Home » கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறையின் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறையின் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

by Poovizhi R
0 comment

அறிஞர் அண்ணா கல்லூரியின் வேதியல் துறையில் தேசிய கருத்தரங்கம் . அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறையில் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை (06.04.2023)அன்று நடைபெற்றது. கல்லூரியின் வேதியியல் துறை தலைவர் திரு இரா . சிவகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில், மாணவ மாணவியர்கள் வேதியல் கண்டுபிடிப்பில் நோபல் பரிசு போல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தல் வேண்டும். மண்ணுக்கும் மக்களுக்கும் பயன்படும் வகையில் இயற்கை உரங்களை பயன்படுத்துதல் வேண்டும். புதிய தனிமங்களை கண்டறிதல் வேண்டும் மேலும் சிந்தனைகளை வளர்க்க ஆய்வு மாணவ மாணவியர்கள் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று பேசினார். ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை தலைவி P. நீரஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தன்னுடைய சிறப்பு உரையில் , வேதியியல் படிப்பதன் மூலம் மத்திய மாநில மருத்துவத் துறை மற்றும் வேதியியல் ஆராய்ச்சி கூடங்களின் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன அதனை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். தேசிய கருத்தரங்கில் கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் வேலூர் மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வேதியியல் துறை ஆராய்ச்சி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கருத்தரங்கின் நிறைவாக கல்லூரியின் வேதியல் துறை உதவி பேராசிரியர் M.சந்தோஷ் குமார்அவர்கள் நன்றி கூற, விழா இனிதே நாட்டுப் பண்ணுடன் நிறைவு பெற்றது.

You may also like

Add Comment
error: Content is protected !!