தர்மபுரி மாவட்டம் அதியமான் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாவட்ட அளவிலான Dr.AMR கிரிக்கெட் கோப்பை மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டிகள் தர்மபுரி மேற்கு மாவட்டம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தருமபுரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் , வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் இ.மா.பாலகிருஷ்ணன் , பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார், பாட்டாளி இளைஞர் சங்க மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி , ஒன்றிய தலைவர்கள் அருள்மொழி, வெற்றி, ஒன்றிய செயலாளர்கள் , முருகன் ,அன்பு ராசா,நகர தலைவர் சந்தோஷ், வன்னியர் சங்க பொறுப்பாளர் எம்.பிரேம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sports
தருமபுரி ஆணழகன் சந்தோஷ், சென்னையில் நடைபெற்ற மிஸ்டர்.தமிழ்நாடு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்
தருமபுரி ஆணழகன் சந்தோஷ் மிஸ்டர்.தமிழ்நாடு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார்.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற NPC 2023 மிஸ்டர் தமிழ்நாடு மாநில அளவிலான போட்டியில் தருமபுரி GOLD’Z GYM மையத்தை சேர்ந்த சந்தோஷ் அவர்கள் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவர் ஏற்கனவே இதற்கு முன் பல பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் பல சாதனைகளை படைத்து நம் தருமபுரி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க மை தருமபுரி அமைப்பின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மினி மாரத்தான் ஓட்டத்ம். மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்து மாரத்தான் ஓட்டத்தில் கலந்துக்கொண்டார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் இன்று (27.11.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் இன்று (27.11.2022) கொடியசைத்து துவக்கி வைத்து மாரத்தான் ஓட்டத்தில் கலந்துக்கொண்டார்.
பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் முன்னோட்டமாக ஒளிசுடர் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தொடர் ஓட்டமாக சென்றது. மேலும் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்.முதுகானப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச இரத்ததான முகாம் நடைபெற்றது. மேலும் சுகாதார பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் மாணவமாணவியருக்கு ஓவியம், கட்டுரை போட்டிகள் நடைபெற்றதையொட்டி வெற்றிபெற்ற மாணவ மாணவியர்கள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று கிருஷ்ணகிரி மருத்துவ கல்லுாரி மாணவ மாணவியர்கள், அரசு மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், ரெட்கிராஸ் சங்க பிரதிநிதிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள், மாணவமாணவியர்கள் என 700 மேற்பட்டோர்கள் மினி மாரத்தான் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இத்தொடர் ஒட்டம் புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி இராயக்கோட்டை மேம்பாலம், பெத்ததாளப்பள்ளி தாலுக்கா காவல் நிலையம் வழியாக திரும்பி மாவட்ட விளையாட்டு மைத்தானத்தில் முடிவுற்றது.
மினிமாரத்தான் போட்டிகளில் கலந்துக்கொண்டு முதல் பரிசு வென்ற எலத்திகிரியை சேர்ந்த மாணவர் ஜார்ஜ், இரண்டாம் பரிவு வென்ற பாலக்கோடு சேர்ந்தமாணவர் பெருமாள், மூன்றாம் பரிசு வென்ற வி.மாதேப்பட்டி சேர்ந்த மாணவர் மேகநாதன், பெண்கள் பிரிவில் முதல் பரிசு உமாவதி, இரண்டாம் பரிசு வி.பிரியா, மூன்றாம் பரிசு மரு.சங்கீதா ஆகியோருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், மேலும் மாரத்தான் போட்டியில் கலந்துக்கொண்ட மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.ரமேஷ்குமார், மருத்துவர்கள், மரு.திருலோகன், மரு.விமல், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. செல்வி, கிருஷ்ணகிரி வட்டாட்சியர் திரு. சம்பத், மாவட்ட ஆய்வாளர் திருமதி.வளர்மதி, சுகாதாரத்துறை கண்காணிப்பாளர் உடற்கல்வி ஆய்வாளர் திரு.கண்ணன், ரெட்கிராஸ் பிரதிநிதி திரு.செந்தில்குமார் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவ மாணவியர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.
ஊத்தங்கரை அதியமான் கல்வியல் கல்லூரியில் உலக நுகர்வோர் தினவிழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், அதியமான் கல்வியல் கல்லூரியில்,
உலக நுகர்வோர் தினவிழா மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
அது சமயம் நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் கருத்தரங்கு துவங்கியது.
பள்ளியின் தாளாளர் மற்றும் நிறுவனருமான திரு.திருமால்முருகன் அவர்கள் தலைமையேற்று தலைமை உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து கல்லூரியின் முதல்வர். முனைவர்.திருமதி.மணிமேகலை அவர்கள் வரவேற்புரை கொடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக சிறப்புரையாற்ற கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் உரிமை பாதுகாப்பு நல சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு.கோபிநாத் அவர்கள்.
உலக நுகர்வோர் தினவிழா மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்-1986 பற்றிய விதிகள் மற்றும் உலக நுகர்வோர் வரலாற்று செய்திகள், நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து பேசினார். இதனைத் தொடர்ந்து நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் தமிழ்நாடு,பாண்டிச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பின் FEDCOT-CHENNAI இயக்குனர். திரு.ஏஜி. ஜாய் அவர்கள் நுகர்வோர் பாதுகாப்பு திருத்த சட்டம் 2019 பற்றியும், அதனுடைய முறையீடு தொகைகள் குறித்தும் குறைதீர் மன்ற ஆணையத்தின் பொறுப்புகள், நடவடிக்கைகள், வழக்குகள், புகார்கள் ,சமரசங்கள் அபராதங்கள் ,தண்டனைகள் போன்றவற்றை விளக்கியதோடு உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் -2006 அதன் தொடர்ச்சியாக உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் விதிகள்- 2011 மேலும் உணவு பாதுகாப்பு விதிகள் மற்றும் நடைமுறை -2017 குறித்த விவரங்களையும் தற்போது மத்திய அரசின் உணவு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் ஆய்வுகள் மேலும் மத்திய அரசின் சுகாதார ஆய்வு பங்களிப்பில் கிடைக்கப்பெற்ற தரவுகளாக, நுண்ணூட்டச் சத்து குறைபாட்டினால், உணவு பற்றாக்குறையாளும், ஒரு நாளைக்கு 4500 குழந்தைகள் இறக்கியது. இது ஏறக்குறைய மாதத்தில் ஒரு லட்சம் குழந்தைகள் வரை இறப்பு நேரிடுகிறது எனவும், மேலும் பாதுகாப்பற்ற உணவுகளாகும், தரமில்லாத, சுகாதாரமில்லாத உணவுகளாலும், அரசின் பாதுகாப்பு நிர்ணய அமைப்பின், நிர்ணயம் செய்யப்பட்ட எல்லைகளைத் தாண்டிய நிறமூட்டிகள், சுவையூட்டிகள் ,அழகூட்டின பல தரப்பு புகையிலை, வேதிப்பொருட்களால், புற்றுநோயானது தமிழகத்தில் மட்டும் குறிப்பாக, ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரத்திற்கும் மேலான புற்றுநோய்கள் இருந்து வருவதை சுட்டிக்காட்டியும், மேலும், நுண்ணூட்டச்சத்து குறைபாட்டிற்காக மத்திய அரசின் கீழ் உணவு பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பின் போஷன் அபியான் திட்டம் 2017- 18 இன் அடிப்படையில் நுண்ணூட்டச்சத்து குறைபாடு களைய வேண்டி, இந்தியா முழுவதிலும், நியாயவிலை அங்காடிகளிலும், அயோடின் கலந்த உப்பு, A+Dவைட்டமின் கொண்ட எண்ணை அதேபோல் Dவிட்டமின் கலந்த அரிசி, கோதுமை மாவு, என உணவு பொருட்களில் அரசு ஆலோசனை செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. எனவே, பொதுமக்கள் தரமான, உணவு மற்றும் சுகாதாரமான உணவு நுண்ணூட்டச் சத்து கொண்ட உணவுகளை கொண்டும், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதல் ஆக 5 கிராம் உப்பு, 10 கிராம் சர்க்கரை, 15 மில்லி எண்ணெய் அளவு நாம் தினசரி எடுத்துக் கொள்ளக் கூடிய அளவை சுட்டிக்காட்டியுள்ளது எனவே இதன் அடிப்படையில் நாம் விழிப்புணர்வாக நம்மை நாமே தற்காத்துக் கொண்டும், குறைபாடு இருக்கும் போது, மேல் காணப்பட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் வழியாகவும், குறிப்பாக உணவு சம்பந்தப்பட்ட புகார்களில், தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை ஆணையாளர் அவர்களின் நேரடிக் கீழ் இயங்கக்கூடிய புகார் எண்: 94440 42322 என்ற எண்ணில், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், என அனைவரும் உணவு சம்பந்தப்பட்ட புகார்கள் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு,நேரடியாக பதிய முடியும். அப்படி பதிவர்களின், விபரங்கள் தகவலாக யாருக்கும், பகிர மாட்டாது.என்ற உறுதி இருப்பதை சுட்டிக்காட்டி, பேசினார்.
இதனைத்தொடர்ந்து நுகர்வோர் விழிப்புணர்வு நலச் சங்கத்தின் கௌரவத்தலைவர் திரு. சுரேஷ். அவர்கள் வங்கி மேலாளர் (ஓய்வு) வங்கி பண பரிமாற்றங்கள், வங்கி கணக்கு துவக்கம், வங்கி வட்டி விகிதங்கள், ஆன்லைன் மோசடி போன்ற விழிப்புணர்வு மற்றும் காவலன் -SOS(APP) செயலி குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
நிறைவாக அதியமான் கல்வியல் கல்லூரியின் பேராசிரியர். திருமதி உமா ராணி அவர்கள் நன்றியுரை கூறி, தேசிய கீதத்துடன் நிறைவுற்றது.