Home » ஊரக வளர்ச்சித்துறையில் நடைபெற்று வரும் ரூ.1,73,74,000 மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்

ஊரக வளர்ச்சித்துறையில் நடைபெற்று வரும் ரூ.1,73,74,000 மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு செய்தார்

by Admin
0 comment

ஊரக வளர்ச்சித்துறையில் நடைபெற்று வரும் ரூ.1 கோடியே 73 இலட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் இன்று(19.7.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணாகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி, ஊரக வளர்ச்சித்துறை சார்பாக அரசு பெண்கள் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் ரூ.1 கோடி மதிப்பிலான 5 வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகள், கங்கலேரி ஊராட்சி ஏரி கொள்ளை வட்டத்தில் ரூ.1.30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நீர் உரிஞ்சி குழி கட்டுமான பணிகள் மற்றும் திருமதி.கலைவாணி என்பவர் நிலத்தில் ரூ.2 இலட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் விரப்பு கட்டும் பணிகள் நடைபெறுவதையும், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி சமத்துவபுரத்தில் ரூ.70.44 இலட்சம் மதிப்பிலான அங்கன்வாடி கட்டிடம், சமுதாய கூடம், நுழைவு வாயில்,பொதுவிநியோக கடை மற்றும் தார் சாலை புதுப்பித்தல், தலா ரூ.50,000/- மதிப்பில் 100 குடியிருப்புகளில் புனரமைப்பு பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பாணுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் இன்று(19.7.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கட்டிகானப்பள்ளி ஊராட்சி, ஊரக வளர்ச்சித்துறை தன்னிரைவு திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வரும் ரூ.1 கோடி மதிப்பிலான 5 வகுப்பறை கட்டிட கட்டுமான பணிகளை தரமமாகவும், விரைவாகவும் முடித்து மாணவியர்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுருத்தினார்.

தொடர்ந்து, 2022-2023 நிதியாண்டு 15-வது நிதிகுழு மானியத்தில் அமிர்ததுளி திட்டத்தின் கீழ் கங்கலேரி ஊராட்சி ஏரி கொள்ளை வட்டத்தில் ரூ.1.30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நீர் உரிஞ்சி குழி கட்டுமான பணியை பார்வையிட்டு அளவீடு செய்தார். திருமதி.கலைவாணி என்பவர் நிலத்தில் ரூ.2 இலட்சம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மா செடிகளுக்கு தண்ணீர் தேங்கும் வகையில் மா மரத்தை சுற்றி மண் அமைத்தல் மற்றும் விரப்பு கட்டும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார்.

மேலும், 2022-2023 நிதியாண்டு காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி சமத்துவபுரத்தில் ரூ.20.44 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம், சமுதாய கூடம், நுழைவு வாயில்,பொதுவிநியோக கடை ஆகியவற்றை புனரமைப்பு பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டார். மீதமுள்ள தார் சாவை புதுப்பிக்கும் பணிகளை ஆய்வு செய்தும், சமத்துவபுரத்தில் தலா ரூ.50,000/- என மொத்தம் ரூ.50 இலட்சம் மதிப்பில் 100 குடியிருப்புகளில் புனரமைப்பு பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு மேற்கண்ட புனரமைப்பு பணிகளை தரமமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுருத்தினார்.

இந்த ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர் திருமதி.கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வேடியப்பன், திருமதி.சாந்தி, பொறியாளர் திரு.சாஸ்தா, பணி மேற்பார்வையாளர்கள் திரு.நாகூர் மீரான், திருமதி.கல்பனா, ஊராட்சி மன்ற தலைவர்கள் திருமதி.காய்திரி கோவிந்தராஜ், திரு.இலட்சுமனன், திருமதி,மஞ்சுளா,ஊராட்சி மன்ற துணை தலைவர் திரு.கே.நாராயண குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!