Home » காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் போதை பொருட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் போதை பொருட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

by Poovizhi R
0 comment

காவேரிப்பட்டினத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் போதை பொருட்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் பவுன்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார் நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார் உதவி ஆய்வாளர் பேசும் போது போதை பொருட்களினால் தனி மனிதன் அவருடைய குடும்பம் மற்றும் நம்முடைய சமுதாயம் ஆகியவற்றுக்கு போதைப் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார் மேலும் மாணவர்கள் இந்த போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் நிகழ்ச்சியை முன்னிட்டு போதை பொருள் தடுப்பில் மாணவர்களின் பங்கு என்ற தலைப்பிலும் குற்றம் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது எப்படி என்ற தலைப்பிலும் கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன நிகழ்ச்சியில் காவலர்கள் அண்ணாதுரை ராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி முடிவில் தேசிய மாணவர் படை அலுவலர் கோபு நன்றி கூறினார்

You may also like

Leave a Comment

error: Content is protected !!