கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் அ.யுவராஜ் தலைமையில் ஒசூர் ஆந்திரா சமிதியில் நடைபெற்றது. இந்த செயற்க்குழு கூட்டத்தில் ஓசூர் மாநகர செயலாளரும் மேயருமான எஸ்.ஏ.சத்யா, முன்னாள் எம்எல்ஏ பி.முருகன் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் சிறப்புரையாற்றினார். கட்சி வளர்ச்சி பணிகள், கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கலந்தாலோசித்தார்.இந்த செயற்குழு கட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி செயலாளர்கள், நிர்வாகிகள், ஒன்றிய குழு, மாமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள், கிளை தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துனை தலைவர்கள், வார்டு செயலாளர்கள். கிளை செயலாளர்கள், கழக தோழர்கள் எனபெரும்திரளாக கலந்து கொண்டனர்.
அரசியல்
சூளகிரியில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்தநாள் விழா! கே.பி.முனுசாமி நலதிட்ட உதவிகளை வழங்கினார்
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூளகிரியில் துணை பொதுச்செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே்பி்முனுசாமி அவர்கள் கழகக் கொடியினை ஏற்றி வைத்து நலிவுற்ற குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்கள் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடைகள் வழங்கி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கழகச் செயலாளர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் அவர்கள் தலைமையேற்று ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி எம் தமிழ் செல்வம் அவர்கள் முன்னிலை வகிக்கவும் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் ஒன்றிய கழகச் செயலாளர்கள் ஒன்றிய பேரூர் கிளைக் கழக பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்
கிருஷ்ணகிரி எம்பி செல்லகுமார் அவர்களிடம் கெலமங்கலம் பேரூராட்சி கவுன்சிலர்கள் தொகுதி நிதி ஒதுக்கவேண்டுமென கோரிக்கை
கெலமங்கலம் வந்த கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லகுமார் எம்பி அவர்களிடம் மக்கள் பணிக்காக நிதி ஒதுக்கி தரவேண்டுமென கெலமங்கலம் பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் சாதிக்பாஷாவுடன் பேரூராட்சி கவுன்சிலர்கள் கேஆர்இ.நாகராஜ், சண்முகம், எம் நாகராஜ் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது!மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் MLA அறிவிப்பு
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல்அறை கட்டுவதற்கு பூமி பூஜை,கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றி தமிழ் தொடக்கப்பள்ளியில் சமையலறை கட்டுவதற்கு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் அவர்கள் நிதியிலிருந்து 8.40000 ரூபாய் மதிப்பில் சமையலறை கட்டுவதற்கு பூமி பூஜை செய்தனர்,இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி காங்கிரஸ் மாவட்ட தலைவர் மற்றும் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி ஐந்தாவது வார்டு மன்ற உறுப்பினர் அப்துர்ரஹ்மான், ஆணைகாளூ ஊராட்சி தலைவர் சங்கீதா வெங்கட்ராமன், கெலமங்கலம் தேர்வு நிலை பேரூராட்சி முன்னாள் மன்ற துணைத் தலைவர் சாதிக் பாஷா, காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் வெங்கடேஷ், புருஷோத்தமன், மெட்டரை ஊராட்சி தலைவர், திமுக கெலமங்கலம் நகர செயலாளர் தஸ்துகிர், மாவட்ட பிரதிநிதி அலெக்ஸ், மற்றும் மிதுன் சக்கரவர்த்தி, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் ராமச்சந்திர அப்பா, மஞ்சு, சுரேஷ், பள்ளி சத்துணவு அமைப்பாளர் ராஜ் அண்ணா மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை பைரமங்கலம் கிராமத்தில் கொண்டாடினார்கள்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை பைரமங்கலம் கிராமத்தில் கொண்டாடினார்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி. இராமச்சந்திரன், அவர்களின் அறிவுறுத்தலின்படி,மாநில விவசாய அணி துணை தலைவர் லகுமைய்யா, அவர்களின் வழிகாட்டுதலின்படி பைரமங்கலம் கிராமத்தில் கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை முன்னிட்டு பட்டாசு உடைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மேள தாளத்தோடு பைரமங்கலம் கிராமத்தில் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் ஸ்ரீனிவாசன் தலைமையில் கொண்டாடினார்கள்.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்ஊராட்சி மன்ற உறுப்பினர் ராம்பாபு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பைரமங்கலம் கிளைத்தலைவர் வெங்கடேஷ், மாதர் சங்க தலைவி எல்லம்மா, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள்,ஊர் பொதுமக்கள்,இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பன்னிஅள்ளி கிராமத்தில் ரூ.3.20 இலட்டம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ பூமி பூஜை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பன்னிஹள்ளி கிராமத்தில் 35 வீடுகளுக்கு புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு 15வது நிதிக்குழு மானிய நிதி மற்றும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முன்னாள் அதிமுக அமைச்சர், கே.பி.அன்பழகன் 3இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிக்குபூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியசெயலாலர்கள் வக்கில்செந்தில், கோபால், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், பாலக்கோடு நகர செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர் சுப்ரமணி, வீரமணி, சரவணன், அதிமுக தகவல் தொழில்நுட்ப செயலாளர்கள் ராஜா, துனைசெயலாளர் அசோக் மற்றும் அதிமுக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
காணொலி காட்சி வாயிலாக திமுக தலைவருடன் காணொலி காட்சி வாயிலாக தே.மதியழகன் எம்எல்ஏ கலந்துரையாடினார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்மாவட்டக் கழகச் செயலாளர்கள் – தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோருடன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம்எல்ஏ காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடினார்.
கர்நாடக காங்கிரஸ் வெற்றியை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸார் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
கர்நாடக சட்டமற்ற தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சேகர் தலைமையில் நடைப்பெற்ற இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின்போது முன்னாள் மாவட்டத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி,காசிலிங்கம், நாஞ்சில் ஜேசு, நாரயணமூர்த்தி,நகரத் தலைவர்கள் லலித் ஆண்டனி, முபாரக், SC ST துறை மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்ரமணி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர்கள் லலித் ஆண்டனி, முபாரக், மாவட்ட செயலாளர் ஹரி, முன்னால் நகரத் தலைவர்கள் வின்செண்ட், ரமேஷ் அர்னால்டு, சுந்தரமூர்த்தி,மார்டின் ராஜ், உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்கள்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் – மாவட்ட செயலாளர் தே.மதியழகன் எம்எல்ஏ அறிக்கை
கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டத்தில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டங்கள் மே 7-ஆம் தேதி முதல் 3 நாள்கள் நடைபெறுகின்றன. இது குறித்து திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் ஆணைப்படி, தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுக் கூட்டங்கள் மே 7 முதல் 9-ஆம் தேதி வரையில் 3 நாள்கள் நடைபெறுகின்றன. அதன்படி, ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் கல்லாவி பேருந்து நிலையம் அருகே மே 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தே.மதியழகன் எம்எல்ஏ பேசுகிறாா். கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி பாரத கோயில் அருகே மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா் குடியாத்தம் குமரனும், மத்தூா் வடக்கு ஒன்றியம், குன்னத்தூரில் மாலை 5.30 மணிக்கு தலைமைக் கழகப் பேச்சாளா் கருணாநிதியும், காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம் அகரம் பிரிவு சாலையில் மாலை 6 மணிககு தலைமைக் கழகப் பேச்சாளா் வயலூா் கிருஷ்ணமூா்த்தியும் பேசுகின்றனா். மே 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியம் பையூா் பெரியாா் சிலை அருகில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தே.மதியழகன் எம்எல்ஏவும், மத்தூா் தெற்கு ஒன்றியம் சாமல்பட்டியில் மாலை 5.30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா் சூா்யா வெற்றி கொண்டானும், ஊத்தங்கரை மத்திய ஒன்றியம் மிட்டப்பள்ளியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா் தமிழ் கொண்டானும் பேசுகின்றனா். மே 9-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பா்கூா் தெற்கு ஒன்றியம் ஜெகதேவியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தமிழக துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசுகிறாா். அன்றைய தினம் போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகே மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ். பாரதியும், கிருஷ்ணகிரி நகரில் வட்டச் சாலை அருகே நடைபெறும் கூட்டத்தில் தே. மதியழகன் எம்எல்ஏ, ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம் மகனூா் பட்டியில் நடக்கும் கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா் சுபா சந்திரசேகரும், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம் குருபரப்பள்ளி கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா் பிரம்மபுரம் பழனியும், பா்கூா் வடக்கு ஒன்றியம் ஒப்பதவாடி கூட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளா் தா.பழூா் இளஞ்செழியனும் பேசுகின்றனா். இந்த பொதுக் கூட்டங்களுக்கு தொடா்பாக கட்சியின் பல்வேறு கட்ட நிா்வாகிகள் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்திட வேண்டும். கூட்டங்கள் சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளையும் ஒருங்கிணைக்க வேண்டும் என அதில் அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
சேலத்தில் இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான நேர்காணல் நடத்தினார். இளைஞர் அணியின் மாநில துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற நேர்காணலில் ஓசூர் மாநகர இளைஞர்அணி அமைப்பாளர் டி சுமன் கலந்துகொண்டார்.