Home » தென்னை மற்றும் மா பூச்சி நோய் தாக்குதல் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் கள ஆய்வு.

தென்னை மற்றும் மா பூச்சி நோய் தாக்குதல் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் கள ஆய்வு.

by Poovizhi R
0 comment

தென்னை மற்றும் மா பூச்சி நோய் தாக்குதல் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் கள ஆய்வு.கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுபடிமாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட ஆலோசனையின்காவேரிப்பட்டினம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும்தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம், ஜீனூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் . கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கொண்ட குழு கரகூர் மற்றும் என் தட்டக்கல் கிராமங்களுக்கு நேரடியாக சென்று தென்னை மற்றும் மா சாகுபடி செய்யும் விவசாயிகளின் வயில்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தென்னை கருந்தலைப் புழுக்கான இயற்கை ஒட்டுண்ணிகளை வயலில் விடுதல் பற்றி எடுத்துக்கூறி செயல் விளக்கம் செய்து காட்டினர். மற்றும் தென்னை ரூகோஸ் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த நீல வண்ண அட்டை மற்றும் மஞ்சள் வண்ண அட்டை பொறிகளை வயல்களில் ஆங்காங்கே வைத்து கட்டுப்படுத்துதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது மேலும் கிரைசோபெரில்லா இயற்கை ஒட்டுண்ணியை ஒட்டுண்ணி உற்பத்தி மையத்தில் இருந்து பெற்று வயலில் விடுமாறு கேட்டுக் கொண்டனர் . மேலும் கோடை பருவத்தில் இயற்கை ஒட்டுண்ணிகளை அதிகப்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்தினால் நல்லது எனவும் பூச்சி மருந்து ஏதும் தெளிக்க தேவையில்லை எனவும் தெளிவுரை வழங்கினார்கள் அதுசமயம் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் திரு ராம கவுண்டர் மற்றும் கே ஆர் பி இடதுபுற கால்வாய் நீட்டிப்பு விவசாயிகள் சங்க தலைவர் திரு.சிவகுரு விவசாயிகளுடன் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!