Home » இரத்ததானம் அளித்த தகடூர் புதுமைப்பெண் தீபா.

இரத்ததானம் அளித்த தகடூர் புதுமைப்பெண் தீபா.

by Poovizhi R
0 comment

*இரத்ததானம் அளித்த தகடூர் புதுமைப்பெண் தீபா*இரத்ததானம் என்பது நம்மால் பிறருக்கு அளிக்கக் கூடிய மறுவாழ்வு ஆகும். ஓர் உயிரைக் காப்பாற்ற இரத்ததானம் முக்கிய தேவையாக உள்ளது. தலசீமியா குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை அல்லது இருமுறை ரத்தம் ஏற்ற வேண்டும். கர்ப்பிணி பெண்கள், அறுவை சிகிச்சை செய்வோருக்கு இரத்த தேவை அதிகரித்து வருகிறது. ஆண்களே இரத்ததானம் செய்ய தயக்கம் காட்டும் இந்த சமூகத்தில், தன் இரத்தத்தால் குழந்தையை பெற்றெடுத்த பெண், மீண்டும் இரத்ததானம் கொடை அளித்து தாயின் பெருமையை பேணி காத்து வருகின்றனர். தருமபுரி அன்னை மாதம்மாள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு இரத்ததானம் கொடை அளித்துள்ளார் அரசு பள்ளி ஆசிரியை தீபா அவர்கள். மை தருமபுரி அமைப்பின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இரத்ததானம் அளிப்போம் பிறர் உயிரைக் காப்போம்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!