்பில் போடப்பட்டிருந்த கீழ்கண்ட திட்டங்களான1. ”தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணி ஒட்டு தடுப்பணை”, வலது, இடது புற, மக்கள் விரும்பும் வழியிலான கால்வாய் வெட்டி காய்ந்துபோன ஏரிகளை நிரப்புகிற திட்டம்.2. ஊத்தங்கரையில் நவீன அரசு மருத்துவமனை.3. ”மாம்பழ கூழ் ஏற்றுமதி மையம் திட்டம்”, அரசு சார்பில் தேங்காய் கொள்முதல், கொப்பரை ஏற்றுமதி மையத் திட்டம்.4. ”தென்பெண்ணை ஆற்று நீரை கொடியாளம் அருகில் சுத்தப்படுத்தும் திட்டம்”.5. ”வாசனை திரவியம் தயாரிக்கும்” தொழிற்சாலை திட்டம்.6. அரசு சார்பில் ‘கிரானைட் பூங்கா” அமைக்கும் திட்டம்.7. கிருஷ்ணகிரி பாதாள சாக்கடை இரண்டாம் பகுதி திட்டம்.ஆகிய திட்டங்களை நிறைவேற்றி தந்திட மாண்புமிகு முதல்வர் அவர்களையும், துறை அமைச்சர் பெருமக்களையும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

You may also like

Add Comment
error: Content is protected !!