Home » தருமபுரி மாவட்டம் ஜக்குப்பட்டி அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்தில் எழுந்தருளிய ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மன் கோயில் குடமுழுக்கு வெகு விமர்சியாக நடந்தது

தருமபுரி மாவட்டம் ஜக்குப்பட்டி அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்தில் எழுந்தருளிய ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மன் கோயில் குடமுழுக்கு வெகு விமர்சியாக நடந்தது

by Poovizhi R
0 comment

தருமபுரி மாவட்டம் ஜக்குப்பட்டி அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்தில் உள்ள கிராம மக்களில் காவல் தெய்வமாக வழிப்பட்டு வந்த ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மனுக்கு புதிய கோயில் கட்டுவதற்க்கு 18 பானை கவுண்டர்கள் சார்பில் முடிவு செய்து கடந்த சில மாதங்களாக ஆகமவிதிப்படி புதிய கோயில்கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதன்பின்னர் கோயில் கட்டும் பணி முடிவுற்ற பிறகு கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடு நடந்தது. அதனையொட்டி கடந்த 30 ம் தேதி வினாயகர் பூஜை, கோ பூஜையை தொடர்ந்து பக்கதர்களுக்கு கங்கனம் கட்டுதல் வீடுகளில் முலைபாலிகை இடுதல் நிகழ்ச்சியை தொடந்து 3 ம் தேதி புதிய சுவாமிசிலைகள் கரிகோலக ஊர்வலம் மற்றும் தீப்பாஞ்சி அம்மன் மூலவர் விக்கிரஹகங்கள் யாகசாலைகளுக்கு கொண்டுவந்து அங்கு திருமுறை பாராயணம், வேத பாராயணம் செய்யப்பட்டு முதல்கால யாகசாலை தொடங்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு யாகசாலை பூஜைகள் தீர்த்தகுடம் ஊர்லம். முலைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை நான்கு கால பூஜைக்கு பின்னர் யாகசாலையில் வைத்திருந்த புனித நீரை சிவாச்சாரியர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் தலை மீது கொண்டு சென்று கோயில் கலசத்திற்கு ஊற்றி குடமுழுக்கு செய்தனர். பின்னர் அந்தபுனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தீப்பாஞ்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் 18 பானை கவுண்டர்கள் உள்பட ஏராளமான பக்த்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா குழுவினர் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

You may also like

Add Comment
error: Content is protected !!