தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர்,பேவர் பிளாக் கல் பதிக்கும் திட்ட பணிகள் 5 கோடி ரூபாயில் நடைப்பெற்று வருகிறது.
இப்பணிகளுக்காக நெடுஞ்சாலை, தெருசாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாகி இரு சக்கர வாகனம் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளது.
இப்பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
மேலும் பஸ் நிலையத்தில் உள்ள பொதுக்கழிப்பிடம், ஆடு அடிக்கும் தொட்டி ஆகியவற்றை பொது ஏலம் விடுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி பாலக்கோடு பேரூராட்சியில் தீடீர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
மேலும் பாலக்கோடு பேரூராட்சிக்கு சிறுவர் பூங்கா அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குருராஜன், பேரூராட்சி தலைவர் முரளி, செயல் அலுவலர் டார்த்தி, கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.