Home » தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சியை அமைச்சர் MRK.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சியை அமைச்சர் MRK.பன்னீர் செல்வம் தொடங்கி வைத்தார்

by Babukanth V
0 comment

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு -2023, மண்டல அளவிலான சிறுதானிய திருவிழா, கண்காட்சியினை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (28.05.2023) தொடங்கி வைத்து, உழவர்களுக்கு இடுப்பொருட்களை வழங்கினார்கள். உடன் கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர். வெ.கீதாலட்சுமி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர். ஷேய்க் என்.மீரா, தேசிய வேளாண் பூச்சிகள் தகவமைப்பு மைய இயக்குநர் திரு. ச.நா. சுசீல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விரிவாக்கக் கல்வி இயக்குநர் முனைவர். பி.பொ.முருகன், முன்னாள் அமைச்சர் முனைவர்.பி.பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம்.பெ.சுப்பிரமணி உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!