கிருஷ்ணகிரியில் மாங்கனி முக்கிய பயிராக உள்ளது மாவட்டத்தில் ஆண்டு தோறும் 300,000 டன் மா இங்கு உற்பத்தி ஆகிறது.மேலும் வெளிநாடுகளுக்கும் மாங்கூழ் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த மாம்பழத்தைப் போற்றும் வகையில் 1992 ஆண்டு முதல் ஆண்டு தோறும் தமிழக அரசால் மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாகத் தொடர்ந்து 3 ஆண்டுக்காலம் நடத்தப்படாமல் இருந்த கண்காட்சியானது இந்த வருடம் பெறும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை மறுநாள் ஜூன் 22-ஆம் தேதி முதல் 25 நாட்களுக்குக் கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடத்தத்திட்டமிடப் பட்டு பணிகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது,அரசுத்துறை அரங்குகள் 50 மற்றும் தனியார் அங்காடிகள் 80 மற்றும் கலையரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது மா கண்காட்சி அரங்கு, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய கேளிக்கை அரங்குகள், சிற்றுண்டி உணவகங்கள், ஆவின் பாலகம், மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருட்கள் விற்பனை அங்காடிகள் போன்றவை அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாகவிறுப்பாக நடை பெற்று வருகிறது.இக்கண்காட்சியில் தினமும் மாலை 5 மணி முதல் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சி,பாரத நாட்டியம்,பட்டிமன்றம், தெருக் கூத்து,தொலைக்காட்சி மற்றும் சினிமா பிரபலங்களின் பல்சுவை நிகழ்ச்சி,இசைக் கச்சேரி போன்றவை நடைபெறும் மேலும் நாய் கண்காட்சி, கொழு கொழு குழந்தை போட்டி,சாகச நிகழ்ச்சிகள் இடம் பெறும் ஆண்டு தோறும் நடைபெறும் 1 மாத கால மாங்கனி கண்காட்சியைக் காண சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் உள்ளூர் மற்றும் வெளி ஊர்களிலிருந்து இருந்து வருகை புரிவார்கள். பெறும் எதிர்பாப்புடன் நடைபெற விருக்கும் 28வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி ஆரம்பம் ஆக இன்னும் 2 நாட்களே உள்ளது.