காதலனை பிரிந்த விரக்தியில் காதலி தூக்குபோட்டு தற்கொலை .தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் வீட்டார் சாலை மறியல் .தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே முனுசாமிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவன் இவருக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.மூன்றாவது மகள் நதியா (வயது.19), பென்னாகரம் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் இரண்டாமாண்டு படித்து வந்தார்.கடந்த ஏப்ரல் 29ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை இது குறித்து தந்தை மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்,அடுத்த நாள் ஏப்ரல் 30ம் தேதி நதியாவும் அதே கல்லூரியில் படிக்கும்5வது மைல்கல் கிராமத்தை சேர்ந்த விஜய்அரசு ( வயது. 20) இருவரும் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் ஆஜராகி இருவரும் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறினர்.இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் இருவரும் படிப்பு முடியாததால் படித்து முடித்ததும் தாங்களே திருமணம் செய்து வைப்பதாக கூறினர்.இதனை ஏற்று காதலர்கள் இருவரும் பெற்றோருடன் சென்றனர்.கடந்த சில நாட்களாக காதலனை பிரிந்த சோகத்தில் இருந்த நதியா நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள உத்தரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் நேற்று காதலன் வீட்டார் காதலியின் வீட்டின் முன்பு குவிந்தனர்.காதலியை கட்டாயப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாகவும், காதலியின் தாய் மற்றும் தந்தையை கைது செய்ய வேண்டும் என கூச்சலிட்டவர்கள் திடிரென பெல்ரம்பட்டி – பாலக்கோடு சாலையில் ஆத்துக் கொட்டாய் பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்க்கு வந்த பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இதனால் சுமார் 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்மபுரி
வனத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்ககூடிய தொங்கும் மின்வேலி முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பேவுஅள்ளி ஊராட்சி, ஈச்சம்பள்ளத்தில் வனத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்ககூடிய தொங்கும் மின்வேலி முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பேவுஅள்ளி ஊராட்சி, ஈச்சம்பள்ளத்தில் வனத்துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்ககூடிய தொங்கும் மின்வேலி முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (27.05.2023 பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம். பேவுஅள்ளி ஊராட்சி ஈச்சம்பள்ளத்தில் கடந்த 2022 அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை 6 மாதங்களாக யானைகள் காப்பு காட்டில் இருந்து வெளியே வந்து விவசாயிகளின் பயிர்களை சேதம் செய்வதால் சட்டமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ரூ.16.00 இலட்சம் மதிப்பீட்டில் 2.5 கி.மீ சுற்றளவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளியில் இயங்ககூடிய தொங்கும் மின்வேலி முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.இந்த ஆய்வின் போது தருமபுரி வன அலுவலர் திரு.கே.வி.அப்பல்ல நாயுடு. இ.வ.ப., வன சரக அலுவலர் திரு.நடராஜன், பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சுருளிநாதன். ஊராட்சி மன்ற தலைவர் திரு.பிரகாஷ் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
காரிமங்கலம் கிழக்கு ஒன்றியத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி! முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தொடங்கி வைத்தார்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் கிழக்கு ஒன்றியம் அடிலம் பஞ்சாயத்து சென்னம்பட்டி கிராமத்தில் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நடந்தது. கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் வரவேற்றார். அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் மணி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், வக்கீல் கோபால், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாரியப்பன், இளைஞரணி மகேஷ் குமார் உட்பட பலன் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமை வகித்து கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் சண்முகம், மாவட்ட மகளிர் தொண்டரணிஅமைப்பாளர் ஜெயா, விவசாய அணி ஜலபதி, நிர்வாகிகள் செந்தில் குமார், ஐயப்பன், நகர இளைஞரணி அருள், கிரிக்கெட் போட்டி அமைப்பாளர் ஹரிகரன், ஐ டி விங் ஆதம், மௌலி உட்பட பல கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டிஅள்ளியில் பயணியர் நிழற்கூடம் அமைக்க பணிக்கு தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பூமி பூஜை
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி மாவட்ட தொழில் மையம் அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்ட நிதியில் ரூபாய் 5.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. நிழற்கூடம் அமைக்கும் பணியை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஒ.கே. சுப்ரமணியம், ஒன்றிய செயலாளர்கள் ஒ.கே.கிருஷ்ணமூர்த்தி, பெ.சக்தி, ஒன்றிய கவுன்சிலர் சோனியாகாந்திவெங்கடேசன், பசுமை தாயக பொறுப்பாளர் சரவணன், முனுசாமி, துரை, கண்ணதாசன், சிவக்குமார், சிவச்சந்திரன், செல்வம், பெரியசாமி, சரவணன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்
தருமபுரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தருமபுரி மற்றும் மொரப்பூர் ஒன்றியங்களில் புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்
தருமபுரி மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தருமபுரி மற்றும் மொரப்பூர் ஒன்றியங்களில் புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டது இந்த நிகழ்வு தருமபுரி பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் திரு. A.பாஸ்கர் Ex.MLA தலைமையில் நடைபெற்றது திரு. ராஜசேகர் (மொரப்பூர் ஒன்றிய தலைவர் ),திரு. ராஜ்குமார் ,திரு. சபரேசன்,(மொரப்பூர் ஒன்றிய துணைத் தலைவர்கள்),, திருமதி. அஜந்தா (மொரப்பூர் ஒன்றிய செயலாளர் ) ,பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஆகியோர்களுக்கு புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டது தருமபுரி மாவட்ட கிழக்கு தலைவர் திரு. களிர்கண்ணன் மொரப்பூர் கிழக்கு ஒன்றிய தலைவர் திரு. பிரபு ஆகியோர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாலக்கோட்டில் பேருந்து நிலைய சீரமைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல்.தினறும் காவல்துறை.
பாலக்கோட்டில் பேருந்து நிலைய சீரமைப் பணிகளால் போக்குவரத்து நெரிசல். தினறும் காவல்துறை தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள் என 200க்கும் மேற்பட்ட பேருந்துகளும் மற்றும் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் என எப்போதும் பரபரப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது புறநகர் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால், பேருந்துகள் அனைத்தும் நகர பேருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மேலும் ஓசூர், மாரண்டஹள்ளி, அஞ்செட்டி, பெங்களூர், சென்னை மற்றும் தருமபுரி, சேலம், கோவை, பழனி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் நகர நெடுஞ்சாலையில் இருபுறமும் ஒன்றின் பின் ஒன்றாக நிறுத்தப்படுவதாலும் பேருந்து நிலையம் முன்பு சாலையோர நடைபாதை கடைகள்,வணிக கடைகள் முன்பு பந்தல் அமைத்தும், சாலையை ஆக்கிரமித்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சாலையில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. மேலும் பள்ளிகள் திறக்க இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில் பள்ளி வாகனங்கள் உள்ளிட்டவை வரும்போது மேலும் கூட்ட நெரிச்சல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை தினறி வருகிறது.எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற போக்குவரத்து நெரிசலை ஒழுங்குப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாலக்கோடு தாலுகா ஆபிசில் நடைபெற்ற ஜமாபந்தி 285 மனுக்கள் பெறப்பட்டு,அதில் 70 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பாலக்கோடு தாலுகா ஆபிசில் நடைப்பெற்ற ஜமாபந்தி 285 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 70 பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வருவாய் கோட்டத்திற்க்கு உட்பட்ட புலிகரை, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிசந்தை ஆகிய பிர்காவிற்க்கு உட்பட்ட 42 வருவாய் கிராமங்களுகான ஜமாபந்தி நிகழ்ச்சி 4 நாட்களாக நடைப்பெற்று வந்தன,இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நஜ்ரி இக்பால் தலைமை வகித்து பொது மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்றுக் கொண்டார்.இதில் 285 மனுக்கள் பெறப்பட்டு 70 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.நில உரிமை சம்மந்தமான 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.கடைசி நாளான இன்று தாலுக்கா அலுவலக கூட்ட அரங்கில் தாசில்தார் ராஜா தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், சப் கலெக்டர் நஜீரிஇக்பால் கலந்துகொண்டு 70 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், பட்டா திருத்தம், இலவசவீட்டுமனைபட்டா ஆகியவற்றை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஓ.ஏ.பி. தாசில்தார் ரேவதி, வட்ட வழங்கல்அலுவலர்பழனி, துணை தாசில்தார்கள் சிவக்குமார், சத்யபிரியா, வருவாய் ஆய்வாளர்கள் ரவி, வி.ஏ.ஓக்கள் சாம்ராஜ், மாதப்பன், மாதேஷ், சத்யா, முருகேசன், குமரன், வருவாய் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அவர்
கோவிட்-19 பரவலால் வேலையிழந்து நாடு திரும்பியவருக்கு 25% மானியத்துடன்தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.
கோவிட்-19 பரவலால் வேலையிழந்து நாடு திரும்பியவருக்கு 25% மானியத்துடன்தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்படுகிறது.மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தகவல் .இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப அவர்கள் தெரிவித்துள்ளதாவது.கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர் தமிழர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு “புலம்பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்” (MEGP) என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம். அவர்கள் கோவிட்-19 பெருந்தொற்று பரவலினால் 01.01.2020 அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் தமிழ்நாடு திரும்பி இருக்க வேண்டும். குறைந்தது 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 18 க்கு மேலாகவும் 55 க்கு மிகாமலும் இருக்க வேண்டும். வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்ச திட்ட மதிப்பீடு ரூ.5.00 இலட்சம் ஆகவும் உற்பத்தி தொழில் திட்டங்களுக்கு ரூ.15.00 இலட்சம் திட்ட மதிப்பீடாக இருக்க வேண்டும். பயனாளர் தம் பங்காக பொது பிரிவு பயனாளர்கள் எனில் திட்ட தொகையில் 10% மற்றும் பெண்கள். இடஒதுக்கீட்டு பிரிவினர் உள்ளட்ட சிறப்பு பிரிவினர் எனில் 5% செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக் கடனாக வழங்கப்படும்.அரசு, திட்டத் தொகையில் 25% அதிகபட்சம் ரூ.2.5 இலட்சம் என வழங்கும் மானியம் 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு பின்னர் கடனுக்கு சரிகட்டப்படும். கடன் வழங்கப்பட்ட 6 மாதங்கள் கழித்து 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்தப்பட வேண்டும்.இத்திட்டம், மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற www.msmoonline.tn.gov.in/meqpஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் விண்ணப்பத்தினை இரு நகல்களாக சமர்பிக்க வேண்டும்.எனவே, இந்த வாய்ப்பினை வெளிநாடுகளிலிருந்து கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் வேலையிழந்து நாடு திரும்பிய தருமபுரிமாவட்டத்தைச் சேர்ந்த தகுதியும், தொழில் துவங்க ஆர்வமும் கொண்டோர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், SIDCO தொழிற்பேட்டை ஓட்டப்பட்டி, தருமபுரி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 8925533940, 8925533941 மற்றும் 8925533942 ஆகியஎண்களுக்கு தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தெரிவித்துள்ளார்.
தாட்கோ மூலம் எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.தருமபுரிமாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தாட்கோ மூலம் எச்.சி.எல் நிறுவனத்தில் வேலை வாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்பிற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப, அவர்கள் தகவல்இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப. அவர்கள் தெரிவித்துள்ளதாவது.தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ)நிறுவனமானது HCL நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு HCL Technologies-ல்வேலைவாய்ப்புடன் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புகழ்வாய்ந்த பிட்ஸ்பிலானிகல்லூரியில் B.Sc (Computing Desigining) பட்டப்படிப்பு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ளசாஸ்தரா பல்கலைகழகத்தில் BCA பட்டப்படிப்பு, அமிட்டி பல்கலைகழகத்தில்BCA/BBA/B.Com மற்றும் நாக்பூரிலுள்ள ஐஐஎம் பல்கலைகழகத்தில் IntegratedManagerment பட்டப்படிப்பு சேர்ந்து படித்திடவும், வாய்ப்பும் பெற்று தரப்படும்.இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். பன்னிரெண்டாம் வகுப்பில் 2022 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 60 சதவீதம் மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முடித்தவர்கள் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். எச்.சி.எல் மூலம் நடத்தப்படும் Entrance Examination தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் வழங்கப்படும் இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.இத்திட்டத்தில் வருடாந்திர ஊதியமாக ரூ.1.70,000/- முதல் ரூ.2.20.000/- வரை பெறலாம். மேலும் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். மேற்கண்ட திட்த்தில் சேர தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம். எண்-3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று (26.05.2023) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையேற்று. பேசும்போது தெரிவித்ததாவது:-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளின்பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகின்றார்கள். வேளாண் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற அனைத்துத் திட்டங்களையும் வேளாண் பெருமக்களுக்கு முழுமையாக கொண்டு சேர்த்திட மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் மே-2023 திங்கள் வரையிலான காலத்திற்கான இயல்பான மழையளவு 156.9மி.மீ ஆகும். தற்பொழுது வரை இந்த ஆண்டு 168.43 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையில் 2023-2024 ஆம் ஆண்டிற்கு 1.72,270 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வேளாண் பயிர்களின் உற்பத்தியை பெருக்கும் பொருட்டு இந்த 2023- 2024 ஆம் ஆண்டிற்கு 947.2 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மே-2023 திங்கள் வரை 21.40 மெட்ரிக் டன் நெல், சிறுதானியங்கள். பயறு வகைகள் எண்ணெய் வித்துக்கள், மற்றும் பருத்தி சான்று விதைகள் உள்ளிட்டவை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நெல், சிறுதானியங்கள். பயறு வகைகள். எண்ணெய் வித்துக்கள், மற்றும் பருத்தி உள்ளிட்ட விதைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.தருமபுரி மாவட்டத்திற்கு வருடாந்திர உரத்தேவை 62484 மெட்ரிக் டன் என கணக்கிடப்பட்டுள்ளது. 14,461 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, பொட்டாஷ். காம்ப்ளக்ஸ், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மேலும் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் போன்ற உயிர் உரங்கள் 2023-2024 ஆம் ஆண்டிற்கு 30.000 எண்ணிக்கைகள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், GLD-2023 திங்கள் வரை 713 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. 22,450 எண்ணிக்கையிலான உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. உயிர் உரங்கள் தேவையான அளவு இருப்பு உள்ளன. விவசாயிகள் தங்களுக்கு தேவையானவற்றை பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம்.தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல்-2023 திங்களில் நெல், எண்ணெய் வித்துக்கள், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் பயிரிட்ட 2240 விவசாயிகளுக்கு ரூ.18.49 கோடி பயிர்கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் தருமபுரி மாவட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்கூட்டத்தில் விவசாய மின்இணைப்பு, ஆவின் பாலுக்கான பணப்பட்டுவாடா. பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வேளாண்மைத் துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும்விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தியையும்,வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறையின் அனைத்துநிலை அலுவலர்களும் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்டஉதவிகளும் கிடைக்கப்பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்திஇஆப, அவர்கள் தெரிவித்தார்கள்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்/ அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் திருமதி.பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு.சு.இராமதாஸ், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.க.விஜயா. கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் திரு.மாது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் திருமதி.கே.மாலினி உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.