தண்டுகாரணஅள்ளி கிராமத்தில் 6இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தண்டுகாரணஹள்ளி கிராமத்தில் மாரியம்மன் கோவில் முதல் சரவணன் வீடு வரை சுமார் 700 மீட்டர் தூரம் சாக்கடை கழிவு நீர் கால்வாய் அமைக்க 15வது நிதிக்குழு மானிய நிதி மற்றும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து முன்னாள் அதிமுக அமைச்சர், கே.பி.அன்பழகன் 6இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்து பேசியதாவது தொகுதியில் உள்ள கடைகோடி கிராமங்களும் அனைத்து அடிப்படை வசதிகளும் மக்களை சென்றடைய பாடுபடுவதாக கூறினார்.இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியசெயலாலர்கள் வக்கில் செந்தில், கோபால், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், பாலக்கோடு நகர செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர் சுப்ரமணி, வீரமணி, சரவணன், அதிமுக தகவல் தொழில்நுட்ப செயலாளர்கள் ராஜா, வாசு, அசோக் மற்றும் அதிமுக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
தர்மபுரி
ஒகேனக்கல் பகுதியில் யானைக்கு வணக்கம் போட்ட மீசை முருகேசனுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறை.எமன் ரெஸ்ட் எடுக்க போன நேரத்துல, யானைக்கு வணக்கம் போட்டு தப்பிச்சிட்டார்.. யானையும் நல்ல மூடுல இருந்திருக்கும் போல.. அதான் பொழைச்சி போகட்டும்னு விட்டுடுச்சி..
பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலத்தில் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் 69 வது பிறந்த நாள் விழா
பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலத்தில் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் 69 வது பிறந்த நாள் விழாதர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் கிராமத்தில் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் 69 வது பிறந்த நாள் விழா மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி, இளைஞர் பாசறை செயலாளர் மாதுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக தொண்டர்கள் பட்டாசு வெடித்து தாரை தப்பட்டை முழக்க ஆரவாரமாக கொண்டாடினர்.நிகழ்ச்சியில் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு கேக் வெட்டி, சிக்கன் பிரியாணி பொதுமக்களுக்கு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், கோபால், வக்கில் செந்தில், கிளை செயலாளர் கோபால், தகவல் தொழில் நுட்ப ஒன்றிய செயலாளர் ராஜா, நிர்வாகிகள் பாரதி, தங்கவேல், முருகன், ராமமூர்த்தி, துரை, ராமசந்திரன், ஸ்ரீதர் மற்றும் கட்சி தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பகுதி சாலையை விபத்தில்லாத சாலையாக அமைக்க வேண்டுமென துறை சார்ந்த அதிகாரியிடம் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ மனு
தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் மலைப்பகுதி சாலை வளைவு மிகுந்த சாலையாகும். இச்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்துக்களால் அதிக அளவில் உயிரிழப்புகளும், பலத்த காயங்களும், உடல் உறுப்புகளும் இழக்கின்ற சூழ்நிலை உருவாகின்றன. நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனம் இயக்குபவர்களும், பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடன் சாலையை கடந்து பயணம் செய்கின்றனர். விபத்து ஏற்பட்டால் பல கிலோமீட்டர் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன சூழல் ஏற்படுகிறது. துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் விபத்துக்கள் குறையவில்லை. தொப்பூர் மலைப்பகுதி சாலையை ஆய்வு செய்து, விபத்தில்லாத சாலையாக உடனடியாக அமைக்க வேண்டுமென திட்ட இயக்குனர் இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரியை சந்தித்து மனுக்கள் வழங்கப்பட்டது எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சட்டமன்ற உறுப்பினர் தருமபுரி அவர்கள் உடன் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் அவர்களுடன் வன்னியர் சங்க மேற்கு மாவட்ட செயலாளர் தர்மபுரி இ.மா. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இலக்கியம்பட்டி ஊராட்சி முனியப்பன் கோவில் அருகில் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை! தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார்
தடுப்பு சுவர் அமைக்க பூமி பூஜை தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சி முனியப்பன் கோவில் அருகில் சனத்குமார் நதி ஓரத்தில் தடுப்பு சுவர் அமைக்க தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் அமைக்க பூமி பூகை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது. இலக்கியம்பட்டி பஞ்சாயத் தலைவர் சுதா ரமேஷ் , 12 வது வார்டு உறுப்பினர் இளங்கோ நம்பர் மணி ரவிக்குமார்,இவ்விழாவில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் திரு. எஸ்.பாபு உதவி செயற்பொறியாளர்திரு.கே.சந்தோஷ்குமார் உதவி பொறியாளர் மற்றும் பாமக நிர்வாகிகள் இலக்கியம்பட்டி ஊர் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் பாடி கிராமத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 69-வது பிறந்தநாள் விழா
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 69-வது பிறந்தநாளையொட்டி தருமபுரி மாவட்டம் பாடி கிராமத்தில் தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் ம.கோவிந்தசாமி தலைமையில் பத்து கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கிளை கழக செயலாளர்கள் கோவிந்தன்,கோபி,அசோகன்,தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒன்றிய இணை செயலாளர் சேட்டு, கழக செயல்வீரர்கள் இராமகவுண்டர், பச்சியப்பன்,குட்டிமணி சக்கரவர்த்தி,முனிராஜ்,குமரேசன்,ஸ்ரீராமன்,மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
பாஜக தேசிய தலைவருடன் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் கே.பி.முனுசாமி உள்ளிட்டோருடன் டெல்லியில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை
அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் நேற்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமிஷா அவர்களை புதுடெல்லியில் நேரில் சந்தித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கூட்டணி மற்றும் தமிழகத்தில் நடைபெறும் திமுக அரசின் செயல்பாடுகளையும் பற்றி கலந்த ஆலோசித்தார்கள். கழக துணை பொதுச்செயலாளர் கே. பி.முனுசாமி அவர்களும் தமிழக பாரதிய ஜனதா கட்சியினுடைய தலைவர் கே.அண்ணாமலை அவர்களும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே வட்டகானம்பட்டியில் முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு- போலீசார் விசாரணை.
வட்டகானம்பட்டியில் முதியவர் யானை தாக்கி உயிரிழப்பு- போலீசார் விசாரணைதருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே வட்டகானம்பட்டி ஏரிக்கொட்டாய் இருளர் காலனியை சேர்ந்த கூலி தொழிலாளி காளியப்பன்(71) இவர் இன்று காலை கூலி வேலைக்கு செல்வதற்காக வட்டகானம்பட்டி காப்புகாடு வழியில் சென்று கொண்டிருந்தார், அப்போது காப்புக் காட்டிலிருந்து வெளியே வந்த இரண்டு காட்டு யானைகளை காளியப்பன் எதிரில் வந்தன.இதை சற்றும் எதிர்பாராத காளியப்பினை யானையிடமிருந்து தப்பிக்க யானையை கைகளால் துரத்தி உள்ளார், ஆனால் காட்டு யானை இவரை தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றன,இதனால் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இதையடுத்து கிராம மக்கள் மாரண்டஅள்ளி காவல்துறைக்கும் வனத்துறைக்கும் தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.யானை தாக்கி முதியவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவர்கள் தொல்லியல் அகழாய்வை பார்வையிட்டனர் .
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு மருதம் நெல்லியின் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவர்களின் சார்பில் பென்னாகரம் அருகே பூதிநத்தம் என்னும் ஊரில் நடைபெறும் தொல்லியல் அகழாய்வை பார்வையிட்டனர் . பின்னர் தொல்லியல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், தொல்லியல் அகழாய்வு செய்யும் முறை பற்றியும் , பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை பற்றியும்,மாணவர்களுக்கு தொல்லியல் அகழாய்வு திட்ட இயக்குனர் முனைவர். எஸ்.பரந்தாமன்(அரசு தொல்லியல் அலுவலர்) உரை நிகழ்த்தினார். நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த் , முதல்வர் சி.பரஞ்சோதி , வரலாற்றுத் துறை த்தலைவர் மா.சந்திரன் பேராசிரியர் கோ.திருவாசகம், மா.வெங்கடேசன், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கிடூ வழங்கிட கோரி தருமபுரி பாமக சார்பாக தருமபுரி அஞ்சல் அலுவலகத்தில் இருந்து தபால்கள் அனுப்பப்பட்டது
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆணைக்கிணங்க வன்னியர்களுக்கு 10.5% உள்ள ஒதுக்கிட வழங்கிட கோரி
தமிழக முதல்வர் ஸ்டாலின்
அவர்களுக்கும்
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய
தலைவர் நீதியரசர் வீ. பாரதிதாசன் அவர்களுக்கும் தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் உள்ள தபால் பெட்டியில் தபால்கள் அனுப்பும் நிகழ்வு பாட்டாளி இளைஞர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் முனைவர் தகடூர் தமிழன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பென்னாகரம் தொகுதி அமைப்பாளர் சுதாகிருஷ்ணன், அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் கார்த்திக்கேயன் , மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாற்று சமுதாயத்தினை சார்ந்தவர்கள் உடன் இருந்தனர்.