Home » காவேரிபட்டிணம் ஒன்றியம் பாப்பானூர் பெரியாண்டவர் முனியப்ப சுவாமி திருவிழாவில் பர்கூர் எம்எல்ஏ தே.மதியழகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்

காவேரிபட்டிணம் ஒன்றியம் பாப்பானூர் பெரியாண்டவர் முனியப்ப சுவாமி திருவிழாவில் பர்கூர் எம்எல்ஏ தே.மதியழகன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்

by Babukanth V
0 comment

பாப்பானூர் பெரியாண்டவர் முனியப்ப சுவாமி திருவிழா பர்கூர் எம்எல்ஏ பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம், பாப்பானூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரியாண்டவர் மற்றும் முனியப்ப சுவாமி திருக்கோவில் கடந்த 2017 ஆம் வருடம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு கோயிலை புதுப்பிக்கப்பட்டு ஐந்து நாட்கள் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. முதல் நாள் கொடியேற்றம். இரண்டாம் நாள் முளைப்பாரி எடுத்தல் முனியப்பனுக்கு ஓமம் வளர்த்தல். மூன்றாம் நாள் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜைகள். நாளாம் நாள் பாரூர் லட்சுமி நாராயண பெருமாள் சுவாமிக்கு திருக்கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீ மேல் தீபம் ஏற்றுதல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவு அசத்தல் பாய் திரைப்படம் நடன நாட்டிய ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐந்தாம் நாள் பெண்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக சென்றனர் பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், பம்பை மேளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக சென்று முனியப்ப சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து முனியப்ப சாமிக்கு ஆடு, கோழி ,பன்றி பலியிட்டு முப்பூஜைகள் செய்தனர். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது விழாவில் பர்கூர் தொகுதி எம்எல்ஏ மதியழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். விழாவில் குலதெய்வ பங்காளிகள் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுவாமி தரிசித்தனர். விழாக்கான ஏற்பாடுகளை குலதெய்வ பங்காளிகள் மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!