பாலக்கோடு பேரூராட்சியில் குப்பையும் செல்வமாகும் விழிப்புணர்வு பேரணி.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டு பகுதிகளில் நகரத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும், சுகாதாரத்தை பேணி காக்கவும் நகர தூய்மை இயக்கத்தின் சார்பில் குப்பையும் செல்வமாகும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியில் பேரூராட்சி அலுவலகத்தில் குப்பையும் செல்வமாகும் , திடக்கழிவு மேலாண்மை செயலாக்கம் ஆகிய செயல்பாடுகள் குறித்த கண்காட்சி நடைப்பெற்றது.
அதனை தொடர்ந்து ஜீரோ வேஸ்ட் உணவு விழிப்புணர்வு வாகன பேரணியை பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஊர்வலமானது, பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி, கடைத்தெரு, ஸ்தூபி மைதானம், பஸ் நிலையம், எம்.ஜிரோடு மற்றும் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தின் போது உணவு வீண் செய்ய கூடாது, குப்பைகளை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து பேரூராட்சி தூய்மை காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் மேலும் பேரூராட்சியில் உள்ள குப்பை மற்றும் குறைகளை தெரிவிக்க ஸ்வச்சதா செயலி மூலம் தெரிவிக்க கேட்டுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, துப்புவு மேற்பார்வையாளர் ரவீந்திரன், துணைத் தலைவர் தாஹசீனா இதயாத்துல்லா, கவுன்சிலர்கள் விமலன் ரூஹித், குருமணி, பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்து கொன்டனர்.