புனித வெள்ளியையொட்டி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவ ஆலயங்களில் பெரிய சிலுவை பாதை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு.–இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலக மக்கள் யாவரையும் இரட்சிக்க வந்த இயேசு, யுத மன்னன் பிலாத்துவால் சிலுவை தீர்ப்பு கூறப்பட்டு, தலையில் முள் கிரீடம் அணிவித்து, கல்வாரி மலைக்கு சிலுவையுடன் இழுத்துச் செல்லப்பட்டு, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.இதனை நினைவு கூறும் வகையில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் இந்த நாளை புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில், புனித வெள்ளியையொட்டி பெரிய சிலுவைப்பாதை நடைபெற்றது.திருத்ததலத்தின் பங்குத்தந்தை அருட்திரு.இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பெரிய சிலுவைப் பாதையின் போது, ஆலய வளாகத்தினை சுத்தி அமைக்கப் பட்டுள்ள 14சிலுவைப்பாதை ஸ்தலங்களின் முன்பாக, இயோசுநாதர் சிலுவையை சுமந்து சென்றதன் நினைவாக, கிறிஸ்தவர்கள் தங்களுடைய தோல்களில் பாரமான சிலுவையை சுமந்து, தங்களை வருந்திக் கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.இதே போல கந்திகுப்பம், சுண்டம்பட்டி,எலத்தகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Uncategorized
அஇஅதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ கிருஷ்ணகிரியில் உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கினார்
இன்று 7-4-2023 கிருஷ்ணகிரி மாவட்டஅதிமுக அலுவலகத்தில்கிருஷ்ணகிரி கிழக்குமாவட்ட கழக செயலாளர் கே.அசோக்குமார் எம்எல்ஏ தலைமையில்அஇஅதிமுக துணைபொதுச் செயலாளர்வேப்பனஹள்ளி சட்டமன்றஉறுப்பினர் கே.பி.முனுசாமிMLA அவர்கள்உறுப்பினர் சேர்க்கைக்கானவிண்ணப்ப படிவம் வழங்கினார்நிகழ்ச்சியில்மாவட்ட, ஒன்றிய நகர கழக, கிளைக்கழக பொறுப்பாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
சூளகிரி அருகே தண்டு கோவில் கும்பாபிஷேகம் வீரேஷ் ஆராத்யா இவர்களின் குழுவினாரால் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
*சூளகிர.*கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த துப்புகானப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சொன்னையூர் கிராமத்தில் தண்டு மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைப்பெற்றது.புதியதாக கட்டியுள்ள கோவிலில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது, நிகழ்ச்சியில் யாகங்கள் வளர்த்தும் பின்னர் பூர்ணாவதி செய்யப்பட்டது புனித நீரால் கும்பத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டது மேலும் அலங்காரிக்கப்பட்ட அம்மன் அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டது 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் சுரேஷ்,சிவய்யா ,சென்னப்பா ,சின்னய்யா ,மல்லேஷ்,மல்லய்யா ,சிவப்பா , மாதேஷ் ,ராமய்யா ,மாரப்பா , இராஜேந்திரன், வெங்கடேஷ்,முனியப்பா , சதீஷ் , சக்திவேல் ஆகியோர் நன்றியுரை தெரிவித்தனர். மேலும் ஸ்ரீ தண்டு மாரியம்மன் திருக்கோவில், சென்னையூர் கிராம பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டார உள்ள கிராம பொதுமக்கள்,
தளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சி.முருகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு.
கிரைன்ஸ் வலைதளத்தில்விவரங்களை பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்புதளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.சி.முருகன் அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மத்திய மாநில அரசுகள் விசாயிகளின் நலனுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வேளாண்மை அடுக்கு என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. வருவாய் பேரிடர் மேலாண்மை துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட 13 துறைகளில், விவசாயிகளுக்கான அனைத்து திட்டங்களும் கிடைத்திட செய்யும் நோக்கத்தில் குரோவர் ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேசன் ஆப் அக்ரிகல்சுரல் இன்புட் சிஸ்டம் என்ற வலைதளத்தில் விவசாயிகளின் விவரங்கள், நில விவரம் உள்ளிட்டவை சரி பார்க்கப்பட்டு வலை தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்தந்த கிராமங்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே விவசாயிகள் தங்களது நில உடமை ஆவணம், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு விவரங்களை பதிவு செய்து கொள்ளவும்.மேலும் விவரங்களுக்கு திரு.பெ.கண்ணன்தசரூபன், (உதவி வேளாண்மை அலுவலர், பெரிய ஆவேரிப்பள்ளி – 9443718250) திரு.மு.அரிகுமார், (உதவி வேளாண்மை அலுவலர், தோகரை அக்ரஹாரம் – 9865708173 ) திரு.எ.விக்கிரமாதித்தன், (உதவி வேளாண்மை அலுவலர், நந்திமங்கலம் 9698777080) திரு.கு.கோவிந்தராஜன், (உதவி வேளாண்மை அலுவலர், கோலட்டி- 7806896640) திரு.கா.ஜெயம், (உதவி வேளாண்மை அலுவலர், தொட்டமஞ்சி – 6381727249) மேற்கண்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கூறினார்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தென்னை மற்றும் மா பூச்சி நோய் தாக்குதல் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் கள ஆய்வு.
தென்னை மற்றும் மா பூச்சி நோய் தாக்குதல் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் கள ஆய்வு.கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றுபடிமாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்ட ஆலோசனையின்காவேரிப்பட்டினம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும்தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் பையூர் மண்டல ஆராய்ச்சி நிலையம், ஜீனூர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் . கிருஷ்ணகிரி வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கொண்ட குழு கரகூர் மற்றும் என் தட்டக்கல் கிராமங்களுக்கு நேரடியாக சென்று தென்னை மற்றும் மா சாகுபடி செய்யும் விவசாயிகளின் வயில்களில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தென்னை கருந்தலைப் புழுக்கான இயற்கை ஒட்டுண்ணிகளை வயலில் விடுதல் பற்றி எடுத்துக்கூறி செயல் விளக்கம் செய்து காட்டினர். மற்றும் தென்னை ரூகோஸ் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த நீல வண்ண அட்டை மற்றும் மஞ்சள் வண்ண அட்டை பொறிகளை வயல்களில் ஆங்காங்கே வைத்து கட்டுப்படுத்துதல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது மேலும் கிரைசோபெரில்லா இயற்கை ஒட்டுண்ணியை ஒட்டுண்ணி உற்பத்தி மையத்தில் இருந்து பெற்று வயலில் விடுமாறு கேட்டுக் கொண்டனர் . மேலும் கோடை பருவத்தில் இயற்கை ஒட்டுண்ணிகளை அதிகப்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்தினால் நல்லது எனவும் பூச்சி மருந்து ஏதும் தெளிக்க தேவையில்லை எனவும் தெளிவுரை வழங்கினார்கள் அதுசமயம் தமிழக விவசாயிகள் சங்க தலைவர் திரு ராம கவுண்டர் மற்றும் கே ஆர் பி இடதுபுற கால்வாய் நீட்டிப்பு விவசாயிகள் சங்க தலைவர் திரு.சிவகுரு விவசாயிகளுடன் கலந்து கொண்டனர்.
மை தருமபுரி அமைப்பின் சார்பாக துணிப்பை விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. நெகிழியை தவிர்த்து துணிப் பைகளை பயன்படுத்துவோம். மை தருமபுரி அமைப்பினர் செல்லும் அனைத்து விழாவிற்கும் குறைந்தது இருபது நபர்களுக்காவது துணிப்பைகளை வழங்கி வருகிறோம். தருமபுரியில் நடந்த விழாவில் நம்ம மொரப்பூர் அமைப்பின் நிர்வாகி வெற்றி அவர்களுக்கு துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
*இரத்ததானம் அளித்த தகடூர் புதுமைப்பெண் தீபா*இரத்ததானம் என்பது நம்மால் பிறருக்கு அளிக்கக் கூடிய மறுவாழ்வு ஆகும். ஓர் உயிரைக் காப்பாற்ற இரத்ததானம் முக்கிய தேவையாக உள்ளது. தலசீமியா குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை அல்லது இருமுறை ரத்தம் ஏற்ற வேண்டும். கர்ப்பிணி பெண்கள், அறுவை சிகிச்சை செய்வோருக்கு இரத்த தேவை அதிகரித்து வருகிறது. ஆண்களே இரத்ததானம் செய்ய தயக்கம் காட்டும் இந்த சமூகத்தில், தன் இரத்தத்தால் குழந்தையை பெற்றெடுத்த பெண், மீண்டும் இரத்ததானம் கொடை அளித்து தாயின் பெருமையை பேணி காத்து வருகின்றனர். தருமபுரி அன்னை மாதம்மாள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு இரத்ததானம் கொடை அளித்துள்ளார் அரசு பள்ளி ஆசிரியை தீபா அவர்கள். மை தருமபுரி அமைப்பின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இரத்ததானம் அளிப்போம் பிறர் உயிரைக் காப்போம்.
உயிர் காக்கும் உத்தம பணியில் மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள்.
*உயிர் காக்கும் உத்தம பணியில் மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள்*தருமபுரி நல்லானூர் மருதம் நெல்லி ஜெயம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் திரளாக இரத்ததானம் கொடை அளித்தனர். தருமபுரி அரசு மருத்துவமனையில் தலசீமியா பாதிக்கப்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், அறுவை சிகிச்சை செய்வோருக்கு இரத்த தேவை அதிகமாக தேவைப்படுகிறது. உயிர் காக்கும் பணியில் தங்கள் பங்களிப்பு இருக்க மாணவர்கள், பேராசிரியர்கள் இரத்ததானம் கொடை வழங்கினர். இந்த முகாமிற்கு கல்லூரி தாளாளர் மதிப்புறு முனைவர் கோவிந்தா அய்யா அவர்கள் தலைமை தாங்கினார், குருதி வங்கி மருத்துவர் ப்ரியா, கல்லூரி முதல்வர் முனைவர் பரஞ்ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் சதீஸ் குமார், பெருமாள் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க அலுவலர் திருவாசகம் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர். இரத்ததானம் அளிப்போம் பிறர் உயிரைக் காப்போம்.