Home » புனித வெள்ளியையொட்டி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவ ஆலயங்களில் பெரிய சிலுவை பாதை நடைபெற்றது.

புனித வெள்ளியையொட்டி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவ ஆலயங்களில் பெரிய சிலுவை பாதை நடைபெற்றது.

by Poovizhi R
0 comment

புனித வெள்ளியையொட்டி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவ ஆலயங்களில் பெரிய சிலுவை பாதை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்பு.–இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, உலக மக்கள் யாவரையும் இரட்சிக்க வந்த இயேசு, யுத மன்னன் பிலாத்துவால் சிலுவை தீர்ப்பு கூறப்பட்டு, தலையில் முள் கிரீடம் அணிவித்து, கல்வாரி மலைக்கு சிலுவையுடன் இழுத்துச் செல்லப்பட்டு, சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்.இதனை நினைவு கூறும் வகையில், உலகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ மக்களும் இந்த நாளை புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில், புனித வெள்ளியையொட்டி பெரிய சிலுவைப்பாதை நடைபெற்றது.திருத்ததலத்தின் பங்குத்தந்தை அருட்திரு.இசையாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பெரிய சிலுவைப் பாதையின் போது, ஆலய வளாகத்தினை சுத்தி அமைக்கப் பட்டுள்ள 14சிலுவைப்பாதை ஸ்தலங்களின் முன்பாக, இயோசுநாதர் சிலுவையை சுமந்து சென்றதன் நினைவாக, கிறிஸ்தவர்கள் தங்களுடைய தோல்களில் பாரமான சிலுவையை சுமந்து, தங்களை வருந்திக் கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.இதே போல கந்திகுப்பம், சுண்டம்பட்டி,எலத்தகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி  என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பெரிய சிலுவைப்பாதை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!