ஜூனியர் விகடன் இதழ் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவியை ராஜினாமா செய்யத் தயார்- கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் Y.பிரகாஷ் MLA பேட்டி
ஜூனியர் விகடன் இதழில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 5ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கனிம வளம் கடத்தப்பட்ட பின்னணியில் ஒசூர் எம்எல்ஏவும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான Y.பிரகாஷ் இருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது..
இந்தநிலையில் ஓசூரில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த Y.பிரகாஷ்,
தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, இந்த செய்தியை பரப்பிய ஜூனியர் விகடன் நிறுவனத்தின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்க்கொள்ள அவதூறு வழக்குத்தொடரப்படும் என்றார்…
ஒசூர், தளி பகுதியில் மட்டும் அறிமுகமான தன்னை தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்திய ஜூனியர் விகடனுக்கு நன்றி..
இதுவரை எவ்வித சர்ச்சையோ, ஊழல்,புகார் வழக்குகளுக்கு சிக்காத MLA என்றால் அதில் முதன்மையானவனாக நான் இருப்பேன்..
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள என்மீது உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பப்படுகிறது… செய்தி வெளியிட்டவர்கள் மீதும், அதனை வெளியிட காரணமானவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்
எனக்கு எவ்வித கிரானைட் தொழிற்சாலையோ,கல்குவாரியோ இல்லை அப்படி நிரூபித்தால் நான் எனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்..
என் சார்பில் வழக்கு தொடர்வதா அல்லது திமுக சார்பிலா என்பதை தலைமையுடன் பேசி இன்று மாலை முடிவெடுக்க உள்ளதாக பேசினார்.