உலக பட்டினி தினத்தில் மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க மூலம் 775ஆவது நாள் உணவு வழங்கப்பட்டது
உலக பட்டினி தினத்தில் 250 நபர்களுக்கு திரு.V.பாரத் மற்றும் அவரது குழுவினரால் மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க மூலம் தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. உணவை வீணாக்காமல் பிறருக்கு பகிர்ந்து அளிப்போம். மை தருமபுரி அமைப்பின் சார்பாக திருமதி வள்ளி தமிழ்செல்வன் அவர்கள் உணவு வழங்கும் திட்டத்தை ஒருங்கிணைந்தார்.