தருமபுரி மாவட்டம் ஜக்குப்பட்டி அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்தில் உள்ள கிராம மக்களில் காவல் தெய்வமாக வழிப்பட்டு வந்த ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மனுக்கு புதிய கோயில் கட்டுவதற்க்கு 18 பானை கவுண்டர்கள் சார்பில் முடிவு செய்து கடந்த சில மாதங்களாக ஆகமவிதிப்படி புதிய கோயில்கட்டும் பணி நடைபெற்று வந்தது. இதன்பின்னர் கோயில் கட்டும் பணி முடிவுற்ற பிறகு கோயில் குடமுழுக்கு விழா ஏற்பாடு நடந்தது. அதனையொட்டி கடந்த 30 ம் தேதி வினாயகர் பூஜை, கோ பூஜையை தொடர்ந்து பக்கதர்களுக்கு கங்கனம் கட்டுதல் வீடுகளில் முலைபாலிகை இடுதல் நிகழ்ச்சியை தொடந்து 3 ம் தேதி புதிய சுவாமிசிலைகள் கரிகோலக ஊர்வலம் மற்றும் தீப்பாஞ்சி அம்மன் மூலவர் விக்கிரஹகங்கள் யாகசாலைகளுக்கு கொண்டுவந்து அங்கு திருமுறை பாராயணம், வேத பாராயணம் செய்யப்பட்டு முதல்கால யாகசாலை தொடங்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு யாகசாலை பூஜைகள் தீர்த்தகுடம் ஊர்லம். முலைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை நான்கு கால பூஜைக்கு பின்னர் யாகசாலையில் வைத்திருந்த புனித நீரை சிவாச்சாரியர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் தலை மீது கொண்டு சென்று கோயில் கலசத்திற்கு ஊற்றி குடமுழுக்கு செய்தனர். பின்னர் அந்தபுனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தீப்பாஞ்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் 18 பானை கவுண்டர்கள் உள்பட ஏராளமான பக்த்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா குழுவினர் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Uncategorized
கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி, மற்றும் பொது வார்டு, நோயாளிகள் வருகை பதிவேடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப. அவர்கள் (24.3.2023) அன்று மாலை 7- மணிக்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மருத்துவ கல்லுாரி முதல்வர் மரு. ராஜஸ்ரீ, மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.
பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி திடீர் ஆய்வு.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர்,பேவர் பிளாக் கல் பதிக்கும் திட்ட பணிகள் 5 கோடி ரூபாயில் நடைப்பெற்று வருகிறது.
இப்பணிகளுக்காக நெடுஞ்சாலை, தெருசாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாகி இரு சக்கர வாகனம் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளது.
இப்பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
மேலும் பஸ் நிலையத்தில் உள்ள பொதுக்கழிப்பிடம், ஆடு அடிக்கும் தொட்டி ஆகியவற்றை பொது ஏலம் விடுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அதனை தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி பாலக்கோடு பேரூராட்சியில் தீடீர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
மேலும் பாலக்கோடு பேரூராட்சிக்கு சிறுவர் பூங்கா அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குருராஜன், பேரூராட்சி தலைவர் முரளி, செயல் அலுவலர் டார்த்தி, கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கிருஷ்ணகிரி மயிலாடும்பாறை தொல்லியல் ஆய்வில் கி.மு 2172 சார்ந்த இரும்பு பொருட்கள் கண்டெடுப்பு ‘ டாக்டர்.அன்புமணி ராமதாஸ் பெருமிதம் ‘
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையில் தொல்லியல் ஆய்வில் கிடைத்த இரும்பு பொருட்களை காலக்கணக்கீட்டுக்கு உட்படுத்தியதில் அவை கிமு 2172 ஆண்டை சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது. அதன் மூலம் தமிழர்கள் 4200 ஆண்டுகளுக்கு முன் இரும்பை பயன்படுத்தியது உறுதியாகியுள்ளது!நாகரிகம் பெற்ற சமுதாயத்தால் தான் இரும்பை பயன்படுத்துவது குறித்து சிந்திக்க முடியும். 4200 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் இரும்பை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றால் அதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே தமிழர் நாகரிகம் தோன்றியிருக்கக் கூடும் என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது!தமிழர் நாகரிகம் இன்னும் தொன்மையானதாக இருக்கலாம். அதை ஆய்வுகள் தான் உறுதி செய்யும். தொல்லியல் ஆய்வுகளை விரிவாக்கவும், ஏற்கனவே நடந்த ஆய்வுகளின் முடிவுகளை விரைந்து வெளியிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசின் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்
ஊத்தங்கரை ஒன்றிய மல்லிப்பட்டி கிராமத்தில் பாமக கொடியை மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஏற்றினார்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி ஊத்தங்கரை கிழக்கு ஒன்றிய மல்லிப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் த. ஆறுமுகம் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார். உடன் சேகர் ஒன்றிய செயலாளர். சின்ன கண்ணு குமார் ராஜாமணி மூர்த்தி மற்ற நிர்வாகிகளும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்..
நிவ்யஸ்ரீ குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய நிவாரணம் வழங்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகில் சினிகிரிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி நிவ்யஸ்ரீ கெலமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி முடிந்தும் கெலமங்கலத்திலிருந்து இருந்து தருமபுரி நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்த நிவ்யஸ்ரீ அவரது கிராம நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ற போது தவறி கீழே விழுந்துள்ளார். இதில், அந்த மாணவிக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லா மல் மாணவி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும், இந்த தகவலை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலை. வர்கள் மாணவியின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். அத்துடன் விபத்தில் இறந்த நிவ்யஸ்ரீ குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் ரூபாய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தேவைக்கேற்ப பேருந்து வசதியில்லாத அந்தக் கிராமத்திற்கு போதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பொதுமக்களுக்கு மக்களுக்கு முக கவசம் கொடுத்து விழிப்புணர்வு.
கிருஷ்ணகிரி ஐந்து ரோடு பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பொதுமக்களுக்கு மக்களுக்கு முக கவசம் கொடுத்தனர். பூ வியாபாரிகள் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மற்றும் புத்தக விற்பனை கடை நேரடியாகச் சென்று கவசம் கொடுத்து அதன் அதனுடைய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் தற்போது நோய் தொற்று அதிகமாக பரவி வருகிறது மோகன் கவசம் கட்டாயம் அணிய வேண்டும் ஒரு முக கவசம் விலை ரூபாய் இரண்டு அணிய மறுத்த அபராதம் 200 அதையும் எதையும் கண்டுக்காமல் சென்றால் மருத்துவ செலவு இரண்டு லட்ச ரூபாய் ஆகும் எனவும் காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூறி முக கவசம் கொடுத்தார் இந்நிகழ்வில் தாலுகா காவல் ஆய்வாளர் சரவணன் கிருஷ்ணகிரி டிஎஸ்பி விஜயராகவன் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் ஏடிஎஸ்பி ராஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர் தமிழக அரசு அறிவித்த அனைத்து வழிமுறைகளும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் எனவும் காவல்துறைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் பொதுமக்களும் காவல் துறையினரும் இணைந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் எடுத்துரைத்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் அவர்கள் தலைமையில் புதிதாக உறுப்பினர் சேர்கை முகாம் நடைப்பெற்றது. உடன் மாநகர பொறுப்பாளர்,எஸ் ஏ சத்தியா. தளி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, மற்றும் நகர செயலாளர் DR சீனிவாசன்.வெங்கடேஷ், மற்றும் கழகமுக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
சசிகலாவின் வருகை அதிமுக விற்கு பலம் என கொங்குநாடு மக்கள் தேசம் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி
சசிகலாவின் வருகை அதிமுக விற்கு பலம் என கொ ம தே கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேச்சு.
ஊத்தங்கரை, நவ.8: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமந்தீர்த்தம் கிராமத்தில் கொ.ம.தே. கட்சி நிர்வாகி இல்லத்திருமண விழாவிற்க்கு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வருகை புரிந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது.
தற்போது திமுக தலைமையில் அமைந்திருக்கும் தமிழக அரசு செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளதாகவும்.
தற்பொழுது தொடர் மழையின் காரணமாக சென்னை மட்டுமல்லாமல், பல்வேறு மாவட்டங்களில், மழையால் சேதம் ஏற்பட்ட பகுதிகளில்,முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளை வேகமாக சீரமைத்து வருகின்றனர்.
இதற்கு மேலும் ஒரு உதாரணமாக கொங்கு அறக்கட்டளை சார்பில் திருப்பூர் அருகே தீரன்சின்னமலை மகளிர் கலைக் கல்லூரி அமைக்க வேண்டி, தமிழக அரசிடம் கடந்த 6 ஆண்டுகளாக, கொங்கு அறக்கட்டளையினர் அனுமதி பெற போராடினர், ஆனால் கடந்த அதிமுக அரசு அனுமதி தரவில்லை, தற்போது உள்ள தமிழக அரசு விண்ணப்பித்த ஒரு வார காலத்திலேயே தீரன் சின்னமலை மகளிர் கலைக்கல்லூரி அமைக்க அனுமதி கொடுத்துள்ளதை, நாங்கள் வரவேற்கிறோம்.
தமிழகத்தில் கடந்த முறை ஆட்சிப் பொறுப்பிலும், தற்போது ஒரு எதிர்க்கட்சியாக இருந்து வருகிற அதிமுக அரசுக்கு, சசிகலா வருகை பலம் என கூறினார். எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆகியோர் கோஷ்டி பூசல் இல்லாமல், அனைவரும் ஒன்றிணைந்து, ஆரோக்கியமான அரசியல் ஈடுபட வேண்டும் எனக் கூறினார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிடப்பில் உள்ள பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நிகழ்ச்சியில் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் வஜிரவேல், விவசாய அணி மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் வரதராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நகர செயலாளர் கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.