காரிமங்கலம் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரொக்க பணம் மற்றும் தங்க நகைகள் உட்பட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமாயின. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த அடிலம் சப்பாணிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமன் கூலி தொழிலாளி. இவரது மனைவி லலிதா. நேற்று காலை ராமன் வேலைக்கு சென்று இருந்த நிலையில் லலிதா மாடுகளை அருகில் உள்ள பகுதிக்கு மேய்ச்சலுக்காகஅழைத்துச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்து புகை வரவே அருகில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து ராமனுக்கு தகவல் தெரிவித்தன.ர் ராமன் மற்றும் அவரது மனைவி வந்து பார்த்தபோது வீட்டில் தீ பரவி அறைக்குள் இருந்த பீரோ கட்டில் உட்பட பல்வேறு பொருட்கள் தீப்பற்றி எரிந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்ட நிலையில் தனது மகள் திருமணத்திற்காக சேர்த்து வைக்கப்பட்டிருந்த பீரோவில் இருந்த ரொக்க பணம் மற்றும் தங்க நகைகள் தீயில் கருகியது தெரியவந்தது. மேலும் டூவீலர் ஆர்சி புத்தகங்கள் நில பத்திரம் ஆகியவையும் தீயில் எரிந்தது. தகவல் அறிந்த திமுக மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் பகுதிக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார். மேலும் அரசு தரப்பில் செய்ய வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்வதாக உறுதி அளித்தார். மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாரியப்பன் உட்பட பலர் உடன் இருந்தனர். தீ விபத்து சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி
பாலக்கோட்டில் உள்ள புதுர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் 12கிராம மக்கள் இணைந்து மழைவேண்டி மஹாபாரதசொற்பொழிவு மற்றும் துரியோதனன் படுகளம் – வெகு விமர்சியாக நடைப்பெற்றது
பாலக்கோட்டில் உள்ள புதுர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் 12கிராம மக்கள் இணைந்து மழைவேண்டி மஹாபாரதசொற்பொழிவு மற்றும் துரியோதனன் படுகளம் – வெகு விமர்சியாக நடைப்பெற்றது தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஶ்ரீபுதுா் மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் 12கிராமமக்கள் மழை வேண்டி மஹாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்தது. தருமபுரி மாவட்டத்தில் மஹாபாரத சொற்பொழிவுகள் நடத்தி பின் கூத்து கலைஞா்களை கொண்டு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றால் மழை வரும் என்பது மக்களின் நம்பிக்கை.பாலக்கோடு சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள காவாப்பட்டி, சித்திரப்பட்டி, வாழைத்தோட்டம், பாலக்கோடு, பனங்காடு உள்ளிட்ட 12 கிராமமக்கள் ஒன்றினைந்து மஹாபாரத கதைகளை பகல் பொழுதில் வேதம் பயின்றவா் பொதுமக்களுக்கு சொல்லுவார். அவா் குறிப்பிடும் கதைகளுக்கு ஏற்ப இரவில் கூத்து கலைஞா்கள் நடித்து காட்டுவார்கள் மஹாபாரத சொற்பொழிவில் கடைசி நாளான நேற்று 18 ம் நாள், 18ம் போர் என்று அழைக்கப்படும் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துரியோதனனை பாண்டவர்கள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் கள்ளசாராயம், போலி மதுபானம் விற்பது தெரியவந்தால் வாட்ஸ்ஆப்பில் ( 6369028922 )தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன்ஜேசுபாதம் அறிவிப்பு.
தருமபுரி மாவட்டத்தில் கள்ளசாராயம், போலி மதுபானம் விற்பது தெரியவந்தால் வாட்ஸ்ஆப்பில் தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன்ஜேசுபாதம் அறிவிப்பு.
தமிழகத்தில் மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் கலந்த போலீ மதுபானம் குடித்ததால் 22 பேர் பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளளது.
இதையடுத்து தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு தமிழகம் முழுவதும் கள்ள சாராயத்தை ஒழிக்க மாவட்ட எஸ்.பிக்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிதுள்ளார்.
அதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட எஸ்.பி. ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் கலால் மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையத்திற்க்கும், மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான மலை கிராமம், குக்கிராமம், காப்புக்காடு மற்றும் நகர பகுதிகளில் கள்ள சாராயம், போலீ மதுபானம், வெளி மாநில மதுபானங்கள் மற்றும் மது விலக்கு சம்மந்தபட்ட குற்ற செயல்கள் நடைப்பெற்றால் 6369028922 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்க்கு பொது மக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என்றும்,
தகவல் அளிக்கப்படுபவரின் இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என
என தெரிவித்துள்ளார்.
காரிமங்கலம் பகுதிகளில் செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல், உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.
காரிமங்கலம் பகுதிகளில் செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் பறிமுதல், உணவு பாதுகாப்பு துறை அதிரடி ஆய்வு.தர்மபுரி மாவட்டம், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி. சாந்தி, ஐ.ஏ.எஸ்., அவர்கள் உத்தரவின் பேரில், காரிமங்கலம் ஒன்றியம் மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி, சமத்துவபுரம், பொன்னேரி, கரகோடள்ளி மற்றும் காரிமங்கலம் பைபாஸ், அகரம் பிரிவு ரோடு போன்ற பகுதிகளில் உள்ள மாம்பழங்கள் விற்பனை செய்யும் சாலையோர விற்பனை கடைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். திருமதி.ஏ. பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ். அவர்கள் தலைமையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.மாங்காய்களை விரைவாக விற்பனை செய்வதற்காக ஒரு சில கடைகளில் ஒரு சில வியாபாரிகள் ரசாயனம் கெமிக்கல் (கார்பைடு கற்கள்) மற்றும் எத்திலின் பவுடர் உபயோகித்து காய்களை பழுக்க வைப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகார் அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.கடைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் கார்பைடு கல் மற்றும் எத்திலின் பவுடர் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.ஆனால்மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டதா என்பதை கண்டறிய ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தில் நீரை நிரப்பி நிறைவாக பழுத்த பழங்களை தண்ணீரில் போடும்போது இயற்கையாக பழுத்த பழங்கள் நீரின் அடியில் சென்று தங்கும், செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் மேலே மிதக்கும். மேலும் செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்கள் ஒரே சீரான கலரிருக்கும், பழங்களை நுகர்ந்து பார்க்கும் போது போது பழ வாசனை அடிக்காது. இன்றைய ஆய்வில் சுமார் 20க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் பெரியாம்பட்டி சமத்துவபுரம் பகுதி, பொன்னேரி சாலை ஓர தற்காலிக மாம்பழ விற்பனை கடைகளில் மூன்று கடைகள் மற்றும் காரிமங்கலம் அகரம் பிரிவில் ஒரு மொத்த விற்பனை கடை என நான்கு கடைகளில் இருந்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் சுமார் 200 கிலோ அளவிலானது பறிமுதல் செய்து எச்சரிக்கை நோட்டீஸ் உடன் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இப்பழங்கள் எங்கிருந்து பெறப்பட்டது என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட மாம்பழங்களை காரிமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் ஒருங்கிணைப்போடு, தூய்மை பணியாளர்கள் உதவியுடன் காரிமங்கலம் பேரூராட்சி திட கழிவு மேலாண்மை கிடங்கில் கிருமி நாசினி தெளித்து முறையாக அப்புறப்படுத்தப்பட்டது.
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஊதிய உயர்வு வழங்க கோரி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழக அரசு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டை ஊதியம் வழங்கப்படுவதாகவும் அதை மாற்றி ஒரே விதமாக ஊதிய வழங்கக் கோரியும், 37வருடங்களாக தினக்கூலியாக வேலை செய்யும் தொழிலாளர்களை நிரந்தர பணி வழங்க கோரியும், மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு உடனடியாக சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு ஊதிய வழங்க கோரி கண்டன கோஷங்கள் தமிழக அரசுக்கு எதிராக எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில் தலைமை முருகன் அண்ணா தொழிற்சங்க செயலாளர் தலைமையில் நடைபெற்றது. முன்னிலை கலையரசன், முருகன், என்.சி.முருகன், மாது, மாதேஷ், சக்திவேல், கே.முருகன், நாகராஜ் மற்றும் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
சமூக பொறுப்பு நிதியிலிருந்து வள்ளல் அதியமான்கோட்டம் நூலகத்திற்கு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சுமார் 20 தலைப்பிலான பொது அறிவுப்புத்தகங்களை வழங்கினார்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து வள்ளல் அதியமான்கோட்டம் நூலகத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி இஆப., அவர்கள் சுமார் 20 தலைப்பிலான பொது அறிவுப்புத்தகங்களை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன் அவர்களிடம் இன்று (18.05.2023) வழங்கினார்கள் . உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பழனிதேவி உள்ளார் .
தமிழ்நாடு டெண்ட் டீலர்கள் சார்பாக மை தருமபுரி அமைப்பிற்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கப்பட்டது.
*தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் சார்பாக மை தருமபுரி அமைப்பிற்கு சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கப்பட்டது*தருமபுரி ஜோதி மஹாலில் தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக ஐம்பெரும் விழா நடைபெற்றது. டெண்ட் டீலர்ஸ் டெக்கரேட்டர்ஸ் சங்க கொடியேற்றம், சங்க துவக்க விழா, ஆண்டு மலர் வெளியீடு, பொருட்காட்சி, விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மை தருமபுரி அமைப்பின் தன்னிகரில்லா செயல்பாடுகளை பாராட்டும் விதமாக சிறந்த சமூக செயற்பாட்டாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருதினை அகில இந்திய டெண்ட் டீலர்ஸ் பொது செயலாளர் கட்டார் சிங் கோச்சார் அவர்கள் வழங்கினார், மை தருமபுரி குடும்பத்தினர் சார்பாக மை தருமபுரி சதீஸ் குமார், அருணாசலம், சந்திரசேகர், ஜனனி சத்யநாதன், தாரணி, தமிழரசு, சார்லஸ் சஞ்ஜய், வெங்கடேஷ் ஆகியோர் விருதினை பெற்றுக் கொண்டனர். விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்த மாநில செயலாளர் மணிகண்டன் சினி டெக்கரேட்டர்ஸ் மணிவேல் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஜூன் மூன்றாவது வாரத்தில் 29-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுகிறது ! அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் டிஆர்ஒ ஆர்.ராஜேஸ்வரி ஆய்வு
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், ஜூன் 3-வது வாரத்தில் 29 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி விழா நடைபெறவுள்ளதையடுத்து, மா அரங்குகள், அரசுத்துறை அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்கள், விழா அரங்கம் அமைக்கப்படவுள்ள இடம், மாங்கனி கண்காட்சிக்கு பொதுமக்கள் உள்ளே செல்லும் பாதை வெளியே செல்லும் போக்குவரத்து பாதைகள் அமையவுள்ள இடங்களை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.ஆர்.ராஜேஸ்வரி அவர்கள் இன்று (18.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் திரு.பாபு, இணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) திரு.பூபதி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் திரு.வெங்கடேசன், மற்றும் வருவாய்த்துறை, நகராட்சிதுறை அலுவலர்கள் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் கோடை வெயிலை தணிக்கும் குழந்தைகள்
தருமபுரி மாவட்டத்தில் கோடை விடுமுறை தொடங்கி உள்ள நிலையில் நேற்று தர்மபுரியில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தொட்ட நிலையில் தர்மபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் பள்ளி கல்லூரி விடுமுறையை தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் நீச்சல் பயிற்சியில் மேற்கொண்டு வருகின்றனர் இதைத்தொடர்ந்து குழந்தைகளின் ஆனந்த சிரிப்புடன் நீச்சல் அடிக்கும் குழந்தைகள் படத்தில் காணலாம்
பாலக்கோடு நகருக்குள் வரும் கனரக லாரிகளால் போக்குவரத்து நெரிசல்- ஆம்புலன்ஸ் செல்லுவதில் சிக்கல் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200க்கும் மேற்பட்ட பேருந்துகளும் மற்றும் 200 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் என எப்போதும் பரபரப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முதல் புறநகர் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால், பேருந்துகள் அனைத்தும் நகர பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும் ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெங்களூர், சென்னை மற்றும் தருமபுரி, சேலம், கோவை, பழனி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் நகர நெடுஞ்சாலையில் இருபுறமும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி அந்த நேரத்தில் கல்குவரி லாரிகள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை புறவழிச்சாலையில் செல்லாமல் நகருக்குள் வருவதால் 108 ஆம்புலன்ஸ் செல்லுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலையம் முன்பு வணிக கடைகள் முன்பு பந்தல் அமைத்தும், சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு கனரக வாகனங்களை மாற்றுவழியில் இயக்கவேண்டும் என பொது மக்கள் கோரிக்கை .