மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 1 மாற்றுத்திறனாளி நபருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் இன்று வழங்கினார்.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (06.04.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓசூர் பகுதியில் பூ வியாபாரம் செய்யும் மாற்றுத்திறனாளி திருமதி.தேவி என்பவர் தனக்கு சொந்தமாக வீடு இல்லை என 03.04.2023 அன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தார். அம்மனுவின் மீது உடனடி நடவடிக்கையின்பெயரில் இன்று அவருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, உடனடியாக மின் இணைப்பு வழங்க மின்சார துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மேலும், இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 365 மனுக்கள் வரப்பெற்றது. இம்மனுக்கள் மீது வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக் கல்வித்துறை, மின்சாரத்துறை, பேரூராட்சி, நகராட்சி மற்றும் சிறு தொழில்கள் துவங்க வங்கிக் கடன் மற்றும் மாதாந்திர உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வழங்கப்படும் அனைத்து நல திட்ட உதவிகளும் தகுதியான நபர்களுக்கு உடனடியாக வழங்கவும், அனைத்து கோரிக்கை மனுக்களுக்கும் 15 நாட்களில் நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். ஆட்சித்தலைவர்முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து, பார்வையிட்டார்.இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)திரு.கோ.வேடியப்பன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) திருமதி.செண்பகவள்ளி, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் திரு.விஜயமோகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பிரசன்ன பாலமுருகன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திரு.கௌரிசங்கர், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் திரு.மகேந்திரன், உதவி பொறியாளர் திரு.சக்தி மோகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Uncategorized
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி வட்டாரம், சிகரமாகனபள்ளி ஊராட்சி, தோட்டக்கனவாய் கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடை
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, சிகரமாகனபள்ளி ஊராட்சி, தோட்டக்கனவாய் கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக்கடையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் இன்று (06.04.2023) திறந்து வைத்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி வட்டாரம், சிகரமாகனபள்ளி ஊராட்சி, தோட்டக்கனவாய் பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பகுதிநேர நியாய விலைக்கடையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.04.2023) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.திபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள்தெரிவித்ததாவது:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி வட்டாரம், கே.கே.249 சிகரமானப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டிலுள்ள சிகரமாகனப்பள்ளி (30AP096PY) முழுநேர நியாயவிலைக் கடையில் 539 குடும்ப அட்டைதாரர்கள் உணவு பொருட்கள் பெற்று வந்தனர். தோட்டகணவாய் பகுதியில் உள்ள 134 குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்க சிகரமணபள்ளி செல்லவேண்டுமானால் தார் சாலையில் 8 கி.மீ. துாரமும் ஆற்றை கடந்து செல்லவேண்டுமானால் 2 கி.மீ. செல்ல வேண்டும். மழை வெள்ள காலங்களில் பொருட்களை வாங்குவதற்கு மிகவும் சிரமமாக இருப்பாதாக நீண்ட நாள் கோரிக்கையாக இருந்துவந்தது.இந்நிலையில் கடந்த வாரம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மேலாண பார்வைக்கு பொதுமக்களின் கோரிக்கை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டது. ஊடகங்கள் மூலம் பொதுமக்களின் கோரிக்கை செய்தியாக அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் கடந்த 31.3.2023 அன்று அரசுக்கு கருத்துரு அனுப்பட்டது. ஒருவார காலத்தில் அரசின் அனுமதி பெற்று தற்போது நிபந்தனைகளை தளர்வு செய்து, சிகரமாகனப்பள்ளி (30AP096PY) முழுநேர நியாயவிலைக் கடையில்
பத்தாம் வகுப்பு பொதுதேர்வு மையத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 10 -ம் வகுப்பு பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் இன்று (06.04.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கே.பி.மகேஸ்வரி உள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டம் சம்பந்தமாக சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 08.04.2023 அன்று நடைபெற உள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டம் சம்பந்தமாக சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 08.04.2023 (இரண்டாவது சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும்குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் கீழ் குறிப்பிட்ட கிராமங்களில், 08.04.2023 (இரண்டாவது சனிக்கிழமை) அன்று (காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை) பொதுவிநியோகத்திட்டம் சம்மந்தமாக பொதுமக்கள் நடத்தப்படும்.சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால்நடத்தப்படும் வட்டத்தின் பெயர் மற்றும் கிராமங்களின் பெயர்கள்1.கிருஷ்ணகிரிகோதிகுட்லபள்ளி2.ஊத்தங்கரைவீரணகுப்பம்3.போச்சம்பள்ளிதாமோதிரஹள்ளி4.பர்கூர்தொகரப்பள்ளி கூட்ரோடு ( புலிகுண்டா)5.சூளகிரிஉலகம்6.ஒசூர்எலுவப்பள்ளி (பாகலூர்)7.தேன்கனிக்கோட்டைஅருளாலம் (சாலிவாரம்)8.அஞ்செட்டிதாம்சனப்பள்ளிஎனவே, மேற்படி குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்டவழங்கல் அலுவலரிடம் தெரிவித்து பயன்பெறுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஓசூர் மாநகராட்சியில் பாஜக சார்பில் நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
ஓசூர் மாநகராட்சியில் பாஜக சார்பில் நீர் மோர் தர்பூசணி பழங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் விழா.பாரதிய ஜனதா கட்சி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மேற்கு மாநகரம் சார்பாக 35 வது வார்டு முனீஸ்வர் நகர் சர்க்கிள் மற்றும் அரசனட்டி16 வார் டு சென்னை சில்க்ஸ் அருகில் நீர் மோர் பந்தல் மாநகரத் தலைவர் ஜிம் ரமேஷ் தலைமையில் மாவட்ட தலைவர் திரு எம் நாகராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவங்கி வைத்தார் இதில் மாநகர மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
பெரிய வியாழனையொட்டி கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், 12 சீடர்களூக்கு பாதம் கழுவும் சடங்கு நடைபெற்றது.
பெரிய வியாழனையொட்டி கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், 12 சீடர்களூக்கு பாதம் கழுவும் சடங்கு நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.————————————————–உலக மக்களின் நலனுக்காக சிலுவையில் இறக்க வேண்டிய நேரம் நெருங்குவதை உணர்ந்த இயேசு, தன்னுடைய 12 சீடர்களின் பாதங்களை கழுவி, பணிவை கற்றுக் கொடுத்தார். பின், அப்பத்தை பிட்டு தமது உடல் எனவும், திராட்சை இரசத்தை தமது இரத்தம் எனவும் கூறி பருக கொடுத்தார். மேலும், இதை தம் நினைவாக உலகம் முடியும் வரை செய்யவும் சீடர்களுக்கு பணித்தார்..இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் உலகில் உள்ள கிறிஸ்தவ மக்கள் பெரிய வியாழனாக கடைபிடித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, இன்று கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி, பாதம் கழுவும் சடங்குடன் நடைபெற்றது. பங்கு தந்தை இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில், 12 சீடர்களின் பாதங்களை கழுவும் சடங்குகள் செய்யப்பட்டன..இதனைத் தொடர்ந்து பெரிய வியாழன் ராபோஜனத்தை நினைவு கூறும் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஜெப வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு ஸ்தூபி மைதானத்தில் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயின் கால் முறிவு.
ஸ்தூபி மைதானத்தில் மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயின் கால் முறிவு.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பட்றஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாது (வயது.40) இவர் நேற்று காலை வீட்டிலிருந்து பாலக்கோடு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார், பாலக்கோடு ஸ்தூபிமைதானம் ரவுண்டானா பகுதியில் வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சொகுசு கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மாதுவிற்க்கு பலத்த காயம் ஏற்பட்டு கால் எலும்பு முறிந்தது,உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தகவலறிந்த பாலகோடு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மாரண்டஅள்ளி அருகே கல்லூரி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து பலி.தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கோவில்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார், இவர் மாரண்டஅள்ளி மின்வாரியத்தில் ஒயர்மேனாக உள்ளார், இவரது மகன் பிரகாஷ் (வயது. 20) இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாமாண்டு சிவில் இன்ஜினியரிங் படித்து வந்தார், நேற்று நண்பகலில் அதே பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவரது நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றவர், கிணற்றின் உள்ளே தவறி விழுந்தார் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார்,இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற நீரில் மூழ்கி தேடினர், ஆனால் பிரகாஷ் மூச்சு திணறி உயிரிழந்தார், அவரை சடலமாக மீட்டனர்.தகவலறிந்த மாரண்டஅள்ளி போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மேற்கு மாவட்ட பாமக ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறும் என மாவட்ட செயலாளர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அறிக்கை
பாட்டாளி மக்கள் கட்சி தருமபுரி மேற்கு மாவட்டத்தின் ஆலோசனை கூட்டம்.வரும் 08.04.2023 அன்று சனிக்கிழமைகாலை 10.00 மணிதருமபுரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைப்பெற உள்ளது.இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி, தருமபுரி மேற்கு மாவட்டத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தங்கள் பகுதியை சார்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து கூட்டத்தில் பங்கேற்கவும், தாங்களும், ஒன்றிய, நகர, பேரூர் தலைவர்களும் தவறாமல் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும் தருமபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறையின் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.
அறிஞர் அண்ணா கல்லூரியின் வேதியல் துறையில் தேசிய கருத்தரங்கம் . அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறையில் தேசிய கருத்தரங்கம் வியாழக்கிழமை (06.04.2023)அன்று நடைபெற்றது. கல்லூரியின் வேதியியல் துறை தலைவர் திரு இரா . சிவகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு.தனபால் அவர்கள் தலைமை தாங்கினார். தன்னுடைய தலைமை உரையில், மாணவ மாணவியர்கள் வேதியல் கண்டுபிடிப்பில் நோபல் பரிசு போல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தல் வேண்டும். மண்ணுக்கும் மக்களுக்கும் பயன்படும் வகையில் இயற்கை உரங்களை பயன்படுத்துதல் வேண்டும். புதிய தனிமங்களை கண்டறிதல் வேண்டும் மேலும் சிந்தனைகளை வளர்க்க ஆய்வு மாணவ மாணவியர்கள் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று பேசினார். ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை தலைவி P. நீரஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தன்னுடைய சிறப்பு உரையில் , வேதியியல் படிப்பதன் மூலம் மத்திய மாநில மருத்துவத் துறை மற்றும் வேதியியல் ஆராய்ச்சி கூடங்களின் மூலம் நிறைய வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன அதனை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். தேசிய கருத்தரங்கில் கிருஷ்ணகிரி தர்மபுரி திருப்பத்தூர் வேலூர் மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வேதியியல் துறை ஆராய்ச்சி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கருத்தரங்கின் நிறைவாக கல்லூரியின் வேதியல் துறை உதவி பேராசிரியர் M.சந்தோஷ் குமார்அவர்கள் நன்றி கூற, விழா இனிதே நாட்டுப் பண்ணுடன் நிறைவு பெற்றது.