தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்கள்பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்திய கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக்கடன் . பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன், மற்றும் கறவை மாடுக் கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.1. விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்இனத்தவராரக இருத்தல் வேண்டும். 2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3,00,000 /- இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.3. விண்ணப்தாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.4. குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும் 5. பொதுகாலக் கடன் திட்டம் / தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாகரூ.15.00இலட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டிவிகிதம் 6% முதல் 8% வரை 6. பெண்களுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.2 இலட்சம்வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டிவிகிதம் 5% 7. நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1.25 இலட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15.00 இலட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டிவிகிதம் 4% மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகியிருக்க வேண்டும். திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) அவர்களால் தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.8. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை ரூ.30,000/- வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ.60,000/- வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6%9. மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.10 விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம், மற்றும் பிறப்பிடச் சான்றிதழ். குடும்ப அட்டை ஒட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.எனவே. தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்பித்து பயன் பெறலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ய.அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தர்மபுரி
SC/ST நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற மாணாக்கர்கள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்கி கல்விஉதவித்தொகை பெறலாம்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற மாணாக்கர்கள் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்கி கல்விஉதவித்தொகை பெறலாம்.தருமபுரி மாவட்டத்தில்2022 ஆம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்களுக்கு அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணாக்கர்கள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் மாணாக்கர்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி ந-முலுஊ (விரல் ரேகை) மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்கிக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறுமாவட்டஆட்சித்தலைவர்தெரிவித்துள்ளார்.திருமதி.கி.சாந்திஇஆப., அவர்கள்
தருமபுரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 19-5-2023 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தகவல்
தனியார்துறை நிறுவனங்களும் தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துகொள்ளும் “தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்” ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவச பணியே ஆகும். இதன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு, அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத்துறைகளில் வேலையளிப்பவர் கோரும் பட்சத்தில், உரிய விதிகளின்படி நேர்முகத்தேர்விற்கு பரிந்துரை செய்யப்படும்.இம்முகாமில், பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு. விற்பனையாளர். மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர். அக்கவுண்டன்ட், மெக்கானிக் போன்ற பணிகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பல்வேறு கல்வித்தகுதிக்கும் ஆட்கள் தேவை என பட்டப்படிப்பு என பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.ஆகவே, மேற்படி பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், வருகின்ற 19.05.2023 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
பாலக்கோடு மத்திய ஒன்றியத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கையை மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் ஆய்வு செய்தார்
பாலக்கோடு மத்திய ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கையை ஆய்வு செய்த மாவட்ட செயலாளர்.பாலக்கோடு மே 17; தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மறைந்த தலைமைக் கழகம் சார்பில் 1 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க இலக்கு நிர்ணைத்துள்ள நிலையில் மாவட்டம் முழுதும் உள்ள பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்கள் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பேரூர் கழகச் செயலாளர்களை அதிகப்படியான புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து முழு நேரமாக உறுப்பினர் சேர்க்கையை ஆய்வு செய்து வருகிறார். அதனையோட்டி பாலக்கோடு மத்திய ஒன்றியம் அமானி மல்லாபுரம், செம்மன அள்ளி,சீரியம்பட்டி, உள்ளிட்ட 10 ஊராட்சிகளில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் இதில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர் படிவங்களை ஒன்றிய கழக செயலாளர் முனியப்பன் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் வக்கீல் மணி, ராஜகுமாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், பொதுக்குழு உறுப்பினர் சையத் முர்த்துஜா, மூத்த வழக்கறிஞர் சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி ரவி, விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் ஆனந்தன், அவைத் தலைவர் இராஜாமணி, சுற்றுச்சூழல் அணி செழியன், கவுன்சிலர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரன் சேட்டு (எ) சேகர், ஜ.டி விங்க் தமிழரசன், ஆதம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் கழிவறைக்கு செல்லும் நடைபாதையை சரிசெய்ய தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மீண்டும் நேரில் வலியுறுத்தல்
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாது திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களிலிருந்தும் உள்புற நோயாளிகள் மற்றும் வெளிபுற நோயாளிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக நவீனமயமாக்கப்பட்ட புதிய மகப்பேறு பிரிவு என்று தனியாக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது மகப்பேறு பிரிவில் கழிவறை செல்லும் பாதை சிதலடைந்து காணப்படுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி தாளில் செய்தி வெளியானது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கூடல் கிராம வழித்தடத்தில் பயணிகளை ஏற்றி வந்த நகர பேருந்து கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 25 பேர் காயம் ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் மருத்துவமனைக்கு சென்று தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவள்ளி உள்ளிட்ட மருத்துவ அலுவலர்களுடன் விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தி தாளில் வெளிவந்த செய்தியை மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மிகவும் சிதலமடைந்த நிலையில், டைல்ஸ் பெயர்ந்து கழிவறைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்த கழிவறை பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கழிவறை செல்லும் பாதையை உடனடியாக விரைந்து சீரமைக்க வேண்டுமென மருத்துவ அலுவலர்களிடம் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் மாவட்ட மருத்துவத்துறை அலுவலர்களிடம் சிதலமடைந்த நிலையில் இருந்த கழிவறை சீரமைக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார். அதற்கு துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சரி செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, கூட்டம் முடிந்த பின்னர், தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு பிரிவுக்கு நேரில் சென்று கழிவறை செல்லும் பாதையை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பார்வையிட்டார். அங்கு எந்தவொரு பணியும் செய்யாமல் பழையப்படியே பாதை சிதலடைந்து காணப்பட்டது. எல்.எல்.ஏ மருத்துவ நிர்வாக அதிகாரிகளை நேரில் அழைத்து கழிவறைக்கு செல்லும் நடைபாதை சரி செய்யப்பட்டு விட்டதாக மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் கூட்டத்தில் தெரிவித்தீர்கள், இங்கு பணி முடிக்காமல் உள்ளீர்கள் உடனடியாக தரமான முறையில் விரைந்து சரி செய்ய மருத்துவத்துறை அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கழிவறை அமைக்க பூமி பூஜை.
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 380 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் இப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு போதுமான கழிப்பறை வசதியின்றி அவதியுற்று வந்துள்ளனர். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூபாய் 8.00 இலட்சம் மதிப்பீட்டில் நிதியை உடனடியாக ஒதுக்கி அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை அமைத்து தருவதாக உறுதியளித்தார். பள்ளியில் தற்போது கழிவறை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். பின்னர், மாணவிகளிடம் பேசிய அவர், பெண்களின் கல்வி வளர்ச்சி மேலோங்க அனைத்து வசதிகளையும் பள்ளியில் ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கழிப்பறை வசதி மிகவும் தேவையான ஒன்று. கழிப்பறை பெண் கல்வியின் வளர்ச்சிக்கான பாதையை வழிவக்குகிறது என்றார் இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுமதி, இளநிலைப் பொறியாளர் பாலாமணி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கிருஷ்ணம்மாள், அரசு விடுதி தேர்வு குழு உறுப்பினர் இ.மா.பாலகிருஷ்ணன், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார், பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
தொட்டபடகாண்டஅள்ளி யில் 5 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணிக்கு கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. பூமி பூஜை
தொட்டபடகாண்டஅள்ளி யில் 5 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணிக்கு கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் தொட்டபடகாண்ட அள்ளியில் 5இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணிக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியசெயலாலர்கள் வக்கில்செந்தில், கோபால், மாவட்டஅறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், பாலக்கோடு நகர செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர் சுப்ரமணி, வீரமணி, சரவணன், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் ராஜா, துணை செயலாளர் அசோக் மற்றும் அதிமுக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
அத்திமுட்லு கிராமத்தில் சுமார் 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. பூமி பூஜை
அத்திமுட்லு கிராமத்தில் 19இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிக்கு கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் அத்திமுட்லு காலணியில் 19 இலட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பிட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. இன்று காலை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியசெயலாலர்கள் வக்கில்செந்தில், கோபால், மாவட்டஅறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், பாலக்கோடு நகர செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர் சுப்ரமணி, வீரமணி, சரவணன், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் வாசு, மற்றும் அதிமுக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
குத்தலஅள்ளியில்சட்ட விரோதமாக அரசு மதுபானம் விற்பனை செய்த பெண் கைது.35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 237 மதுபாட்டில்கள் பறிமுதல் .
குத்தலஅள்ளியில்சட்ட விரோதமாக அரசு மதுபானம் விற்பனை செய்த பெண் கைது.35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 237 மதுபாட்டில்கள் பறிமுதல் .தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கள்ளதனமாக அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து அவர்களுக்கு புகார்கள் சென்றன.டி.எஸ்.பி உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் இன்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர், பாலக்கோடு அருகே குத்தல அள்ளியில் ருக்கு (50) என்பவர் வீட்டில் வைத்து அரசு மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது, அவரை கைது செய்து அவரிடமிருந்த பிராந்தி, பீர் பாட்டில்கள் என 35ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 237 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து. ருக்குவை கைது செய்துசிறையில் அடைத்தனர்.
பன்னிஅள்ளி கிராமத்தில் ரூ.3.20 இலட்டம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ பூமி பூஜை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பன்னிஹள்ளி கிராமத்தில் 35 வீடுகளுக்கு புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கு 15வது நிதிக்குழு மானிய நிதி மற்றும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முன்னாள் அதிமுக அமைச்சர், கே.பி.அன்பழகன் 3இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிக்குபூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியசெயலாலர்கள் வக்கில்செந்தில், கோபால், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், பாலக்கோடு நகர செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர் சுப்ரமணி, வீரமணி, சரவணன், அதிமுக தகவல் தொழில்நுட்ப செயலாளர்கள் ராஜா, துனைசெயலாளர் அசோக் மற்றும் அதிமுக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.