Home » கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி தடுப்பணை தொடர் மழையால் நிரம்பி வழிகிறது! விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி!!

கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி தடுப்பணை தொடர் மழையால் நிரம்பி வழிகிறது! விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி!!

by Babukanth V
0 comment

தொடர் மழையால் நிரம்பி வழிந்து வரும் சின்னட்டி தடுப்பணை : விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி

ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளான தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், சூளகிரி, இராயக்கோட்டை, தளி, அஞ்செட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இந்த மழையால் பல்வேறு கிராமப்பகுதிகளிலுள்ள ஏரி. குளங்களில் நீர் நிரம்பி உள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒசூர் அருகேயுள்ள தளி பகுதியில் பெய்த தொடர் மழைக்கு அப்பகுதியில் உருவாகும் சனத்குமார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சனத்குமார் ஆற்றின் வழியாக வரும் தண்ணீர் கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி தடுப்பணையில் நிரம்பி வழிந்து ஒடுகிறது. 5 ஆண்டுகளுக்கு பின் சின்னட்டி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வெளியேறி வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சின்னட்டி தடுப்பணையிலிருந்து வெளியேறும் மறுகால் தண்ணீர் தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அணைக்கு செல்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக ஆறு, ஏரி, குளங்களில் தண்ணீர் நிரம்பி பெருக்கெடுத்ததால் ஒசூர் சுற்றுப்புற பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

You may also like

Add Comment
error: Content is protected !!