Home » பெரிய வியாழனையொட்டி கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், 12 சீடர்களூக்கு பாதம் கழுவும் சடங்கு நடைபெற்றது.  

பெரிய வியாழனையொட்டி கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், 12 சீடர்களூக்கு பாதம் கழுவும் சடங்கு நடைபெற்றது.  

by Poovizhi R
0 comment

பெரிய வியாழனையொட்டி கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், 12 சீடர்களூக்கு பாதம் கழுவும் சடங்கு நடைபெற்றது.       இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.————————————————–உலக மக்களின் நலனுக்காக சிலுவையில் இறக்க வேண்டிய நேரம் நெருங்குவதை உணர்ந்த இயேசு, தன்னுடைய 12 சீடர்களின் பாதங்களை கழுவி, பணிவை கற்றுக் கொடுத்தார். பின், அப்பத்தை பிட்டு தமது உடல் எனவும், திராட்சை இரசத்தை தமது இரத்தம் எனவும் கூறி பருக கொடுத்தார். மேலும், இதை தம் நினைவாக உலகம் முடியும் வரை செய்யவும் சீடர்களுக்கு பணித்தார்..இந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், ஆண்டு தோறும் உலகில் உள்ள  கிறிஸ்தவ மக்கள் பெரிய வியாழனாக கடைபிடித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, இன்று கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், பெரிய வியாழன் சிறப்பு  திருப்பலி, பாதம் கழுவும் சடங்குடன் நடைபெற்றது. பங்கு தந்தை இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த திருப்பலியில், 12 சீடர்களின் பாதங்களை கழுவும் சடங்குகள் செய்யப்பட்டன..இதனைத் தொடர்ந்து பெரிய வியாழன் ராபோஜனத்தை நினைவு கூறும் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு ஜெப வழிபாட்டில் ஈடுபட்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!