அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள்அமைச்சருமான P.பாலகிருஷ்ண ரெட்டி அவர்களின் அறிக்கைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிருஷ்ணகிரி மேற்குமாவட்ட கழகத்தின் சார்பில் தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கு சீர்கேடுகளைக் கட்டுப்படுத்தத் தவறியவிடியா திமுக அரசைக் கண்டித்தும், இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பாலகிருஷ்ண ரெட்டி அவர்களின் தலைமையில்,29.05.2023 திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில்,ஓசூர் மாநகராட்சி, ராயக்கோட்டை சாலை மின்வாரிய அலுவலகம் எதிரில் , அனைத்து ஒன்றிய, நகர பேரூர் கழக செயலாளர்கள்முன்னிலையில், கழக துணை பொதுசெயலாளர் முன்னாள் அமைச்சர் திரு கே.பி.முனுசாமி அவர்களும் மற்றும் மாநிலங்களவை எம்பியும் கழக கொள்கை பரப்பு செயலாளருமான திரு மு.தம்பிதுரை ஆகியோர், ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டனபேரூரையாற்ற உள்ளனர்.அதுசமயம் கழக இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள், பொதுக்குழுஉறுப்பினர்கள், மற்றும் சார்பமைப்பு நிர்வாகிகள், கிளை கழக பொறுப்பாளர்கள்உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள் மற்றும்பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…
அரசியல்
ரூ.2 கோடியே 21 இலட்சம் மதிப்பீட்டில் போச்சம்பள்ளி அருகே மக்கள் நல திட்ட பணிக்கு பூமி பூஜை! தே.மதியழகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் ரூ.2 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாலேகுளி – சந்தூர் கால்வாயிலுள்ள மண்கரை தொட்டிப்பாலத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் குழாய் பதித்து தண்ணீர் கொண்டு செல்லும் பணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA அவர்கள் பூமிபூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். உடன் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அஇஅதிமுக ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது!துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி ஆலோசனைகளை வழங்கினார்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கழக துணை பொதுச்செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி அவர்கள் கலந்துகொண்டுஉறுப்பினர் சேர்க்கை விரிவு படுத்தவும்அதிமுக 50 ஆம் ஆண்டு மாபெரும் பிரம்மாண்ட பொன்விழா மற்றும் வெற்றிவிழா மாநாடுஆகியவை பற்றி நல்ல பல ஆலோசனைகளை வழங்கினார்,இந்த ஆலோசனை கூட்டத்தில்கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.அசோக்குமார்அவர்கள் முன்னிலயிலும் மாவட்ட அவை தலைவர்கே.பி.காத்தவராயன் தலைமையிலும்நடைபெற்றது.மேலும்முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்சமரசம்,ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி.எம்.தமிழ்செல்வன்,கிருஷ்ணகிரி பொதுக்குழு உறுப்பினர்கேபிஎம்.சதீஷ்குமார்நகர கழக செயலாளர்பிஎன்ஏ.கேசவன்,IT WING வேலூர் மனடல துணை செயலாளர்ராஜசேகரன்,மற்றும்மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக, கிளை கழக, சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
கைகளை இழந்த கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுமருதி மாணவர் கீர்த்தி வர்மா 10 ம் வகுப்பு பொதுதேர்வில் 437 மதிப்பெண் எடுத்து சாதனை! தே.மதியழகன் எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்து நிதிஉதவி அளித்தார்
திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கினங்க கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூர் கிராமத்தை சேர்ந்த 2 கைகளையும் இழந்த க்ரித்தி வர்மா என்ற மாற்றுதிறனாளி மாணவர், நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் MLA அவர்கள் மாணவனின் வீடிற்கு நேரில் சென்று தனது வாழ்த்துகளை தெரிவித்து, பரிசு தொகை வழங்கினார். உடன் மாவட்ட அவைத் தலைவர் TA.நாகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.டி.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர்கள் BK.கோவிந்தசாமி, திருமதி.சாவித்திரி கடலரசு மூர்த்தி, பொதுக் குழு உறுப்பினர் அஸ்லாம், நகர செயலாளர் SK.நாவப், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தன், தனசேகரன்,மற்றும் சங்கர், அன்பரசன் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.
பெங்களூருவில் தமிழக முதல்வரை கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளர்கள் தே.மதியழகன் – ஒய். பிரகாஷ் வரவேற்றனர்
பெங்களூரில் இன்று நடைபெற உள்ள புதிய காங்கிரஸ் ஆட்சி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று இரவு பெங்களூர் வந்தடைந்தார். அவரை கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள் தே.மதியழகன் எம்எல்ஏ, ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முன்னாள் வேப்பனப்பள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.முருகன் உடனிருந்தார்.
கைகள் இல்லாமல் தன்னம்பிக்கையோட பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் 438 மதிப்பெண் எடுத்த கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர் கீர்த்திவர்மா-வை வாழ்த்தி பாராட்டி நிதி உதவி செய்த அஇஅதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் மாவட்ட செயலாளர் கே.அசோக்குமார் எம்எல்ஏ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூனூர் கிராமத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆரம்ப காலத்து கிளைக் கழகச் செயலாளர் வெங்கடாசலம் அவர்களுடைய பேரன் கீர்த்தி வர்மா அவர்களுக்கு இரண்டு கைகளும் இல்லை. அவர்களுடைய தாயின் அரவணைப்பில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். அவர்களுடைய செயலை போற்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி அவர்களும் மாவட்டக் கழகச் செயலாளர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் கே. அசோக்குமார் அவர்களும் மாணவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாணவனுக்கு நிதி உதவி அளித்து மேற்கொண்டு படிக்கும் படிப்பிற்கு உதவுவதாக கூறினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பகுதி கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியில் அஇஅதிமுக ஒபிஎஸ் அணியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
அஇஅதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் கிருஷ்ணகிரி சேலம் ரோடு மீனாட்சி மஹாலில் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம்.MLA,PH.மனோஜ்பாண்டியன்,MLA உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் வி.கோவிந்தராஜ் Ex.MLA தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் கோவிந்தராஜ், முனியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு சவால் விட்டிருக்கும்… ஓபிஎஸ் அணி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். வைத்தியலிங்கம்
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு சவால் விட்டிருக்கும்… ஓபிஎஸ் அணி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். வைத்தியலிங்கம்தருமபுரியில் அதிமுக ஓபிஎஸ் அணி கழக செயல்வீரர்கள் மற்றும் செயல்வீராங்கனைகள் ஆலேசானைக்கூட்டம் நடைபெற்றது… கூட்டத்திற்கு பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் இணை ஒருங்கிணைப்பாளருமான ஆர். வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது…அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் ஒரிஜனல் அதிமுக காரர் கிடையாது, திமுகவிலிருந்து வந்தவர்… தினகரனிடம் வேலை பார்த்தவர் தான் காமராஜ், என்னை பற்றி பேசுவதற்கு எந்த யோக்கியதையும் காமராஜூக்கு இல்லை, ஒரே மேடையில் அதிமுக பற்றியோ, அரசியல் பற்றியோ, அவரது குடும்பத்தை பற்றியோ விவாதிக்க தயார் எங்கே எப்போது தேதி செல்லட்டும்….காமராஜை சொந்த தொகுதியில் மன்னார்குடியில் நின்று டெபாசிட் வாங்கி காட்டட்டும், பார்க்கலாம்..சசிகலாவை விமர்சனம் செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டபோது, அதற்கு பதில் எதும் அளிக்காமல் வேறு கேள்வி கேளுங்கள் என கடந்து சென்றார்.. வைத்தியலிங்கம்..அதிமுக கொடியை கட்டக்கூடாது என நீதிமன்றம் சொல்லவில்லை.. ஜன நாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், மாநாடு நடத்தலாம் ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு என்றார். இடைமறித்த பெங்களூர் புகழேந்தி காமராஜ் ஜெயலுக்கு போவது உறுதி என்று கூறினார்.
ஒசூர் மாநகரில் பகுதி வாரியாக நடைப்பெற்ற அதிமுக செயல்வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை கூட்டத்தில் பி.பாலகிருஷ்ணரெட்டி ஆலோசனை வழங்கினார்
ஒசூர் மாநகரில் பகுதி வாரியாக நடைப்பெற்ற அதிமுகவின் செயல்வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரில் பகுதி வாரியாக அதிமுகவின் செயல்வீரர் வீராங்கனைகள் கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்கள் நடைப்பெற்றதுஒசூர் மேற்கு பகுதி அதிமுக சார்பில் முனீஸ்வர்நகரில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு பகுதி செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான மஞ்சுநாத் தலைமை வகித்தார்பாகலூர் அட்கோ பகுதியில் வடக்கு பகுதி சார்பில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு மாநகர நகரமைப்புக்குழு தலைவரும், பகுதி செயலாளருமான அசோகா தலைமை வகித்தார்கிழக்கு பகுதி சார்பில் தேர்ப்பேட்டையில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ராஜா என்கிற ராஜீ தலைமை வகித்தார்ஆலோசனை கூட்டங்களில் முன்னாள் அமைச்சரும்,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் பங்கேற்று அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைகளை வழங்கி திட்டங்களை வகுத்து தந்தார் உடன் எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் சந்திரன், நாராயண ரெட்டி,வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகி வெங்கடாசலம், கந்தப்பன்,வட்ட கழக செயலாளர்கள் குபேரன் என்கின்ற சங்கர், சிவக்குமார்,ரகுமான்,பாபு ஆனந்த், நந்தகுமார், ஹரி பிரசாத்,சீனிவாசன்,ஹரி, பிரசாந்த்,லக்கப்பா,மோகன் ரெட்டி, சீனிவாசன்,சூடப்பா,நட்ராஜ், லோகப்பா, நடராஜன்,சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள் முரளி, ரமேஷ், பாலுசாமி முருகன் , என கலந்து கொண்டனர்
பாலக்கோடு மத்திய ஒன்றியத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கையை மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் ஆய்வு செய்தார்
பாலக்கோடு மத்திய ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கையை ஆய்வு செய்த மாவட்ட செயலாளர்.பாலக்கோடு மே 17; தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த தலைமைக் கழகம் சார்பில் 1 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணைத்துள்ள நிலையில் மாவட்டம் முழுதும் உள்ள பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பேரூர் கழகச் செயலாளர்களை அதிகப்படியான புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து முழு நேரமாக உறுப்பினர் சேர்க்கையை ஆய்வு செய்து வருகிறார். அதனையோட்டி பாலக்கோடு மத்திய ஒன்றியம் அமானி மல்லாபுரம், செம்மன அள்ளி,சீரியம்பட்டி, உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இதில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர் படிவங்களை ஒன்றிய கழக செயலாளர் முனியப்பன் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் வக்கீல் மணி, ராஜகுமாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் சையத் முர்த்துஜா, மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி ரவி, விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் ஆனந்தன், அவைத் தலைவர் இராஜாமணி, சுற்றுச்சூழல் அணி செழியன், கவுன்சிலர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் சேட்டு (எ) சேகர், ஜ.டி விங்க் தமிழரசன், ஆதம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.