Home » தளி வட்டாரத்தில் தென்னையில் கருந்தலைப்புழுக்களை கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு.

தளி வட்டாரத்தில் தென்னையில் கருந்தலைப்புழுக்களை கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு.

by Poovizhi R
0 comment

தளி வட்டாரத்தில் தென்னையில் கருந்தலைப்புழுக்களை கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வுதளி வட்டாரத்தில் தென்னையை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அதிகாரிகளுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி நிலைய வல்லுநர்கள் கள ஆய்வு செய்தனர்.தென்னையை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் காணப்படும் தென்னை விவசாயிகளின் நிலங்களில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் முனைவர்.கோபாலகிருஷ்ணன் வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களான வேளாண்மை உதவி இயக்குநர் திரு.சி.முருகன், வேளாண்மை அலுவலர் திரு.சி.சுப்ரமணி, உதவி வேளாண்மை அலுவலர்களுடன் கூட்டாக தீவிர வயலாய்வு மற்றும் உழவர் அலுவலர் தொடர்பு கூட்டம் கோட்டமடுகு, தளிகொத்தனூர், கக்கதாசம் போன்ற கிராமங்களில் நடத்தப்பட்டது.இந்த கள ஆய்வில் தென்னையின் முக்கிய பூச்சிகளான கருந்தலைப்புழு, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, மற்றும் முக்கிய நோய்களின் சேத அறிகுறிகள் மற்றும் பூச்சிகளை காட்சிப்படுத்தப்பட்டது. முக்கிய தெழில்நுட்பங்களான மஞ்சள் அட்டை ஒட்டுதல், தண்ணீரை விசையோடு அடித்தல், ஒட்டுண்ணி, இரை விழுங்கி விடுதல், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள் பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டு காரணிகள் வழங்கப்படும் இடங்கள், அவற்றின் விலை பற்றி விவசாயிகளுக்கு கூறினர். மற்றும் ஒருங்கிணைந்த உரம், நோய் மேலாண்மை முறைகள் மற்றும் நவீன சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு கூறினர். கள ஆய்வில் தென்னையை தாக்கும் பூச்சி மற்றும் நோய்கள் தொடர்பான துண்டு பிரசுரங்கள், விவசாயிகள் கையேடு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விவசாயிகள் தென்னை சாகுபடி குறித்து சந்தேகங்களை கேட்டறிந்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!