கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக கழக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவருமான திரு.எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க கழக உறுப்பினர்கள் சேர்க்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் வார்டு வாரியாக கழக உறுப்பினர் சேர்க்கை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கியிருந்த நிலையில் இன்று காலை சூளகிரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேரிகை, குருபரப்பள்ளி உள்ளிட்ட கிராம பகுதிகளில் நடைபெற்று வரும் கழக உறுப்பினர்கள் சேர்க்கையை அவர் நேரில் பார்வையிட்டார். அப்போது கிராம மக்கள், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் தங்களை கழகத்தில் உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர். அதனை தொடர்ந்து ஒசூர் வடக்கு, தெற்கு ஒன்றியங்களுக்குட்பட்ட சூடாபுரம், பாகலூர் மற்றும் தளி சட்டமன்ற தொகுதி நாகசந்திரம், தளி கொத்தனூர், பென்னங்கூர், ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பெரிய எலசகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் கழக உறுப்பினர் சேர்க்கையை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் பாபு வெங்கடாசலம், ரவிக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் மதன், எம்ஜிஆர் மன்றம் மாவட்ட இணை செயலாளர் ஜேபி @ ஜெயபிரகாஷ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், இலக்கிய அணி மாவட்ட செயலாளர் இளஞ்சூரியன், மாவட்ட நிர்வாகிகள் நாராயண ரெட்டி, ரமேஷ் ரெட்டி, ஒன்றிய குழு உறுப்பினர் முன் ரத்தினம் முனிராஜ், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் மற்றும் சார்பு அணி மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்,