சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிலத்தினை அளவிடு செய்து கொடுக்காமல் கடந்த 8 ஆண்டுகளாக அவைக் கழித்து வருவதாக கூறி மதிக்கப்பட்டவர் தனது குடும்பத்தினருடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் புகார் மனுவினைக் கொடுத்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் அருகே உள்ள காத்தாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் மார்டினா பால்ராஜ் இவரது பூர்விகநிலத்தினை முறைகேடாக பக்கத்து நிலத்துக்காரர் அபகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.இது தொடர்பான காவல் நிலையத்தில்வழக்கு தொடரப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்த வழக்கு விசாணையின்போது மார்டினா என்பவருக்கு சொந்தமான நிலத்தினை உரிய அளவீடு செய்து கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் இது தொடர்பாக சம்மந்தபட்ட அலுவலர்களையும் அனுகியும் இதுவரை அந்த நிலத்தினை அளவிடு செய்துகொடுக்காமல் அலைக்கழித்து வருவதாக செல்லப்படுகிறது.இதனால் பாதிகக்கப்பட்டமார்டினா தனது குடும்பத்தினர்களுடன் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிலத்தினை அளவீடு செய்துக்கொடுக்க வழியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்கோரிக்கை மனுவினை கொடுத்தார்.அப்போது தங்களுக்கு சொந்தமான 30 செண்ட் நிலம் காத்தாம்பள்ளம் கிராமத்தில் உள்ளது.இந்த நிலத்தினை பக்கத்து நிலத்துக்காரர் அபகரித்து சொந்தம் கொண்டாடி வருகிறார் ஆகையால் UDR -ல் உள்ளபடி எங்களது நிலத்தினை அளவீடு செய்து கொடுக்க வேண்டும், இது தொடர்பாக சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் கடந்த 8 ஆண்டுகளாக போராடி வருகிறோம் யாரும் கண்டுகொளவில்லை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நிலத்தினை அளவீடு செய்து கொடுக்க வேண்டும் இதன் முன்னதாக இந்த நிலத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்டினா குறிப்பிட்டார்.
Uncategorized
பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட மாங்கரை ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களான கூத்தப்பாடி, மாங்கரை, செங்கனூர் , சத்தியநாதபுரம் பருவதன அள்ளி மற்றும் பல கிராமங்களில் மே ஒன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் எங்கள் ஊரில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் குறித்தும் இதுவரை செய்யப்பட்ட வேலைகள் குறித்தும் பேசப்பட்டது. மாங்கரை ஊராட்சி நல்லாம்பட்டி பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் பங்கேற்று கிராம மக்களிடையே குறைகளை கேட்டார் அப்பொழுது அங்குள்ள மக்கள் மின்விளக்கு சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கோரிக்கை வைத்தனர் இந்த கோரிக்கைகளை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றுவதாக உறுதியளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா செந்தில் , தலைமை ஆசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள் பொதுப்பணித்துறை அலுவலர்கள் வருவாய் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
5தர்மபுரிமாவட்டம் பஞ்சப்பள்ளியை அடுத்த கூத்தாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம் பெண் மாயம் ! தந்தை போலீசில் புகார்.
கூத்தாண்டஅள்ளியில் மகள் மாயம்,தந்தை போலீசில் புகார்.தர்மபுரிமாவட்டம் பஞ்சப்பள்ளியை அடுத்த கூத்தாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் இவரது மகள் சினேகா (வயது.18) இவர் இராயக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்,நேற்றிரவு வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்க்கு வந்தவர் இரவு உணவு முடித்து குடும்பத்துடன் தூங்க சென்றனர்.விடியற்காலை கண் விழித்த முருகன் மகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார், உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால் மகளை கண்டுபிடித்து தருமாறு பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதுகுறித்து பஞ்சப்பள்ளி போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து மாயமான சினேகாவை தேடி வருகின்றனர்.
மகேந்திரமங்கலம் அடுத்த நீலகிரியான் கொட்டாய் கிராமத்தில் கல்தடுக்கி கீழே விழுந்ததில் 6 ம் வகுப்பு மாணவன் பலி.
நீலகிரியான் கொட்டாய் கிராமத்தில் கல்தடுக்கி கீழே விழுந்ததில் 6 ம் வகுப்பு மாணவன் பலி.தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலம் அடுத்த நீலகிரியான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த இராணுவ வீரர் ராமசாமி இவர் ஹைதராபாத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவரது மகன் சதீஷ் (வயது.17) இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.இன்று காலை வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்ல பள்ளி வாகனத்தை நோக்கி வேகமாக ஓடி சென்றவர் சாலையில் கிடந்த கல் தடுக்கி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது,உடனடியாக அக்கம் பக்கத்தினர். அவரை மீட்டு காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே மாணவன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கல் தடுக்கி கீழே விழுந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க காரிமங்கலம் ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் பெரியாம்பட்டி பஞ்சாயத்தில் நடந்தது
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க காரிமங்கலம் ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் பெரியாம்பட்டி பஞ்சாயத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் திருவருட்செல்வர், மண்டல தலைவர் செல்வம், அமைப்பு செயலாளர்கள் வெங்கடேசன், சாந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரச்சார செயலாளர் துரைவேல் வரவேற்றார். மாநில இணை செயலாளர் சரவணன் செயற்குழு தீர்மானங்களை விளக்கி பேசினார். அடுத்த மாதம் 15 ஆம் தேதி சென்னையில் ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி நடக்க உள்ள காத்திருப்பு போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய தலைவராக லட்சுமணன், செயலாளராக தனசேகர், பொருளாளராக விஜயகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பருவதன அள்ளி நியாய விலைக் கடையில் ஜி.கே.மணி எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள பருவதன அள்ளி நியாய விலைக் கடையில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நியாய விலைக் கடை ஊழியர்களிடம் பொருட்களின் தரம்,இருப்பு மற்றும் சரியான முறையில் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதினை கேட்டறிந்தார். இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொதுக் குழு உறுப்பினர் இராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் செல்வகுமார், ஒன்றிய செயலாளர் இராச உலகநாதன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர் .
தொழிற் பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) இல்லாத பஞ்சாயத்து யூனியன்களில் புதிய தொழிற் பயிற்சி நிலையம் (ஐடிஐ) துவக்க விண்ணப்பிக்கலாம்
தொழிற் பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) இல்லாத பஞ்சாயத்து யூனியன்களில் குறைந்த பட்சம் நான்கு தொழிற் பிரிவுகளுடன் புதிய தொழிற் பயிற்சி நிலையம் (ஐடிஐ) துவக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் மற்றும் உதவி இயக்குநர் சி.பன்னீர்செல்வம் அவர்கள் தகவல்.தொழிற் பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) இல்லாத பஞ்சாயத்து யூனியன்களில் குறைந்த பட்சம் நான்கு தொழிற் பிரிவுகளுடன் புதிய தொழிற் பயிற்சி நிலையம் (ஐடிஐ) தொடங்கிடவும், நான்கு தொழிற் பிரிவுகளுக்கும் குறைவாக நடைபெற்று கொண்டிருக்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள் புதிய தொழிற் பிரிவுகள் துவங்கிடவும் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்கிடவும், இடமாற்றம் செய்திடவும் 28.03.2023 முதல் 25.04.2023-ற்குள் www.nimionlineadmission.in/iti என்ற டி.ஜி.டி. இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே புதிய தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க விரும்புபவர்கள், ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் கூடுதல் அலகுகள் துவங்கிடவுள்ளவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், உதவி இயக்குநர் சி.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (21-04-2023) நடைபெறுகிறது
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தருமபுரிதனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் : 21.04.2023தனியார்துறை நிறுவனங்களும் – தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து அவர்களது வேலைவாய்ப்பு செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத்தேர்வு அனுப்பப்படும்.இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு. விற்பனையாளர், மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், தட்டச்சர். அக்கவுண்டன்ட், கேசியர். மெக்கானிக் போன்ற பணிகளுக்கு. தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என அனைத்துவித கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.ஆகவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், வருகின்ற 21.04.2023 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி நகர திமுக சார்பில் ரம்ஜான் மாத நோன்பை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் MLAதலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி நகர திமுக சார்பில் ரம்ஜான் மாத நோன்பை முன்னிட்டு நலத்திட்ட உதவி வழங்கும் விழா பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் தே.மதியழகன் MLAதலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ப.கதிரவன்,மாவட்டத் துணைச் செயலாளர் B.K.கோவிந்தசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் நகர மன்ற தலைவர் பரிதா நவாப், காவேரிப்பட்டினம் மேற்கு ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்ரமணி மற்றும் நகர்மன்ற உறுப்பினர் கள், வட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாட்டைகிருஷ்ணகிரி நகர செயலாளர் S.K நவாப் செய்திருந்தார்.
அம்பேத்கரின் 132 வது பிறந்த நாள் விழா கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ தலைமையில் நாளை நடைபெறுகிறது.எஸ்.கே.நவாப் அழைப்பு.
திமுக கிருஷ்ணகிரி நகர கழக செயலாளர் எஸ் கே நவாப் அழைப்புஇந்தியாவின் சட்ட மாமேதை இந்தியாவின் சட்ட சிற்பி அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் அவர்கள் தலைமையில் கிருஷ்ணகிரி நகரக் கழக செயலாளர் எஸ் கே நவாப், தலைமை செயற்குழு உறுப்பினர் நகர மன்ற தலைவர் திருமதி பரிதா நவாப் ஆகியோர்முன்னிலையில் நாளை 14/04/23 காலை 10 மணி அளவில் கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. தொடர்ந்து கிருஷ்ணகிரி நகரம் 33வது வார்டுல் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட இருக்கிறது. அது சமயம் மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் இந்நாள் முன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணகிரி நகர மன்ற உறுப்பினர்கள் வட்டக் கழகச் செயலாளர்கள் வட்டக் கழகப் பிரதிநிதிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் நிகழ்ச்சியை சிறப்பித்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்