Home » கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி வட்டாரம், சிகரமாகனபள்ளி ஊராட்சி, தோட்டக்கனவாய் கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடை

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி வட்டாரம், சிகரமாகனபள்ளி ஊராட்சி, தோட்டக்கனவாய் கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடை

by Poovizhi R
0 comment

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, சிகரமாகனபள்ளி ஊராட்சி, தோட்டக்கனவாய் கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக்கடையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் இன்று (06.04.2023) திறந்து வைத்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி வட்டாரம், சிகரமாகனபள்ளி ஊராட்சி, தோட்டக்கனவாய் பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பகுதிநேர நியாய விலைக்கடையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.04.2023) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.திபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்ததாவது:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டாரம், கே.கே.249 சிகரமானப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டிலுள்ள சிகரமாகனப்பள்ளி (30AP096PY) முழுநேர நியாயவிலைக் கடையில் 539 குடும்ப அட்டைதாரர்கள் உணவு பொருட்கள் பெற்று வந்தனர். தோட்டகணவாய் பகுதியில் உள்ள 134 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்க சிகரமணபள்ளி செல்லவேண்டுமானால் தார் சாலையில் 8 கி.மீ. துாரமும் ஆற்றை கடந்து செல்லவேண்டுமானால் 2 கி.மீ. செல்ல வேண்டும். மழை வெள்ள காலங்களில் பொருட்களை வாங்குவதற்கு மிகவும் சிரமமாக இருப்பாதாக நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவந்தது.இந்நிலையில் கடந்த வாரம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மேலாண பார்வைக்கு பொதுமக்களின் கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டது. ஊடகங்கள் மூலம் பொதுமக்களின் கோரிக்கை செய்தியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த 31.3.2023 அன்று அரசுக்கு கருத்துரு அனுப்பட்டது. ஒருவார காலத்தில் அரசின் அனுமதி பெற்று தற்போது நிபந்தனைகளை தளர்வு செய்து, சிகரமாகனப்பள்ளி (30AP096PY) முழுநேர நியாயவிலைக் கடையில்

இணைக்கப்பட்டுள்ள 539 குடும்ப அட்டைகளில் இருந்து 134 குடும்ப அட்டைகளை பிரித்து தோட்டகனவாய் பகுதியில் 134 குடும்ப அட்டைகளுடன் சிகரமானப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக்கட்டிடத்தில் வாரத்தில் ஒரு நாள் (வெள்ளிக்கிழமை) மட்டும் செயல்படும் வகையில் பகுதிநேர நியாய விலைக்கடை திறந்து வைக்கப்பட்டுள்ளது.அதன்படி பொதுமக்கள் பொது விநியோகத்திட்ட உணவு பொருட்களை தோட்டகனவாய் புதிய பகுதி நேர நியாயவிலைக் கடையில் பிரதிவாரம் வெள்ளிக்கிழமை அன்று பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல்அலுவலர் திரு.சுகுமார், கூட்டுறவு சங்கங்கள் இணை பதிவாளர் திரு.ஏகாம்பரம், துணை பதிவாளர் திரு.என்.குமார், வட்டாட்சியர் திரு.சம்பத், வட்ட வழங்கல் அலுவலர் திரு.ரமேஷ், கூட்டுறவு சார் பதிவாளர் திருமதி. கல்பனா, கூட்டுறவு சங்க செயலாளர் திரு.கிருஷ்ணன், மற்றும் உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!