கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அவர்களின் எளிமை கண்டு வியந்த மக்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் ஆவத்துவாடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியண்ணன் ஈஸ்வரி மற்றும் குமாரன் அலமேலு அவர்களின் இல்ல குடும்ப திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் அலுவலக முன்னாள் ஊழியர் இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் மணமக்களான தமிழ்மொழி நவீன்குமார் ஆகியோரை வாழ்த்தினார். திருமண விழாவிற்கு வந்திருந்தத உறவினர்கள் பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவரின் எளிமையான செயல்பாடுகளால் வியந்து பாராட்டினர்
Breaking News
தளி வட்டாரத்தில் தென்னையில் கருந்தலைப்புழுக்களை கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு.
தளி வட்டாரத்தில் தென்னையில் கருந்தலைப்புழுக்களை கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வுதளி வட்டாரத்தில் தென்னையை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகளுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி நிலைய வல்லுநர்கள் கள ஆய்வு செய்தனர்.தென்னையை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் காணப்படும் தென்னை விவசாயிகளின் நிலங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் முனைவர்.கோபாலகிருஷ்ணன் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களான வேளாண்மை உதவி இயக்குநர் திரு.சி.முருகன், வேளாண்மை அலுவலர் திரு.சி.சுப்ரமணி, உதவி வேளாண்மை அலுவலர்களுடன் கூட்டாக தீவிர வயலாய்வு மற்றும் உழவர் அலுவலர் தொடர்பு கூட்டம் கோட்டமடுகு, தளிகொத்தனூர், கக்கதாசம் போன்ற கிராமங்களில் நடத்தப்பட்டது.இந்த கள ஆய்வில் தென்னையின் முக்கிய பூச்சிகளான கருந்தலைப்புழு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, மற்றும் முக்கிய நோய்களின் சேத அறிகுறிகள் மற்றும் பூச்சிகளை காட்சிப்படுத்தப்பட்டது. முக்கிய தெழில்நுட்பங்களான மஞ்சள் அட்டை ஒட்டுதல், தண்ணீரை விசையோடு அடித்தல், ஒட்டுண்ணி, இரை விழுங்கி விடுதல், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டு காரணிகள் வழங்கப்படும் இடங்கள், அவற்றின் விலை பற்றி விவசாயிகளுக்கு கூறினர். மற்றும் ஒருங்கிணைந்த உரம், நோய் மேலாண்மை முறைகள் மற்றும் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு கூறினர். கள ஆய்வில் தென்னையை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் தொடர்பான துண்டு பிரசுரங்கள், விவசாயிகள் கையேடு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விவசாயிகள் தென்னை சாகுபடி குறித்து சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
பாஜக தேசிய தலைவருடன் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமிஷா அவர்களை புதுடெல்லியில் நேரில் சந்தித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கூட்டணி மற்றும் தமிழகத்தில் நடைபெறும் திமுக அரசின் செயல்பாடுகளையும் பற்றி கலந்த ஆலோசித்தார்கள். கழக துணை பொதுச்செயலாளர் கே. பி.முனுசாமி அவர்களும் தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் கே.அண்ணாமலை அவர்களும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.5 கோடியே 18 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளி, ஜூஜூவாடி, ஆனந்த்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.5 கோடியே 18 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.04.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளி, ஜூஜூவாடி, ஆனந்த்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.5 கோடியே 18 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் இன்று (19.04.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.48 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடம் மற்றும் சுற்றுசுவர் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகள் தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, அந்திவாடி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி பிரிவு, அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், நடைபாதை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு விளையாட்டு மைதானத்தில் கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் வருவாய் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ஏ.எஸ்.டி.சி ஹட்கோவில் 2021 -2022 ம் நிதியாண்டில் 15-வது நிதிக்குழு மான்ய நிதியில் ரூ.25 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குப்பை தரம் பிரிக்கும் கட்டிட கட்டுமான பணிகளையும், நுண்ணுயிர் செயலாக்க மையத்தில் மாநகராட்சியிலிருந்து நாள்தோறும் 5 முதல் 7 டன் வரை சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணிகளையும், உரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பதிவேடுகளையும், பணியாளர்கள் விவரங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ஜூஜூவாடி பகுதியில் 2022-2023 -ம் நிதியாண்டில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் (Tied) கீழ் ரூ.2 கோடியே 50 இலட்சம் மதிப்பில் 10 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அமைக்கப்பட்டு வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நீர்த்தேக்க தொட்டியின் கட்டுமான பணிகள் தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைந்து வழங்க வேண்டும் என மாநகராட்சி பொறியாளர்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் உத்தரவிட்டார். மேலும், ஜூஜூவாடி ரூ.25 இலட்சம் மதிப்பில் 15-வது நிதிக்குழு மான்ய திட்டத்தின் கீழ் நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ஆனந்த் நகரில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் தலா ரூ.85 இலட்சம் வீதம் ரூ.1 கோடியே 70 இலட்சம் மதிப்பில் குப்பை தரம் பிரிக்கும், 2 கட்டிடங்களின் கட்டுமான பணிகளையும், குப்பைகள் தரம் பிரித்து, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் உபயோகப்படுத்தும் வகையில் மூலப்பொருட்களாக மாற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, ஓசூர் மாநகராட்சி ஆணையர் திருமதி.த.சினேகா இ.ஆ.ப., ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.ஆர்.சரணியா இ.ஆ.ப., மாநகர் நல அலுவலர் மரு.அஜித்தா, உதவி செயற்பொறியாளர் திரு.சீனிவாசன், மாநகராட்சி பொறியாளர் திரு.ராஜேந்திரன், வட்டாட்சியர் திரு.சுப்ரமணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், வருவாய் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 21.04.2023 அன்று நடைபெற உள்ளது
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை நிறுவனங்களும் -தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள வேலைநாடுநர்களும் கலந்து கொள்ளும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2104.2023 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருதீபக் ஜேக்கப் இஆப, அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையான 21042023 அன்று காலை 10.00 மணி அளவில் இவ்வலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது ஒரு இலவச பணியே ஆகும். இதனால் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது.
இம்முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தகுதி உள்ள வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் SSLC, HSC ITI DIPLOMA மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் தங்களுடைய சுயவிவரத்துடன் (BIO.DATA) கலந்து கொண்டு பயனடையலாம் என
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருதீபக் ஜேக்கப் இஆப., அவர்கள்
தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் பர்கூரில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சுமார் இரண்டு கோடி சேர்க்கை பணியினை நேற்று முன்தினம் சென்னையில் துவக்கிவைத்தார்.. இதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் பர்கூரில் அதிமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
பர்கூர் வடக்கு ஒன்றிய அதிமுக அலுவலகத்தில் ஒன்றிய செயலாளரும், முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் மான சி.வி.ராஜேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்சிக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட முன்னால் அதிமுக அமைச்சரும், மேற்கு மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும் மான பாலகிருஷ்ணாரெட்டி கலந்துக்கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கைகான விண்ணப்படிவங்களை வழங்கி அதிமுக கட்சியைப் மீண்டும் பர்கூரில் அதிப்படியான உறுப்பினர் சேர்த்த சட்டமன்றத் தொகுதியாக இருக்க அனைவரும் முனைப்புடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனை அடுத்து அதிமுகவினர் புதிய உறுப்பினர் சேர்க்கும் விண்ணப்ப படிவங்களை கழக நிர்வாகிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
அப்போது மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், ஜெயபாலன், முன்னால் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மாதையன், மாவட்ட மாணவரணி செயலாளர் வெற்றிச்செல்வன், நகர செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..
மேலும் இந்த நிகழ்ச்சியின்போது தகவல்தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், கவுன்சிலர், முரளி, தூயமணி,பழனி சரவணன், திருமால், வெள்ளையன், சக்ரவர்த்தி, உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்கள்.
கே.பி.முனுசாமி MLA அவர்கள் கிருஷ்ணகிரி ரவுண்டனாவில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்
இன்று (07/04/2023) அஇஅதிமுக துணை பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி MLA அவர்கள் கிருஷ்ணகிரி ரவுண்டனாவில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.அசோக்குமார் MLA அவர்கள் முன்னிலையிலும் நகரக் கழகச் செயலாளர் பி.என்.ஏ.கேசவன் தலைமையில் நடைபெற்றது.
வெயில் காலத்தில், வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களின் தாகம் தனியும் பொருட்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து தர்பூசணி பழம், மோர், தண்ணீர், குளிர்பானம், சாத்துக்குடி, வெள்ளரிக்காய் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் காத்தவராயன், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர்களும், சார்பு அணி நிர்வாகிகளும், மாவட்ட / ஒன்றிய / நகர கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் குப்பையும் செல்வமாகும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது
பாலக்கோடு பேரூராட்சியில் குப்பையும் செல்வமாகும் விழிப்புணர்வு பேரணி.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டு பகுதிகளில் நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், சுகாதாரத்தை பேணி காக்கவும் நகர தூய்மை இயக்கத்தின் சார்பில் குப்பையும் செல்வமாகும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலகத்தில் குப்பையும் செல்வமாகும் , திடக்கழிவு மேலாண்மை செயலாக்கம் ஆகிய செயல்பாடுகள் குறித்த கண்காட்சி நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து ஜீரோ வேஸ்ட் உணவு விழிப்புணர்வு வாகன பேரணியை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஊர்வலமானது, பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி, கடைத்தெரு, ஸ்தூபி மைதானம், பஸ் நிலையம், எம்.ஜிரோடு மற்றும் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் போது உணவு வீண் செய்ய கூடாது, குப்பைகளை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து பேரூராட்சி தூய்மை காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் மேலும் பேரூராட்சியில் உள்ள குப்பை மற்றும் குறைகளை தெரிவிக்க ஸ்வச்சதா செயலி மூலம் தெரிவிக்க கேட்டுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, துப்புவு மேற்பார்வையாளர் ரவீந்திரன், துணைத் தலைவர் தாஹசீனா இதயாத்துல்லா, கவுன்சிலர்கள் விமலன் ரூஹித், குருமணி, பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொன்டனர்.
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன நிகழ்ச்சியை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி வினாடி வினா கருத்தரங்கம் ஆகியவை நடத்தப்பட்டன நிகழ்ச்சிகளுக்கு பேராசிரியர் டாக்டர் வேல்சாமி வரவேற்புரை நிகழ்த்தினார் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் டாக்டர் ஜெகன் மற்றும் ஸ்டீபன் விக்டர் ஆன்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் தனபால் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பவுன்ராஜ் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பைகளை பரிசாக வழங்கினார் கருத்தரங்கில் அவர் பேசும் போது நெகிழிப் பைகளால் நமது பூமி எவ்வாறு கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பதையும் நெகிழிப் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார் கல்லூரி முதல்வர் பேசும் போது மஞ்சப்பை குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பாராட்டு தெரிவித்தார் நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் டாக்டர் கரோலின் ரோஸி டாக்டர் ராஜலக்ஷ்மி திரு ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் நூலகர் டாக்டர் தனசீலன் நன்றி கூறினார் நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயகாந்த் செய்திருந்தார்.
ஓசூரில் 200 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெரும் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 31-3-2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வருகின்ற வெள்ளிக்கிழமை ( 31-03-2023) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 31-03-2023 அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 3.00 மணிவரை முகாம் நடைபெற உள்ளது. 200 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளனர். 5-ம் வகுப்பு முதல், பட்டம் படித்தவர்கள் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். முகாமில் பங்கேற்க வருபவர்கள் கல்வி சான்றிதழ் நகல்கள், சுய விபரம், ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் கொண்டுவரவேண்டும். வேலை வாய்ப்பு அற்ற கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் இளைஞிகள் இவ்வாய்ப்புகளை பயன்படுத்தி பயனடையுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்