Home » நிவ்யஸ்ரீ குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய நிவாரணம் வழங்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை

நிவ்யஸ்ரீ குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய நிவாரணம் வழங்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை

by Admin
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகில் சினிகிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி நிவ்யஸ்ரீ கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி முடிந்தும் கெலமங்கலத்திலிருந்து இருந்து தருமபுரி நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்த நிவ்யஸ்ரீ அவரது கிராம நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ற போது தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அந்த மாணவிக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லா மல் மாணவி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும், இந்த தகவலை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலை. வர்கள் மாணவியின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். அத்துடன் விபத்தில் இறந்த நிவ்யஸ்ரீ குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தேவைக்கேற்ப பேருந்து வசதியில்லாத அந்தக் கிராமத்திற்கு போதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!