Home » பூச்சி நோய் தாக்குதல் கட்டுப் படுத்த கோடை உழவு செய்வீர் !! பர்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுரை !!!

பூச்சி நோய் தாக்குதல் கட்டுப் படுத்த கோடை உழவு செய்வீர் !! பர்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுரை !!!

by Poovizhi R
0 comment

கோடை உழவும் அதன் அவசியமும்:தற்போது பாகூர் வட்டாரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மழையை அனைத்து விவசாயிகளும் தவறாது கோடை உழவு செய்ய பயன்படுத்திக் கொள்ளுமாறும் கோடை உழவு ஏன் செய்ய வேண்டும் என்பது குறித்தும் பர்கூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி.மு.சிவசங்கரி கூறியதாவது.கோடை உழவு எதற்காக? :* கோடை உழவு செய்வதனால் மண்ணின் அடியில் உள்ள பயிர்களை உண்ணும் மற்றும் பல நோய்களை கடத்தும் பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள், கூட்டுப்புழுக்கள் ஆகியவை வெளியே கொண்டு வரப்பட்டு சூரிய ஒளி மற்றும் வெப்பம் காரணமாக கொல்லப்படும். மேலும் மண்ணிலிருந்து வெளி வரும் சிறு பூச்சிகள். கூட்டுப்புழுக்கள் போன்றவற்றை பறவைகள் கொத்தி தின்று அவைகளை அழித்து விடுவதால் அடுத்து சாகுபடி செய்யும் பயிரில் பூச்சி நோய் தாக்குதல் இயற்கையான முறையிலேயே கட்டுப் படுத்த ஏதுவாகின்றது.மண்ணின் இறுக்கம் குறைந்து மழை நீர் எளிதில் ஊடுருவி மண்ணில் நைட்ரஜன் சத்து இயற்கையாக நிலை நிறுத்தப் படுகின்றது.மழை நீர் மண்ணில் சேமிக்கப்படுவதால் மண்ணில் ஈரப் பதம் தக்க வைக்கப்படுகிறது. மண் அரிமானம் தடுக்கப்படுகிறது.மண்ணில் உள்ள களைகளின் விதைகள் முளைத்து செடிகளாக வளர்கின்றது. மறு உழவு செய்யும்போது களை செடிகள் மடக்கி உழப்பட்டு மீண்டும் களைகள் வளராமல் தடுக்கப் படுவதால் களை மேலாண்மைக்கான செலவு மற்றும் நேரம் சேமிக்கப்படுகின்றது. களை செடிகள் இயற்கை எருவாக்கப்படுகின்றது.• நன்கு ஆழமாக உழவு செய்யும்போது கீழ் மண மேலாகவும், மேல் மண் கீழாகவும் மாறும் போது மண்ணில் உள்ள சத்துக்கள் சீராக விரவுவதால் சத்துப் பற்றாக்குறை பிரச்சினை குறைய வழி ஏற்படுகின்றது.கோடை உழவு செய்த பின் மண் மாதிரி எடுத்து ஆய்விற்கு அனுப்பும் போது ஆய்வு முடிவுகள் மிகவும் சரியாக இருக்கும். மண் வளம் மற்றும் சத்து மேலாண்மை எளிதாகும்.கோடை உழவு செய்யும் போது மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால் வேர்கள் எளிதில் வளர்வதுடன் சத்துக்கள் எளிதாக பயிருக்கு கிடைப்பதால் நல்ல வளர்ச்சி கிடைக்கின்றது. எனவே, அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!