கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் போச்சம்பள்ளி பகுதியில் உள்ள விளங்காமுடி ஊராட்சியில் செல்லம்பட்டியில் மாவட்ட ஊராட்சி நிதிக்குழுவிலிருந்து ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் செல்லம்பட்டி சுடுகாட்டிற்கு சிமெண்ட் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே. மதியழகன் எம் எல் ஏ கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட அமைத்தலைவர் நாகராஜ், தொழஅன்பரசன், ஒன்றிய கழக செயலாளர் சாந்தமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வித்தியாசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் சக்தி ராஜாராம், தலைமை செயற்குழு உறுப்பினர் கிருபாகரன்,மூத்த முன்னோடி பரமாத்மா, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், ஒன்றிய கவுன்சிலர் சுகுணா அம்மன் ராஜா, கிளை கழக செயலாளர் செந்தில்குமார் மற்றும் திப்பன், ஆர்.கார்த்திக், சங்கர், எஸ்.சிவன், கார்த்திக் உள்பட ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பாரூரில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது.