பாலக்கோடு நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கவிதா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாரண்டஅள்ளி நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படுவதாக தகவல் .தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நெடுஞ்சாலைதுறை கோட்டப் பொறியாளர் கவிதா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, மாரண்டஅள்ளி – பஞ்சப்பள்ளி நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள், வணிக வளாகங்கள், ஆகியவற்றை வரும் மே.29 ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் வரும் மே.30 ம் தேதி ஜே.சி.பி மூலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடம் மீட்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் 2ம் நாள் ஜமாபந்தி கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் நஜீரி இக்பால் தலைமையில் நடைப்பெற்றது.
பாலக்கோடு வருவாய் கோட்டத்தில் நில அளவீடு சங்கிலிகளை பார்வையிட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் நஜீரி இக்பால்தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் 2ம் நாள் ஜமாபந்தி கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் நஜீரி இக்பால் தலைமையில் இன்று நடைப்பெற்றது.இதில் பாலக்கோடு வருவாய் கோட்டத்திற்க்குட்பட்ட எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சிக்கார்தன அள்ளி, பி.செட்டி அள்ளி, கரகதஅள்ளி உள்ளிட்ட 15 கிராமங்களுக்கான பசலி1432க்கான தீர்வாயத்தில் வரவு – செலவு கணக்குகள், பட்டா, சிட்டா மாறுதல், முதியோர் உதவிதொகை உள்ளிட்ட 50 மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் நஜீரிஇக்பால் அவர்களிடம் வழங்கினார்கள், மேலும் பொதுமக்களிடம் ஆன்லைன் வழியாக பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணவும், வேளாண் துறையில் விவசாயிகளுக்கு தேவையான சொட்டு நீர் பாசனம், வேளாண் இடுபொருட்கள் முழுமையாக சென்றடைந்தனவா என கோப்புகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த முகாமில் தாசில்தார் ராஜா, வட்டவழங்கல் அலுவலர் பழனி, வருவாய் அலுவலர் ரவி, வி.ஏ.ஓக்கள் சாம்ராஜ், சத்யா, மாதப்பன், மாதேஷ், குமரன் சர்வேயர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
ரூ.2.50 இலட்சம் மதிப்பில் காரிமங்கலம் ஒன்றிய ஏ.முருக்கம்பட்டி ஊராட்சி 20-வது வார்டில் ஆள்துளை கிணறு
காரிமங்கலம் ஒன்றியம் ஏ.முருக்கம்பட்டி ஊராட்சி 20வது வார்டில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல் தலைமையில் தொடங்கப்பட்டது. 15வது மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊர் பிரமுகர்கள் கிருஷ்ணன் மாதப்பன் முனியப்பன் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மகேந்திரமங்கலத்தில்யில் கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி சாவு.
மகேந்திரமங்கலத்தில் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்த கூலி தொழிலாளி சாவு.பாலக்கோடு, மே.24-தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி குபேந்திரன் (வயது.37), இவரது மனைவி ரங்கநாயகி(வயது. 26)இவர்களுக்கு திருமணமாகி 7 வருடமாகிறது 4 வயதில் ஒரு மகன் . உள்ளார்.குபேந்திரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் மாலை வேலைக்கு சென்று விட்டு குடிபோதையில் வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தவர் வீட்டிற்க்கு அருகே உள்ள சங்கு என்பவரின் 40 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார்.இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றின் ஆழத்தில் இருந்து குபேந்திரனை சடலமாக மீட்டனர்.தகவலறிந்த மகேந்திர மங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தி 70 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு.
பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் நடைப்பெற்ற ஜமாபந்தியில் 70 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு.பாலக்கோடு, மே.24-தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி கூட்டம் மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் நஜீரி இக்பால் தலைமையில் நடைப்பெற்றது.இதில் பாலக்கோடு வருவாய் கோட்டத்திற்க்குட்பட்ட புலிக்கரை பிர்காவிலுள்ள செல்லியம்பட்டி, பி.கொல்லஅள்ளி, செக்கோடி, பூகானஅள்ளி, காட்டனஅள்ளி, பாப்பிநாயக்கனஅள்ளி, மோது குலஅள்ளிஉள்ளிட்ட கிராமங்களுக்கான பசலி1432க்கான தீர்வாயத்தில் வரவு – செலவு கணக்குகள், பட்டா, சிட்டா மாறுதல், முதியோர் உதவிதொகை உள்ளிட்ட 70 மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேரடி உதவியாளர் நஜீரிஇக்பால் அவர்களிடம் வழங்கினார்கள், மேலும் பொதுமக்களிடம் ஆன்லைன் வழியாக பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணவும், வேளாண் துறையில் விவசாயிகளுக்கு தேவையான சொட்டு நீர் பாசனம், வேளாண் இடுபொருட்கள் முழுமையாக சென்றடைந்தனவா என கோப்புகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இந்த முகாமில் தாசில்தார் ராஜா, வட்டவழங்கல் அலுவலர் பழனி, வருவாய் அலுவலர் ரவி, வி.ஏ.ஓக்கள் சாம்ராஜ், மாதப்பன், சின்னசாமி, சர்வேயர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
விது அகடாமி சாதனையாளர்கள் பாராட்டு விழாவில் தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன்
தருமபுரி மாவட்டம் நெசவாளர் காலணியில் புதியதாக துவங்கி ஒராண்டில் விது அகடாமியில் நீட் பயிற்சி பெற்று ஏழு மாணவர்கள் தமிழ்நாட்டில் மருத்துவர் படிப்பிற்கு பல்வேறு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. அவர்களை பாராட்டி சான்றிதழ்களை தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் வழங்கினார். அகாடமி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்க விழா
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. மாவட்ட தனி துணை ஆட்சியர் சாந்தி தலைமை வகித்து ஜமாபந்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். காரிமங்கலம் பிர்காவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் இருந்து பட்டா மாறுதல், பட்டா திருத்தம், முதியோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 125க்கும் மேற்பட்ட மனுக்கள் தரப்பட்டது. தொடர்ந்து இன்று 24 ஆம் தேதி கம்பைநல்லூர் பிர்காவிற்கும் நாளை 25ஆம் தேதி பெரியாம்பட்டி பிர்காவிற்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது. தாசில்தார் சுகுமார், பேரூராட்சி சேர்மன் மனோகரன், வட்ட துணை ஆய்வாளர் ஜாகிர் உசேன், வட்ட சார் ஆய்வாளர் குமரவேல்,வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரன், ஆர் ஐ மணி, கவிப்பிரியா, விஏஓ க்கள் கதிரவன், அசோக், சிலம்பரசன், கணேசன், முருகன், மோகன் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாரண்டஅள்ளி கணபதி நகரில் குடியிருந்த வீட்டை இடிக்க வந்த மாரண்டஹள்ளி பேரூராட்சி தலைவர் – பாஜக நிர்வாகி கதறல்..
மாரண்டஅள்ளி கணபதி நகரில் குடியிருந்த வீட்டை இடிக்க வந்த பேரூராட்சி தலைவர் – பாஜக நிர்வாகி கதறல்..தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி கணபதி நகரில் குடியிருந்து வருபவர் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் குணா,இவர் தனது சொந்த நிலத்தில் புதியதாக 4 ஏக்கரில் குடியிப்பு லே அவுட் அமைத்து அதற்கு அங்கீகாரம் பெற பூங்கா அமைக்க பேரூராட்சி நிர்வாகத்திற்க்கு ஒரு பகுதி நிலத்தை ஒதுக்கி தந்துள்ளார்,பூங்காவிற்க்கு ஒதுக்கப்பட்ட இடத்தையொட்டி வீடு கட்டி குடியிருந்து வருகிறார்.லே-அவுட்டிற்க்கு அங்கீகாரம் தருவதாக நிலத்தை பெற்றுக் கொண்ட பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வந்தது,இதனை தட்டி கேட்ட குணா மீது காழ்புணர்ச்சி கொண்ட பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக் கணி ஆகியோர் போலீசாரின் உடந்தையுடன் காலை பொக்லைன் எந்திரத்துடன் சென்று வீட்டை இடிக்க சென்றனர்.இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த குணா இது சம்மந்தமாக கோர்ட்டில் வழக்கு இருப்பதாகவும் வழக்கு முடியும் வரை அவகாசம் வேண்டும் என கோரியிருந்தார்.இது சம்மந்தமாக போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த அதே வேளையில் சற்றும் எதிர்பாராத விதமாக பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக் கணி மற்றும் தலைவர் வெங்கடேசன் ஆகியோரின் கண் அசைவில் பொக்லைன் எந்திரம் மூலம் வீட்டின் ஒரு பகுதியை இடித்து தள்ளினர்.இதனை கண்டு குணா மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் வடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக ஓடினர்.இதனால் அதிகாரிகள் மீதி வீட்டை இடிக்காமல் திரும்பி சென்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 15டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் – விவசாயிகள் மகிழ்ச்சி
பாலக்கோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 15டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் – விவசாயிகள் மகிழ்ச்சிதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான மாரண்டஅள்ளி, அமானிமல்லாபுரம், பெல்ரம்பட்டி, காரிமங்கலம், அத்திமுட்லு, சாஸ்திர முட்லு, கும்மானூர், பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர். தொடர் மழை பெய்ததால் தேங்காய் உற்பத்தி அதிகரித்த நிலையில் பாலக்கோடு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 15டன் கொப்பரை தேங்காய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டில் விலை குறைவாக இருப்பதினால் மத்திய அரசின் விலை ஆதார திட்டத்தின் கீழ் ஒரு கிலோ கொப்பரை தேங்காய் 108.60 ரூபாய்க்கு அதிகாரிகள் கொள்முதல் செய்தனர்.உரிய விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கொப்பரை தேங்காய் கொள்முதல் நடைபெறும் எனவும் ஒரு மாதத்திற்குள் 100 முதல் 200 டன் வரையிலும் அதிகபட்சமாக ஆயிரம் டன் வரையிலும் கொப்பரை தேங்காய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் எனவும் விவசாயிகள் பயனடையுமாறு வேளாண்மை துணை இயக்குநர் பாலசுப்ரமணியம் கேட்டுக் கொண்டார். கொப்பரை தேங்காய் கொள்முதலின் போது வேளாண்மை மேற்பார்வையாளர் பிரியா, வேளாண்மை அலுவலர் முருகன், உதவி வேளாண்மை அலுவலர்கள் செல்வம், சத்யா, முனியப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
Dr.AMR கிரிக்கெட் கோப்பைக்காக பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடல் சீரமைக்கும் பணியினை ஜி.கே.மணி எம்எல்ஏ அவர்கள் ஆய்வு செய்தார்.
DR.AMR கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் பென்னாகரம் ஒன்றியம் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு திடல் சீரமைக்கும் பணியினை பென்னாகரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜி.கே.மணி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார்,நகர தலைவர் சந்தோஷ், வன்னியர் சங்க பொறுப்பாளர் எம்.பிரேம்குமார் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.