Home » தொழிற் பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) இல்லாத பஞ்சாயத்து யூனியன்களில் புதிய தொழிற் பயிற்சி நிலையம் (ஐடிஐ) துவக்க விண்ணப்பிக்கலாம்

தொழிற் பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) இல்லாத பஞ்சாயத்து யூனியன்களில் புதிய தொழிற் பயிற்சி நிலையம் (ஐடிஐ) துவக்க விண்ணப்பிக்கலாம்

by Poovizhi R
0 comment

தொழிற் பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) இல்லாத பஞ்சாயத்து யூனியன்களில் குறைந்த பட்சம் நான்கு தொழிற் பிரிவுகளுடன் புதிய தொழிற் பயிற்சி நிலையம் (ஐடிஐ) துவக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் மற்றும் உதவி இயக்குநர் சி.பன்னீர்செல்வம் அவர்கள் தகவல்.தொழிற் பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) இல்லாத பஞ்சாயத்து யூனியன்களில் குறைந்த பட்சம் நான்கு தொழிற் பிரிவுகளுடன் புதிய தொழிற் பயிற்சி நிலையம் (ஐடிஐ) தொடங்கிடவும், நான்கு தொழிற் பிரிவுகளுக்கும் குறைவாக நடைபெற்று கொண்டிருக்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள் புதிய தொழிற் பிரிவுகள் துவங்கிடவும் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்கிடவும், இடமாற்றம் செய்திடவும் 28.03.2023 முதல் 25.04.2023-ற்குள் www.nimionlineadmission.in/iti என்ற டி.ஜி.டி. இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே புதிய தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க விரும்புபவர்கள், ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிற்பயிற்சி நிலையங்களில் கூடுதல் அலகுகள் துவங்கிடவுள்ளவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், உதவி இயக்குநர் சி.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!