Home » நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 365 மனுக்கள் வரப்பெற்றது.

நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 365 மனுக்கள் வரப்பெற்றது.

by Poovizhi R
0 comment

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 1 மாற்றுத்திறனாளி நபருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.04.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓசூர் பகுதியில் பூ வியாபாரம் செய்யும் மாற்றுத்திறனாளி திருமதி.தேவி என்பவர் தனக்கு சொந்தமாக வீடு இல்லை என 03.04.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தார். அம்மனுவின் மீது உடனடி நடவடிக்கையின்பெயரில் இன்று அவருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, உடனடியாக மின் இணைப்பு வழங்க மின்சார துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும், இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 365 மனுக்கள் வரப்பெற்றது. இம்மனுக்கள் மீது வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக் கல்வித்துறை, மின்சாரத்துறை, பேரூராட்சி, நகராட்சி மற்றும் சிறு தொழில்கள் துவங்க வங்கிக் கடன் மற்றும் மாதாந்திர உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வழங்கப்படும் அனைத்து நல திட்ட உதவிகளும் தகுதியான நபர்களுக்கு உடனடியாக வழங்கவும், அனைத்து கோரிக்கை மனுக்களுக்கும் 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். ஆட்சித்தலைவர்முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பார்வையிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)திரு.கோ.வேடியப்பன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) திருமதி.செண்பகவள்ளி, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் திரு.விஜயமோகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பிரசன்ன பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.கௌரிசங்கர், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் திரு.மகேந்திரன், உதவி பொறியாளர் திரு.சக்தி மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!